Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையில் இருந்து தீபாவளிக்கு சொந்த ஊர் போறீங்களா? நாளை முதல் சிறப்பு பேருந்துகள்.. முழு விபரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திங்கட்கிழமை தீபாவளி வருவதால் தொடர்ச்சியாக 3 நாட்கள் அரசு விடுமுறை என்பதால் வெளியூர் பயணம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. 21ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்லக்கூடும் என்பதால் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. சென்னை பேருந்து நிலையங்களில் இருந்து, தீபாவளியையொட்டி மற்ற மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பேருந்து விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

தீபாவளி பண்டிகை மற்றும் அதனையொட்டி வரும் விடுமுறை நாட்களை கொண்டாட, சென்னையில் வசிக்கும் தென்மாவட்ட மக்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். ரயில் டிக்கெட்டுகள் முழுவதும் முடிவடைந்த நிலையில், பேருந்துகள் மூலமாக பெரும்பாலானோர் தங்களது சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர்.

தீபாவளிக்கு முந்தைய சனி, ஞாயிறு விடுமுறை நாட்களாகும். திங்கட்கிழமை தீபாவளி வருவதால் தொடர்ச்சியாக 3 நாட்கள் அரசு விடுமுறை என்பதால் வெளியூர் பயணம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. நாளைய தினம் முதல் வருகிற 23ஆம் தேதி வரையிலும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. சென்னையில் இருந்து தினசரி இயக்கக் கூடிய 2,100 பஸ்களுடன், 4,218 சிறப்பு பஸ்கள் என 3 நாட்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தம் 10,518 பஸ்களும், பிற ஊர்களில் இருந்து மேற்கண்ட 3 நாட்களுக்கு 6,370 சிறப்பு பஸ்கள் என மொத்தமாக 16,888 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

 எங்கிருந்து எந்த பேருந்துகள் செல்லும்

எங்கிருந்து எந்த பேருந்துகள் செல்லும்

இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையத்தில் இருந்து திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை, செஞ்சிக்கு பேருந்துகள் இயக்கப்படும். மதுராந்தகம் திண்டிவனம் மார்க்கமாக வந்தவாசி, சேத்துப்பட்டு, போளூர், புதுச்சேரி, கடலூர், சிதம்பரத்திற்கு பேருந்துகள் இயக்கப்படும். விக்கிரவாண்டி பண்ருட்டி மார்க்கமாக நெய்வேலி டி.எஸ்., சிதம்பரம், வடலூர், காட்டுமன்னார்கோயிலுக்கு பேருந்துகள் இயக்கப்படும்.

தாம்பரம் சானடோரியம் மெப்ஸ்

தாம்பரம் சானடோரியம் மெப்ஸ்

தாம்பரம் சானடோரியம் மெப்ஸ் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து விக்கிரவாண்டி பண்ருட்டி மார்க்கமாக கும்பகோணம், தஞ்சாவூருக்கு பேருந்துகள் இயக்கப்படும். கே.கே. நகர் மாநகர பேருந்து நிலையத்தில் இருந்து ஈ.சி.ஆர். மார்க்கமாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரத்திற்கு இயக்கப்படும்.

மாதவரம், பூந்தமல்லி பணிமனை

மாதவரம், பூந்தமல்லி பணிமனை

மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து காளகஸ்தி, திருப்பதி, நெல்லூர், பொன்னேரி, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி வழி : செங்குன்றம் மார்க்கம் இயக்கப்படும். பூந்தமல்லி பைபாஸ் மாநகர போக்குவரத்து கழகம் பூந்தமல்லி பணிமனை அருகில் இருந்து காஞ்சிபுரம், செய்யாறு, ஆற்காடு, ஆரணி, வேலூர், சித்தூர், குடியாத்தம், திருப்பத்தூர், ஓசூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருத்தணி, திருப்பதி

 கோயம்பேடு

கோயம்பேடு

கோயம்பேடு புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆர் பேருந்து நிலையத்தில் இருந்து திண்டிவனம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, விருத்தாசலம், திருக்கோவிலூர், திட்டக்குடி, திருச்சி, சேலம், மயிலாடுதுறைக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

எத்தனை பேருந்துகள்

எத்தனை பேருந்துகள்

21ஆம் தேதியன்று வழக்கமாக இயக்கப்படும் 2100 பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும் சென்னையில் இருந்து 1437 சிறப்பு பஸ்களும், பல்வேறு முக்கிய இடங்களில் இருந்து 1765 சிறப்பு பஸ்களும் இயக்கப்படும். 22ஆம் தேதி சனிக்கிழமை வழக்கமாக இயக்கப்படும் 2100 பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும் சென்னையில் இருந்து 1586 சிறப்பு பஸ்களும், பல்வேறு முக்கிய இடங்களில் இருந்து 2620 சிறப்பு பஸ்களும் இயக்கப்படும். 23ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வழக்கமாக இயக்கப்படும் 2100 பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும் சென்னையில் இருந்து 1195 சிறப்பு பஸ்களும், பல்வேறு முக்கிய இடங்களில் இருந்து 1985 சிறப்பு பஸ்களும் இயக்கப்படும். 3 நாட்களும் வழக்கமாக இயக்கப்படும் 6300 பஸ்கள், 10588 சிறப்பு பஸ்கள் என மொத்தம் 16,888 பஸ்கள் இயக்கப்படுகின்றன.

சொந்த ஊரில் இருந்து சென்னை திரும்ப பேருந்துகள்

சொந்த ஊரில் இருந்து சென்னை திரும்ப பேருந்துகள்

அக்டோபர் 24ஆம் தேதி வழக்கமான 2100 பஸ்கள் இயக்கப்படும். மேலும் பல்வேறு இடங்களில் இருந்து சென்னைக்கு திரும்ப 530 சிறப்பு பஸ்களும், சென்னையை தவிர்த்து இதர இடங்களுக்கு திரும்ப 580 சிறப்பு பஸ்களும் இயக்கப்படும். 25ஆம் தேதி செவ்வாய்க்கிழமை வழக்கமான 2100 பஸ்கள் இயக்கப்படும். மேலும் பல்வேறு இடங்களில் இருந்து சென்னைக்கு திரும்ப 1678 சிறப்பு பஸ்களும், சென்னையை தவிர்த்து இதர இடங்களுக்கு திரும்ப 2080 சிறப்பு பஸ்களும் இயக்கப்படும். 26 ஆம் தேதி புதன் கிழமை வழக்கமான 2100 பஸ்கள் இயக்கப்படும். மேலும் பல்வேறு இடங்களில் இருந்து சென்னைக்கு திரும்ப 854 சிறப்பு பஸ்களும், சென்னையை தவிர்த்து இதர இடங்களுக்கு திரும்ப 1130 சிறப்பு பஸ்களும் இயக்கப்படும். இந்த 3 நாட்களும் வழக்கமாக இயக்கப்படும் 6300 பஸ்கள், 6852 சிறப்பு பஸ்கள் என மொத்தம் 13,152 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+