வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது - கடலோர மாவட்டங்களில் மழை வெளுக்கும்
வங்கக்கடலின் மத்திய பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னை: வங்கக்கடலின் மத்திய பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 3 நாட்களுக்கு மேற்கு நோக்கி நகர தொடங்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை கடந்த 25ஆம் தேதி தொடங்கியது. தென் மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. வடகிழக்குப் பருவமழையின் முதல் காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று உருவாகியுள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வங்க கடலின் மத்தியப் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த மூன்று நாட்களுக்கு மேற்கு நோக்கி நகரும். காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் கடற்கரையோர மாவட்டங்களில் அதிக கனமழை பொழியும்.

இன்றைய மழை நிலவரத்தை பொறுத்தவரை, நீலகிரி, திருச்சி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராம நாதபுரம், மதுரை ஆகிய மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் மழை பெய்யும்.
மேற்கு தொடர்ச்சி மழையை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் சில இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும். கடலோரா மாவட்டங்கள், உள் மாவட்டங்கள், புதுவை, காரைக்காலில் லேசான மழை பெய்யும்.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். நகரின் சில பகுதிகளில் மழை பெய்யக் கூடும்.
வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
28, 29 தேதிகளில் டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, ராமநாதபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமானது முதல் மிக கனமானது வரை மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய மிதமானது முதல் கனமானது வரை மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதன் காரணமாக தெற்கு வங்கக் கடலில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 29,30,31ஆம் தேதிகளில் மன்னார் வளைகுடா, தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும்.
தெற்கு ஆந்திரா கடலோர பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலோர பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
-
சென்னையில் சம்பவம் இருக்கு.. ஹை அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
அடுத்த 3 மணி நேரம்.. விடாமல் கொட்டப் போகுது மழை.. செங்கல்பட்டு உள்பட 16 மாவட்டங்களுக்கு அலர்ட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம்












Click it and Unblock the Notifications