இன்றே கடைசி நாள்.. உடனே அப்ளை பண்ணுங்க! பொறியியல் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களே அலர்ட்!
சென்னை: தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் (ஜூன் 6) நிறைவடைகிறது. எனவே, பொறியியல் படிப்புகளில் சேர விருப்பமுள்ள மாணவர்கள் இன்றே விண்னப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள 442 பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கான கலந்தாய்வு விண்ணப்பம் கடந்த மே 6 ஆம் தேதி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதில் இருந்து துவங்கியது. பொறியியல் இளநிலைப் படிப்புகளில் உள்ள சுமாா் 2 லட்சம் இடங்கள் ஆண்டுதோறும் பொது கலந்தாய்வு மூலம் ஒற்றைச்சாளர முறையில் நிரப்பப்படுகிறது. அந்த வகையில், நடப்பாண்டு பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு இணைய வழியில் நடத்தப்பட உள்ளது.

மே 6ஆம் தேதி முதல் மாணவ, மாணவிகள் மிகுந்த ஆர்வத்தோடு பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்து அதற்கான கட்டணத்தையும் செலுத்தி வருகின்றனர். மேலும், தேவையான சான்றிதழ்களையும் ஆன்லைனில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.
அதன்படி, தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின் இணையதளம் வாயிலாக கலந்தாய்வில் பங்கேற்பதற்காக நேற்று (ஜூன் 5) மாலை 6 மணி நிலவரப்படி, 2 லட்சத்து 42 ஆயிரத்து 983 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அதில், 1 லட்சத்து 96 ஆயிரத்து 570 மாணவர்கள் கட்டணத்தை செலுத்தியும், 1 லட்சத்து 69 ஆயிரத்து 68 மாணவர்கள் சான்றிதழ் பதிவேற்றமும் செய்துள்ளனர்.
மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் ஏற்கெனவே அறிவித்தபடி, பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. பொறியியல் கலந்தாய்விற்காக விண்ணப்பிக்க இன்றுடன் கடைசி நாள். இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் இன்று விண்ணப்பித்து, சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
வரும் ஜூன் 12 ஆம் தேதி ரேண்டம் எண் வழங்கப்பட்டு, கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் ஜூலை 10ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. இதனால், பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படாது எனத் தெரிகிறது.
பொறியியல் படிப்பில் சேர விருப்பமுள்ள மாணவர்கள் www.tneaonline.org என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் எனவும், இணைய வசதி இல்லாதவா்கள் சிறப்பு சேவை மையங்கள் மூலமாக தங்களது விண்ணப்பங்களை சமா்ப்பிக்கலாம் எனவும் வேறு ஏதேனும் சந்தேகங்களுக்கு, மேலும் விவரங்களுக்கு 01800-425-0110 என்ற எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications