வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி - ஒரு நல்ல செய்தி... ஒரு கெட்ட செய்தி

வங்கக்கடலில் அந்தமான் அருகே இன்று காலை காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகியுள்ளதாகவும் அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடதமிழக கரையை நெருங்கும் என்றும் இது புயலாக மாற வாய்ப்பில்லை என்றும் சென்னை வானிலை ஆய்வ

Subscribe to Oneindia Tamil

சென்னை: வங்கக்கடலில் அந்தமான் அருகே இன்று காலை காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றாலும் புயலாக மாற வாய்ப்பில்லை என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சியாக உருமாறி இது வலுவிழந்து விடும் என்றும் புதுச்சேரி - கடலூர் இடையில் கேரளா செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு அதிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு தமிழ்நாட்டில் மகாபலிபுரம் (செங்கல்பட்டு), செய்யூர் (செங்கல்பட்டு) தலா 12, சித்தார் (கன்னியாகுமரி), மரக்காணம் (விழுப்புரம்), வானூர் (விழுப்புரம்), ஓட்டப்பிடாரம் (தூத்துக்குடி), சிவலோகம் (கன்னியாகுமரி) தலா 9, சிவகிரி (தென்காசி ), மதுராந்தகம் (செங்கல்பட்டு), புதுச்சேரி (புதுச்சேரி, கன்னிமார் (கன்னியாகுமரி), களியல் (கன்னியாகுமரி) தலா 8, மயிலாடி (கன்னியாகுமரி), உத்திரமேரூர் (காஞ்சிபுரம்), திருக்கழுகுன்றம் (செங்கல்பட்டு), வளவனூர் (விழுப்புரம்), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி) தலா 7, சென்னை ஆட்சியர் அலுவலகம் (சென்னை), தொண்டையார்பேட்டை (சென்னை), திண்டிவனம் (விழுப்புரம்), பெரம்பூர் (சென்னை), கேளம்பாக்கம் (செங்கல்பட்டு), திருப்போரூர் (செங்கல்பட்டு), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), குழித்துறை (கன்னியாகுமரி), பாளையங்கோட்டை (திருநெல்வேலி), சூரலக்கோடு (கன்னியாகுமரி), புத்தன் அணை (கன்னியாகுமரி ) தலா 6 செமீ பதிவாகியுள்ளது.

Recommended Video

    இன்று உருவாகும் காற்றழுத்த தாழ்வு நிலை.. 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

    இந்த நிலையில் சென்னை வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்கிழக்கு வங்க கடல் வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து 11ஆம் தேதி காலை தமிழக கரையை நெருங்ககூடும். இதன்காரணமாக இன்றைய தினம் டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கடலூர், மதுரை, சிவகங்கை, மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, விழுப்புரம், விருதுநகர் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

    மிக அதிக கனமழை

    மிக அதிக கனமழை

    நாளைய தினம் டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம் , புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், மதுரை, அரியலூர், பெரம்பலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் .

    எங்கெங்கு அதிகனமழை

    எங்கெங்கு அதிகனமழை

    நாளை மறுநாள் நவம்பர் 11ஆம் தேதி திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும், கடலூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, சேலம், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, திண்டுக்கல் மற்றும் புதுவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கன மழையும், டெல்டா மாவட்டங்கள், அரியலூர், பெரம்பலூர் திருச்சிராப்பள்ளி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

    மிதமான மழை

    மிதமான மழை

    நவம்பர் 12 ஆம் தேதி வட கடலோர மாவட்டங்கள் மற்றும் சேலம், நீலகிரி, கோயம்புத்தூர், நாமக்கல், ஈரோடு மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும்,. ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். நவம்பர் 13ஆம் தேதியன்று நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

    48 மணிநேரத்திற்கு மழை

    48 மணிநேரத்திற்கு மழை

    சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.
    நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 26 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்

    சூறாவளிக்காற்று வீசும்

    சூறாவளிக்காற்று வீசும்

    09.11.2021 முதல் 11.11.2021 வரை தெற்கு ஆந்திர மற்றும் தமிழக கடற்கரை பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்கரை பகுதிகள், குமரி கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடை இடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். தெற்கு வங்க கடல் மத்திய பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் கரைக்கு திரும்பி வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    மீனவர்கள் செல்ல வேண்டாம்

    மீனவர்கள் செல்ல வேண்டாம்

    09.11.2021, 10.11.2021: மத்தியகிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இன்று தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத் தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் கரைக்கு திரும்பி வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+