வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு.. பொதுமக்கள் அதிர்ச்சி.. என்ன விலை தெரியுமா?
டெல்லி: இந்தியாவில் 14.2 எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் வணிக பயன்பாடு, வீட்டு உபயோகம் என இரு வகையான சிலிண்டர்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டர் வீட்டு உபயோகத்திற்கும், 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் வணிக பயன்பாட்டுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல் ஒவ்வொரு மாதமும், சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றம் செய்து வருகின்றன.

சிலிண்டர் விலை மாற்றம்
அண்மைக் காலமாக வணிகம் மற்றும் வீட்டு உபயோக சிலிண்டர்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தன. இதனால் இல்லத்தரசிகள் மற்றும் வணிக நிறுவனங்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப சமையல் கேஸ் சிலிண்டர் மற்றும் விமான எரிபொருள் விலை 15 நாட்களுக்கு ஒரு முறை மாறுபடும். அந்த வகையில் ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மற்றும் வர்த்தக சிலிண்டர் விலை விலையில் மாற்றம் ஏற்படும் . அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.965.50 காசுகளாக இருந்தது.

சிலிண்டர் விலை உயர்வு
அதேபோல் மே மாதம் சிலிண்டர் விலை தொடக்கத்தில் ரூ.50 உயர்த்தப்பட்டது. இதன் மூலம் சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.1, 015.50க்கு விற்பனையாகி வந்தது. பிறகு அதே மாதத்தில் மீண்டும் ரூ.3 உயர்த்தப்பட்டு, 14.2 கிலோ சிலிண்டர் ரூ. 1,018.50க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஜூன் மாதத்தில் சிலிண்டர் விலை மாற்றமில்லாமல் இருந்து வந்தது.

சென்னை விலை எவ்வளவு?
இந்நிலையில் சென்னையில் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை ரூ. 50 உயர்த்தப்பட்டு, ரூ. 1,068.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் ரூ.50 உயர்ந்துள்ளது நடுத்தர மற்றும் சாமானிய மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற மாநிலங்களில் விலை நிலவரம்
14 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளதால், டெல்லியில் ரூ. 1,003க்கு விற்பனையாகிய சிலிண்டர் ரூ.1,053க்கும், மும்பையில் ரூ.1,002.50க்கு விற்பனை செய்யப்பட்ட சிலிண்டர் ரூ.1,052.50க்கும், கொல்கத்தாவில் ரூ. 1029க்கு விற்பனையாகிய சிலிண்டர், இப்போது ரூ.1,079க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

19 கிலோ சிலிண்டர் விலை குறைப்பு
இதேபோல் வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை ரூ.8.50 குறைக்கப்பட்டுள்ளது. அண்மையில் வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.187 குறைக்கப்பட்டு ரூ.2,186-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனிடையே மேலும் ரூ.8.50 குறைக்கப்பட்டுள்ளதால், ரூ.2,177.50க்கு விற்பனையாகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications