Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கருப்பு கலர் கணவர்.. திருப்தி இல்லாத தாம்பத்தியம்.. ஒரே சொல்லில் மொத்த பேரையும் அதிர வைத்த மணப்பெண்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கேரள மாநிலத்தில் கல்யாணமாகி ஒரே மாதத்தில் இளம் பெண் ஒருவர் தனது கணவரை பிரிந்த சம்பவம், சமூக வலைத்தளங்களிலும் பொதுவெளியிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது... இதற்கு காரணம், கணவர் கருப்பு என்பதால், அவரை அப்பெண்ணுக்கு பிடிக்கவில்லையாம்.. இதுகுறித்த விவரங்களை இங்கே பார்க்கலாம.

பொதுவாக கல்யாணமாகிவிட்டால், ஆரம்ப காலங்களில் தம்பதிகளுக்கு இடையே புரிதல் குறைபாடு அல்லது சிறு சிறு குடும்ப பூசல்கள் காரணமாக கருத்து வேறுபாடுகள் தோன்றுவது இயல்பான விஷயம்தான்..

Dark Colour husband

ஆனால், இந்த இளம்பெண் தனது கணவரை பிரிவதற்கு முன்வைத்த காரணம்தான், பலரை வியப்பிலும், அதேசமயம் கவலையிலும் ஆழ்த்தும் வகையில் அமைந்துள்ளது.

கருப்பு கலர் கணவர்

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் பகுதியை சேர்ந்த அபிஷேக் என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் அபிஷேக், முறைப்படி பெற்றோர் பார்த்த பெண்ணையே திருமணம் செய்துகொண்டார். ஆனால், திருமணமான சில நாட்களிலேயே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

பிறகு திடீரென மணப்பெண், தனக்கு கணவருடன் வாழ விருப்பம் இல்லை என்று சொல்லி, கணவர் மீது பரபரப்பு குற்றச்சாட்டையும் தந்துள்ளார்..

தாம்பத்ய உறவு

அதில், அந்த பெண் செய்தியாளர்களிடம் சொல்லும்போது, "எங்களது தாம்பத்திய உறவில் எனக்கு திருப்தி இல்லை. குடும்பத்தில் வேறு எந்த பிரச்சினையும் இல்லை என்றாலும், சில விஷயங்களை என்னால் வெளிப்படையாக பேச முடியவில்லை... இனி அவருடன் இணைந்து வாழ எனக்கு விருப்பம் இல்லை; முறைப்படி விவாகரத்து பெறப் போகிறேன்" என்று தெரிவித்துள்ளார்..

திருமணமாகி 1 மாதம்கூட ஆகாத நிலையில், மணப்பெண் இவ்வளவு பெரிய முடிவை அவர் எடுத்தது அவரது குடும்பத்தினருக்கும் கணவர் தரப்பினருக்கும் பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது.. எனவே அந்த பெண்ணை சமாதானப்படுத்தவும், தம்பதிக்குள் உறவை தொடர வைக்கவும் இரு வீட்டாரும் தீவிர முயற்சி மேற்கொண்டனர்... ஆனாலும் இளம்பெண் தன்னுடைய முடிவை மாற்றி கொள்ளவில்லை.. விவாகரத்து என்பதிலேயே பிடிவாதமாக உள்ளார்..

விவாகரத்து கேட்ட மணப்பெண்

இதனிடையே, இந்த விவகாரம் போலீஸ் ஸ்டேஷன் வரை சென்றது.. அங்கு காவல்துறை அதிகாரிகள் மற்றும் குடும்ப நல ஆலோசகர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஒரு மாத காலம் என்பது ஒருவரை புரிந்து கொள்ள போதுமானதல்ல என்றும், அவசரப்பட்டு பிரிந்து செல்வது எதிர்காலத்தை பாதிக்கும் என்றும் ஆலோசகர்கள் பெண்ணுக்கு பல்வேறு அட்வைஸ்களை தந்தார்கள்..

ஒருமுறைக்கு 2 முறை சிந்தித்து செயல்படுமாறும், மருத்துவ ரீதியிலான ஆலோசனைகளை நாடுமாறும் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.. ஆனால், அந்த பெண் எதற்கும் இணங்கவில்லை. தனக்கு பிடிக்காத அல்லது மன நிறைவு தராத ஒரு வாழ்க்கையை தொடர தான் தயாராக இல்லை என்பதிலும், தனது தனிப்பட்ட விருப்பமே முக்கியம் என்பதிலும் அவர் மிக தெளிவாகவும் உறுதியாகவும் இருந்தார்.

திருமண உறவு

இந்த சூழல் கணவருக்கு மிகப்பெரிய மன உளைச்சலையும் தர்மசங்கடத்தையும் ஏற்படுத்தியுள்ளது. திருமணமான சில நாட்களிலேயே இத்தகைய காரணத்திற்காக தனது மனைவி தன்னை விட்டு பிரிவதை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. இறுதியில், எந்த சமாதானத்திற்கும் கட்டுப்படாத அந்த பெண், தனது கணவரை பிரிந்து தாய் வீட்டிற்கே தற்போது சென்றுவிட்டாராம்..

இந்த சம்பவம் தற்போது சோஷியல் மீடியாவிலும் ஒரு விவாத பொருளாக மாறியுள்ளது. இன்றைய காலத்தில் பெண்கள் தங்கள் விருப்பங்களை வெளிப்படையாக பேச தொடங்கிவிட்டனர் என்பதன் அடையாளமாக ஒரு தரப்பினர் இதை கருதுகின்றனர்.

ஆனால் அதே சமயம், திருமண உறவு என்பது ஒரு புரிதலுக்கான காலம் தேவைப்படும் அமைப்பு என்றும், எடுத்தவுடனேயே இதுபோன்ற அதிரடி முடிவுகளை எடுப்பது குடும்ப கட்டமைப்பை சிதைத்துவிடும் என்று மற்றொரு தரப்பினர் வாதிட்டு வருகிறார்கள்...!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+