சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புதிய புயல்.. 72 மணி நேரத்தில் உருவாகிறது 'யாஷ் புயல்'.. அதுவும் வங்கக்கடலில்! வானிலை மையம்

Google Oneindia Tamil News

சென்னை: கேரளா தொடங்கி குஜராத் வரை டவ் தேவ் புயல் அடித்து வெளுத்தது. நேற்று தான் புயல் கரையை கடந்தது. இந்நிலையில் வங்ககடலில் வரும் மே 22ம் தேதி முதல் 25ம் தேதிக்கு தீவிரமான யாஷ் புயல் உருவாக உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது,.

கொரோனாவின் கோரப்பிடியில் மொத்த இந்தியாவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் அண்மையில் டவ் தேவ் புயல் அரபிக்கடலில் உருவாகியது. இந்த புயல் காரணமாக கேரளாவில் தொடங்கி குஜராத் வரை கனமழை பெய்தது. குறிப்பாக குஜராத் மற்றும மகாராஷ்டிராவில் மிகமிக அதிக கனமழை பெய்தது. இந்த புயல் நேறறு தான் கரையை கடந்து சென்றது.

 பாலூட்டும் தாய்மார்கள், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள்... எப்போது தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்? பாலூட்டும் தாய்மார்கள், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள்... எப்போது தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்?

டவ் தேவ் புயல் கரையை கடந்து ஒரு நாள் கூட ஆகவில்லை, அடுத்த 72 மணி நேரத்தில் இன்னொரு புயல் (யாஷ் புயல்) உருவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எப்போது வரும்

எப்போது வரும்


யாஷ் புயல் மே 22 ஆம் தேதி வங்க விரிகுடாவில் உருவாக வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் 25ம் தீவிரமாகி, மே 26 மாலை வடமேற்கு நோக்கி நகர்ந்து மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா கடற்கரைகளை அடைய வாய்ப்புள்ளது என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

சாதகமான சூழல்

சாதகமான சூழல்

இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வளிமண்டல மற்றும் கடல் நிலைமைகள், வெப்பச்சலனத்திற்கு உகந்த சூழல் மற்றும் கடல் மேற்பப்பின் வெப்பநிலை வெப்பநிலை போன்றவை காரணமாக அந்தமான் கடல் மற்றும் கிழக்கு-மத்திய மற்றும் தென்கிழக்கு வங்காள விரிகுடாவின் அருகிலுள்ள பகுதிகளில் மே 22ம் தேதி முதல் மேகமூட்டத்திற்கு சாதகமான சூழல் உருவாகிறது.

 புதிய புயல்

புதிய புயல்

இதனால் குறைந்த அழுத்த பகுதியாகி வடக்கு அந்தமான் கடல் மற்றும் அருகிலுள்ள கிழக்கு-மத்திய வங்காள விரிகுடா ஆகியவற்றில் உருவாகிறது

. அடுத்தடுத்த 72 மணி நேரத்தில் படிப்படியாக புயலாக தீவிரமடைந்து வடமேற்கு நோக்கி நகரும்.

கனமழை பெய்யும்

கனமழை பெய்யும்

மே 26ம் தேதி மாலையில் யாஷ் புயல் மேற்கு வங்கம்-ஒடிசா இடயே கரையை கடக்கும். இந்த புயல் காரணமாக அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் ஓரிரு இடங்களில் கனமான மற்றும் மிக அதிக மழை பெரும்பாலான இடங்களில் இருக்கும். மே 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் ஒடிசா, மேற்கு வங்கம், மேகாலயா வரை மிதமானது முதல் கனமழை வரை பல இடங்களில் இருக்கும். மே 25 ம் தேதி ஒடிசா - மேற்கு வங்கம், அஸ்ஸாம் மற்றும் மேகாலயா உள்ளிட்ட பகுதிகளில் மிக தீவிரமான கனமழை பெய்யும்.

புயல் காற்று வீசு.ம

புயல் காற்று வீசு.ம

யாஷ் புயல் காரணமாக மே 23 வரை அந்தமான் கடல் மற்றும் அதன் கிழக்கு மைய வங்காள விரிகுடாவில் 45-55 கிமீ வேகத்தில் காற்று வீசும். மே 23 முதல் 50-60 கிமீ வேகத்திலும் பின்னர் 70 கிமீ வேகத்திலும் புயல் காற்று வீசும். மே 24 மற்றும் 26 ஆம் தேதிகளில் மத்திய வங்க விரிகுடாவின் முக்கிய பகுதிகள் மற்றும் வடக்கு வங்க விரிகுடாவிலும், ஒடிசா - மேற்கு வங்கம்-வங்கதேச கடற்கரையிலும் மே 25 முதல் 27 வரை பலத்த புயல் காற்று வீசும்" என்று வானிலை மையம் அறிவித்தள்ளது.

English summary
Cyclone Yaas is very likely to intensify gradually into a cyclonic storm during the subsequent 72 hours and move northwestwards and reach the West Bengal-Odisha coasts around May 26 evening.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X