தமிழகத்தில் கல்வி, மருத்துவத்துக்கு முக்கியத்துவம்! டெல்லியை போல் மாதிரி பள்ளி: முதல்வர் ஸ்டாலின்
டெல்லி: ‛‛தமிழகத்தில் மற்ற துறைகளை விட கல்வி மற்றும் மருத்துவத்துறைக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. டெல்லியில் உள்ள மாதிரி பள்ளிகளை போன்று தமிழ்நாட்டிலும் விரைவில் மாதிரி பள்ளி உருவாக்கப்படும்'' என முதல்வர் முக ஸ்டாலின் கூறினார்.
டெல்லியில் திமுக சார்பில் அண்ணா-கலைஞர் அறிவாலயம் கட்டப்பட்டுள்ளது. இந்த அறிவாலயம் நாளை திறக்கப்பட உள்ளது.
இதற்கான ஏற்பாடுகள் திமுக சார்பில் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திறப்பு விழாவில் கூட்டணி கட்சியினர் மற்றும் பிற மாநில தோழமை கட்சியினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கெஜ்ரிவாலுடன், ஸ்டாலின்
இதையொட்டி முதல்வர் ஸ்டாலின் டெல்லி சென்றுள்ளார். நேற்று பிரதமர் நரேந்திர மோடி, சோனியா காந்தி ஆகியோரை ஸ்டாலின் சந்தித்து திறப்பு விழாவுக்கு அழைப்பு விடுத்தார். இன்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்து அழைப்பு விடுத்தார். மேலும் அங்குள்ள மொகல்லா கிளினிக், மேற்கு வினோத் நகரில் உள்ள மாதிரி பள்ளியை அரவிந்த் கெஜ்ரிவாலுடன் இணைந்து ஸ்டாலின் பார்வையிட்டார்.

விளக்கிய அதிகாரிகள்
அப்போது அவரை வரவேற்கும் வகையில் தமிழில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. பள்ளியில் உள்ள நவீன வசதிகள் குறித்து அதிகாரிகள் ஸ்டாலினுக்கு விளக்கி கூறினர். இந் வேளையில் கல்வி தொடர்பாக பல்வேறு விஷயங்களை இருதரப்புக்கும் இடையே விவாதிக்கப்பட்டன.

அதிக நிதி ஒதுக்கீடு
அதன்பிறகு ஸ்டாலின் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழ்நாட்டில் பிற துறைகளை காட்டிலும் பள்ளி கல்வி, மருத்துவத்துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அதிக நிதி ஒதுக்கி பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. டெல்லியில் மாடர்ன் பள்ளி செயல்பட்டு வருவதை கேள்வி பட்டேன். இதை பார்க்க வேண்டும் என முடிவெடுத்து வந்தேன். ரொம்ப சிறப்பாக உள்ளது.

விரைவில் தமிழகத்தில்
விரைவில் இதுபோன்ற மாடர்ன் பள்ளிகள் தமிழகத்தில் துவங்கப்படும். சென்னையில் முதற்கட்டமாக திறக்க நிதி ஒதுக்கி உள்ளோம். இந்த பள்ளி நிகழ்ச்சிக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அழைப்பு விடுத்தேன். டெல்லி மக்கள் சார்பில் கலந்து கொள்ள வேண்டும் என்றேன். அவர் வருவதாக கூறியுள்ளார்'' என்றார்.

நேரலையில் வரவேற்கிறேன்
முன்னதாக முதல்வர் ஸ்டாலினுடனான சந்திப்பு குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பக்கத்தில், ‛‛கல்வி மட்டுமே சிறந்த சமுதாயத்தையும், சக்தி வாய்ந்த நாட்டையும் உருவாக்க உதவும். நாடு முழுவதும் கல்வி புரட்சியை ஏற்படுத்துவோம். டெல்லியில் அரசு பள்ளிக்கு பார்வையிட வரும் தமிழக முதல்வர் ஸ்டாலினை நேரலையில் வரவேற்கிறேன்'' என குறிப்பிட்டுள்ளார். மேலும் இருவரும் பள்ளியை பார்வையிட்டது நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
இந்தியாவை தாக்க பெரிய சதி.. பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த 9 பேர் கைது.. பகீர் பின்னணி -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications