காங்கிரஸ் + பாமக + 2 கம்யூனிஸ்ட்.. 13 எம்எல்ஏக்களை தட்டித்தூக்கும் விஜய்.. பேச்சுவார்த்தையை தொடங்கிய தவெக
சென்னை: விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மெஜாரிட்டியுடன் ஆட்சியமைக்க இன்னும் 11 எம்எல்ஏக்கள் தேவையாக உள்ளது. இந்நிலையில் தான் காங்கிரஸ் பாமக, 2 கம்யூனிஸ்ட் கட்சிகளை சேர்ந்த 13 எம்எல்ஏக்களின் ஆதரவுகளை பெற விஜய்யின் தவெக பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி படுதோல்வியடைந்துள்ளது. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் அமோக வெற்றி பெற்றுள்ளது. தவெக108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. தனி மெஜாரிட்டி கிடைக்காவிட்டாலும் தமிழகத்தில் தனி்ப்பெரும் கட்சியாக மாறி உள்ளது.

தமிழகத்தில் 234 தொகுதிகள் உள்ளன. இதனால் தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் ஒரு கட்சிக்கு 118 எம்எல்ஏக்கள் வேண்டும். அந்த வகையில் தவெகவிற்கு 10 இடங்கள் குறைவாக கிடைத்துள்ளது. விஜய் 2 தொகுதியில் வென்றுள்ளார். ஒரு தொகுதியை ராஜினாமா செய்யும்போது எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 108 ல் இருந்து 107 ஆக குறையும்.
இதனால் விஜய்யின் மெஜாரிட்டிக்கு 11 எம்எல்ஏக்கள் தேவையாக உள்ளது. இதனால் பிற கட்சிகளிடம் ஆதரவு கேட்க விஜய் காய்நகர்த்தி வருகிறார். இந்நிலையில் தான் 4 கட்சிகளிடம் தவெக ஆதரவு கோரி பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ள தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி விஜய்யின் தவெக கட்சியின் தேர்தல் வியூக வகுப்பாளரான ஜாண் ஆரோக்கியசாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறப்படுகிறது. பாமகவிற்கு 4 எம்எல்ஏக்கள் உள்ளனர்.
ஜான் ஆரோக்கியசாமி, அன்புமணி இடையே நல்ல உறவு உள்ளது. கடந்த 2016 சட்டசபை தேர்தலில் அன்புமணியின் ராமதாஸின் 'மாற்றம் முன்னேற்றம் அன்புமணி' என்ற பிரசாரத்துக்கு காரணமாக இருந்தவர் ஜான் ஆரோக்கியசாமி தான். அப்போது அவர் பாமகவின் பிரசார வியூக வகுப்பாளராக பணியாற்றி இருந்தார். அந்த பழக்கத்தை வைத்து ஜான் ஆரோக்கியசாமி, அன்புமணியிடம் பேசி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதேபோல், விஜய்யின் தவெக தரப்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிடம் பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் தலா 2 எம்எல்ஏக்கள் உள்ளனர். மேலும் ஏற்கனவே விஜய், காங்கிரஸ் கட்சியிடம் ஆதரவு கேட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சிக்கு 5 எம்எல்ஏக்கள் உள்ளனர். இந்த 4 கட்சிகளும் விஜய்யின் தவெகவிற்கு ஆதரவு வழங்கினால் கூடுதலாக 13 எம்எல்ஏக்கள் கிடைப்பார்கள். விஜயின் தவெக பெரும்பான்மையை நிரூபிக்க 11 எம்எல்ஏக்கள் தான் வேண்டும். இதனால் இந்த 4 கட்சிகளுடன் தவெக தரப்பு தீவிரமாக பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
4 குற்ற சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் தவெக நிர்வாகிகள்.. விஜய்யிடம் விளக்கம் கேட்கும் டிடிவி தினகரன் -
ரூ.2500 உரிமைத்தொகை எப்போது கிடைக்கும்? நிதியமைச்சர் மரியவில்சன் கொடுத்த அப்டேட்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா? -
"டிவிகேவால் தான் கரு கலைந்ததா?".. இதோடு உங்க நாடகத்தை நிறுத்திக்கோங்க!" ஜூலிக்கு நடிகர் வார்னிங் -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி!












Click it and Unblock the Notifications