Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாத்ரூமில் பாய்பிரண்ட்.. ஐயோ ஷாரோன்.. அம்பலமான "விஷப்பெண்ணின்" மேங்கோ ஜூஸ் சீக்ரெட்.. மோசக்கார மாமா

காதலனுக்கு எதற்காக மாம்பழ ஜூஸை க்ரீஷ்மா தேர்ந்தெடுத்தார் என்ற தகவல் வெளியாகி உள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: காதலனை கொன்ற இளம்பெண்ணின் தொடர் வாக்குமூலத்தில் மேலும் சில தகவல்கள் அம்பலமாகி வருகின்றன.. இதையெல்லாம் கேட்டு பொதுமக்கள் அதிர்ந்து போயுள்ளனர்.

உயிருக்கு உயிராக நேசித்த ஒரே பாவத்திற்காக, உயிரை விட்டுள்ளார் ஒரு அப்பாவி இளைஞன்.. அதுவும் மரணத்தருவாயிலும், கடைசி நிமிட உயிர்பிரியும் நேரத்திலும், அவளை யாரும் தப்பா நினைக்காதீங்க என்று சொல்லி கடைசி மூச்சையும் நிறுத்தியுள்ளான்..

காதலி மீது வைத்த இந்த அபரிமிதமான நம்பிக்கைதான், அந்த பெண்ணின் வீட்டையே அடித்து நொறுக்கும் அளவுக்கு ஆவேசத்துக்கு சென்றுவிட்டது.. கஷாயத்தில் விஷத்தை கலந்து தந்திரமாக குடிக்க வைத்து, பச்சை கலரில் வாந்தி எடுத்து மயங்கி விழுந்துள்ளார் ஷாரோன்.

உறுப்புகள்

உறுப்புகள்

மருத்துவமனையில் உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயல் இழந்து கடந்த 25ம் தேதி இறந்துவிட்டார்.. கொலைக்குற்றவாளியான க்ரீஷ்மா, 2 விதமான வாக்குமூலங்களை போலீசாருக்கு தந்திருந்தார்.. அதேசமயம், தன்னுடைய இந்த திட்டத்தில், வேறு யாருக்கும் இதில் தொடர்பு இல்லை என்று க்ரீஷ்மா கூறியிருந்தார்.. க்ரீஷ்மாவிடம் மருத்துவமனையில் விசாரணை நடத்தியபோது, தான் மட்டுமே சதித்திட்டத்தில் ஈடுபட்டதாகவும், வேறு யாருக்கும் இதில் தொடர்பு இல்லை என்றும் சொன்னாலும், போலீசார் அதை நம்பவில்லை.. இவ்வளவு பெரிய கொலையை, தனிநபராக ஒரு இளம்பெண் செய்திருக்க முடியாது என்று சந்தேகப்பட்டனர்.. பாத்ரூமில் பாய்பிரண்ட்.. ஐயோ ஷாரோன்.. அம்பலமான "விஷப்பெண்ணின்" மேங்கோ ஜூஸ் சீக்ரெட்.. மோசக்கார மாமா

 ஆதாரங்கள்

ஆதாரங்கள்

அதற்கேற்றவாறு, சம்பவத்தன்று, க்ரீஷ்மா வீட்டுக்கு ஷாரோன் சென்றதை கிரீஷ்மாவின் அம்மா கண்ணால் பார்த்தாராம்.. ஆனாலும், அவர் உடனடியாக வீட்டுக்கு போகாமல் இருந்துள்ளார்.. இதுதான், போலீசாருக்கு அழுத்தமான சந்தேகத்தை தந்தது.. அவரது அம்மா, மாமா ஆகியோர், விஷம் கொடுக்கப்பட்டது தொடர்பான ஆதாரங்களை அழித்திருக்கிறார்கள் என்பதும் உறுதியானது.. இதற்கு பிறகுதான், அம்மா, மாமா இருவருமே விசாரணை வளையத்துக்குள் முழுமையாக கொண்டுவரப்பட்டனர். இப்போது அதுகுறித்த கூடுதல் தகவலும் வெளியாகி உள்ளது.

 டோலோ ஜூஸ்

டோலோ ஜூஸ்

50 டோலோ மாத்திரை கலந்த ஜூஸ் பாட்டிலும், சாதாரண ஜூஸ் ஒரு பாட்டிலும் என 2 விதமான ஜூஸ் பாட்டில்களை, திற்பரப்பு அருவி தொடங்கி அவர்கள் தங்கிய லாட்ஜ்வரை, கையில் வைத்துக் கொண்டே இருந்திருக்கிறார் க்ரீஷ்மா.. எங்கெல்லாம் சந்தர்ப்பம் கிடைக்கிறதோ, அங்கெல்லாம், டோலோ மாத்திரை கலந்த ஜூஸை தந்து, ஷாரோனை குடிக்க வைக்கவும் முயற்சித்துள்ளார்.. ஆனால், அந்த ஜூஸை குடித்தும்கூட ஷாரோன் உயிர்தப்பியதால்தான், தாய்மாமனின் ஐடியாவை கேட்டுள்ளார் க்ரீஷ்மா.. அம்மாவும், தாய்மாமனும் சேர்ந்துதான், விஷத்தை கலக்கும்படி சொல்லி உள்ளனர்..

 கஷாய ஜூஸ்

கஷாய ஜூஸ்

ஜூஸிலும், கஷாயத்திலும், விஷம் கலந்து கொடுக்கும்படி, இருவர் தந்த ஐடியாவால்தான், டோலோவை தூக்கி தூரப்போட்டுவிட்டு, விஷத்தை கையில் எடுத்துள்ளார் க்ரீஷ்மா.. அதுமட்டுமல்ல, மேங்கோ ஜூஸில் விஷம் கலந்து கொடுத்தால், அதன் நிறம் மாறாது என்பதால்தான், அதனை தேர்ந்தெடுத்துள்ளனர்.. இதை க்ரீஷ்மா தன்னுடைய வாக்குமூலத்தில் சொன்னதால், அந்த கடைக்கே நேரடியாக அவரை அழைத்து சென்று ஜூஸை வாங்கி சோதித்து பார்த்தனர் போலீசார்.

பாத்ரூமில்

பாத்ரூமில்

அதாவது, 50 டோலோ மாத்திரைகளை வாங்கி, தண்ணீரில் ஊறவைத்து, அதை பொடித்து வைத்து கொள்வாராம்.. மறுநாள் இவர்கள் டேட்டிங் செல்லும்போது, அதை ஜூஸில் கலந்து தருவாராம்.. ஒருமுறை காலேஜ் பாத்ரூமில் வைத்து, இந்த டோலா பவுடரை ஜூஸில் மிக்ஸிங் செய்தாராம்.. அதுமட்டுமல்ல, கடந்த 2 மாதத்திற்கு முன் ஷாரோன் படித்த நெய்யூரில் உள்ள சிஎஸ்ஐ. மிஷன் மருத்துவமனைக்கு சென்றபோது, க்ரீஷ்மா அவரை பாத்ரூமுக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருப்பது போன்று நடித்து, முதல்முறையாக அப்போதுதான், ஜூஸில் டோலோவை கலந்து தந்தாராம்.. அந்த இடங்களுக்கும் க்ரீஷ்மாவை அழைத்து சென்று விசாரித்துள்ளனர்.

 சர்ச் ஜெபம்

சர்ச் ஜெபம்

இன்னும் ஏகப்பட்ட மர்மங்கள் இந்த கொலை சம்பவத்தில் இருக்கலாம் என்கிறார்கள்.. ஆனால், கேரள போலீசாருக்கு அதிர்ச்சிதரும் விஷயம் என்னவென்றால், குமரியில் நடந்த விசாரணையின்போது கிரீஷ்மா அனைத்து விஷயங்களையும் சிரித்தபடி விளக்கி சொல்லி உள்ளார்.. வெட்டுக்காடு சர்ச்சுக்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றபோது, "இந்த சர்ச்சில்தான், கல்யாணம் முடிந்த பிறகு நாங்க 2 பேரும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று ஜெபம் செய்தோம்.. ஆனால், அவனை என் கையால் கொலைசெய்ய வேண்டிய நிலைமை வந்துடுச்சு" என க்ரீஷ்மா கேஷூவலாக சொல்லி உள்ளார்.. இதனிடையே, அவர் குரல் சோதனைக்காக திருவனந்தபுரம் ஆகாசவாணி ரேடியோ ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், மேலும் பல பகீர்கள் வெளிவரலாம் என்கிறார்கள்..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+