Cyclone Murasu: அதி தீவிர புயலாக கரையக் கடந்த முரசு புயல்.. 120 கிமீ வேகத்தில் வீசிய காற்று.. ஆந்திராவில் பலத்த மழை
சென்னை: வங்கக் கடலில் உருவான முரசு புயல் அதி தீவிர புயலாக கரையை கடந்தது. ஆந்திராவின் நெல்லூர் - நரசாப்பூர் இடையே, ஓங்கோலுக்கு தெற்கே முரசு புயல் கரையை கடந்தது. கரையை கடக்கும் போது 120 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசியது. காற்றுடன் கனமழையும் கொட்டியது. தமிழகத்தின் வட மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்தது.
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் நிகோபார் தீவுகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது கடந்த 31 ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் (Deep Depression), நவம்பர் 1 ஆம் தேதி முரசு புயலாகவும் வலுப்பெற்றது. இது மேலும் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து மத்தியமேற்கு வங்ககடல் பகுதிகளில் தீவிர புயலாக மாறியது.

தொடர்ந்து இந்த புயல் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திரப் பிரதேச கடலோரப் பகுதிகளுக்கு அருகில் நெல்லூர் மற்றும் நரசாப்பூர் இடையே ஓங்கோல் அருகே நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலைக்குள் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறி இருந்தது. அதன்படி நேற்று நள்ளிரவு 1 மணியளவில் முரசு புயலின் முன்பகுதி கரையை கடக்க ஆரம்பித்தது.
இதனால் 90 முதல் 110 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசியது. முதலில் இந்த புயல் வலுவிழந்து கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதி தீவிர புயலாகவே கரையை கடக்க ஆரம்பித்தது. இன்று அதிகாலையில் முரசு புயலானது அதி தீவிர புயலாக கரையை கடந்தது. ந்திராவின் நெல்லூர் - நரசாப்பூர் இடையே, ஓங்கோலுக்கு தெற்கே முரசு புயல் கரையை கடந்தது. கரையை கடக்கும் போது பலத்த காற்றுடன் கனமழையும் கொட்டியது.
சுமார் 120 கிமீ வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசியது. அதிகாலை 4 மணியளவில் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்று தாமதமாக காலை 6 மணியளவில் முழுவதுமாக கரையை கடந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ஆந்திரா மட்டுமின்றி வடதமிழகத்தின் பல மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது.



Click it and Unblock the Notifications
