சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வேதா நிலையம் மீதான உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அதிமுகவின் நிலைப்பாடு என்ன?.. ஜெயக்குமார் விளக்கம்

Google Oneindia Tamil News

சென்னை: வேதா நிலையம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தின் உத்தரவு குறித்து மேல் நடவடிக்கை தொடர்பாக கட்சி ஆலோசித்து முடிவு செய்யும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    AIADMK-வின் நிலைப்பாடு இது தான் - D Jayakumar |Veda Illam Case | Oneindia Tamil

    அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமாக எம்.ஜி.ஆர் மாளிகையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில் நடைபெற்றது.

    சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற ஆலோசனையில் பல்வேறு முக்கிய விவரங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக, அதிமுக உட்கட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

    ஜெய் பீம்: சூர்யா மட்டுமல்ல.. ஜோதிகா படங்களையும் திரையிட கூடாது.. ஒன்று திரண்ட பாமகஜெய் பீம்: சூர்யா மட்டுமல்ல.. ஜோதிகா படங்களையும் திரையிட கூடாது.. ஒன்று திரண்ட பாமக

    விரைவில் நடைபெறும் தேர்தல்

    விரைவில் நடைபெறும் தேர்தல்

    அதேப்போல், நகர்ப் புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், மாபெரும் வெற்றி பெறுவது குறித்து அதிமுக மாவட்டச் செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்தார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

    ஜனநாயக விரோத அரசு

    ஜனநாயக விரோத அரசு

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாகவும், திமுக ஜனநாயக விரோத அரசு என்றும், மாநில தேர்தல் ஆணையத்தை கையில் வைத்துக்கொண்டு செயல்பட்டு வருவதாகவும், அதனை முறியடித்து அதிமுக வெற்றி பெற வேண்டும் என கருத்துக்கள் பகிரப்பட்டதாக கூறினார்.

    உயர்நீதிமன்ற உத்தரவு

    உயர்நீதிமன்ற உத்தரவு

    மேலும், வேதா நிலையம் தொடர்பாக உயர்நீதிமன்ற உத்தரவிற்கு பதிலளித்த அவர், அதிமுகவின் ஒவ்வொரு தொண்டர்களின் திருக்கோவிலாக நினைக்கும் இடம் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த இல்லம் என்றும், உயர்நீதிமன்றத்தின் உத்தரவு குறித்து மேல் நடவடிக்கை தொடர்பாக கட்சி ஆலோசித்து முடிவு செய்யும் எனவும் கூறினார்.

    உண்மையான தொண்டர்கள்

    உண்மையான தொண்டர்கள்

    தொடர்ந்து பேசிய அவர், அதிமுக மாபெரும் எஃகு கோட்டை எனவும், உண்மையான தொண்டர்கள் யாரும் கட்சி மாற மாட்டார்கள் என குறிப்பிட்ட அவர், வியாபாரிகள் தான் எந்த குளத்தில் தண்ணீர் உள்ளதோ, அந்த குளத்தை நோக்கி செல்வார்கள் எனவும் விமர்சனம் செய்தார்.

    கட்சிக்குள் கருத்து பரிமாற்றம்

    கட்சிக்குள் கருத்து பரிமாற்றம்

    அன்வர் ராஜா குறித்த கேள்விக்கு கட்சிக்குள் கருத்து பரிமாற்றம் இருக்கும். அதற்கு வருத்தம் தெரிவிப்பது இயல்பு தான் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குறிப்பிட்டார். இந்த கூட்டத்தில் சசிகலாவை சேர்ப்பது குறித்து யோசிக்க வேண்டும் என அன்வர்ராஜா கூறியதாகவும் சொல்லப்படுகிறது. அது போல் சசிகலா குறித்து பேசியதற்கு அன்வர்ராஜாவிடம் சிவி சண்முகம் கோபப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

    English summary
    Ex Minister D Jayakumar says about Chennai HC directive on Veda Nilayam.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X