Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆக்கிரமிப்பு வழக்கு நடக்கும் போதே வேளச்சேரி ஏரி நிலத்தை தூக்கி கொடுத்த அரசு.. திகைத்துப்போன கோர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆக்கிரமிப்புகளுக்கு எதிரான வழக்குகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் வேளச்சேரி ஏரி நிலத்தை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்கு வழங்கியது தொடர்பான அரசாணையை பார்த்து, தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் வெளிப்படுத்தி உள்ளது.

சென்னை வேளச்சேரி ஏரி 265 ஏக்கர் பரப்பளவு கொண்ட பரந்து விரிந்த ஏரியாக ஒரு காலத்தில் திகழ்ந்தது. ஆனால் மக்கள் தொகை பெருக்கம் நகர்ப்புற வளர்ச்சி காரணமாக ஏரி கிட்டத்தட்ட 5ல் ஒருபக்கமாக குறைந்து வெறும் 50 ஏக்கர் நிலமாக மாறி உள்ளது. இதில் 53 ஏக்கர் நிலம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்கும், 34 ஏக்கர் நிலம் குடிசை மாற்று வாரியத்துக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. மேலும் போக்குவரத்து நெரிசல் காரணத்தை காட்டி வேளச்சேரி ஏரி 2 ஆக பிரிக்கப்பட்டு 100 அடி சாலையும் அங்கு அமைக்கப்பட்டது.

Despite an case against encroachments, NGT is shocked by G.O. granting Velachery lake land to TNHB

அதேநேரம் 2000க்கு பிறகு அதாவது 100 அடி சாலை அமைக்கப்பட்ட பின்னர், வேளச்சேரி ஏரியில் திரவுபதி அம்மன் கோவில் தெரு, ஜகநாதபுரம், ராஜலட்சுமி நகர், வேளச்சேரி 100 அடிச்சாலை, அஷ்டலட்சுமி நகர், காமராஜர்புரம், அம்பேத்கர் நகர் ஆகிய பகுதிகளில் ஏரியை ஆக்கிரமித்து வீடுகள் வேகமாக வளர்ந்தன. ஆட்சியில் இருந்த யாருமே இதை கண்டுகொள்ளவே இல்லை.

இதன் காரணமாக 265 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்பட்ட வேளச்சேரி ஏரி தற்போது ஆக்கிரமிப்புகளால் 50 ஏக்கராக சுருங்கிக்கிடக்கிறது. ஒரு காலத்தில் வேளச்சேரி நீர்ப்பிடிப்பு பகுதியாக இருந்த நிலையில், கழிவு நீர், குப்பைகளால் மோசமான நிலையை அடைந்தது. வெறும் 20 ஆண்டுகளில் இவ்வளவும் மாறி இருந்தது.

இதனிடையே கடந்த2020-ம் ஆண்டு நாளிதழ் ஒன்றில் வேளச்சேரி ஏரியில் விடப்படும் கழிவுநீரால் ஏரி மாசுபட்டு இருப்பதாக செய்தி வெளியிட்டது. அதன் அடிப்படையில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு தாமாக முன்வந்து வழக்காகப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இது ஒருபுறம் எனில் வேளச்சேரி ஏரி பாதுகாப்பு இயக்க துணைத் தலைவர் எஸ்.குமாரதாசன் என்பவர் கடந்த 2021-ம் ஆண்டுதாக்கல் செய்த மனுவில், வேளச்சேரி ஏரியில் கழிவு நீர் கலப்பதைத் தடுக்க வேண்டும். ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று கோரியிருந்தார்.

இவ்விரு வழக்குகளையும் பசுமை தீர்ப்பாயம் ஒன்றாக விசாரித்து வருகிறது, இந்த வழக்கில் சென்னை மாவட்ட ஆட்சியர், நீர்வள ஆதாரத் துறை அதிகாரி உள்ளிட்டோரை கொண்ட கூட்டுக் குழுவை அமைத்த பசுமை தீர்ப்பாய அமர்வு, நேரில் கள ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.

அதன்படி ஆய்வு செய்து கூட்டுக்குழு தாக்கல் செய்த அறிக்கையில், வேளச்சேரி ஏரியின் உண்மையான பரப்பளவு 107.48 ஹெக்டேர் ஆகும். அரசுத்துறைகளுக்கு ஏரி பகுதிகள் ஒதுக்கப்பட்டதால் 22.4 ஹெக்டேராக குறைந்துள்ளது. இதனால் ஏரியின் நீர் கொள்திறன்4-ல் ஒரு பங்காக, அதாவது 19.23மில்லியன் கன அடியாகக் குறைந்துள்ளது. பல்வேறு வடிகால்களிலிருந்து சுத்திகரிக்கப்படாத கழிவுநீரும் ஏரியில் விடப்படுவதாக அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்குகள் கடந்த ஆண்டு மத்தியில் தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்யநாராயணா, தொழில்நுட்ப உறுப்பினர் கே.சத்யகோபால் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அவர்கள் பிறப்பித்த உத்தரவில், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், வேளச்சேரி ஏரியில் அங்கீகரிக்கப்படாமல் ஒதுக்கப்பட்ட இடத்தில் கட்டிடம் கட்டியதா, இல்லையா என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறினார்கள். மேலும் நீர்நிலையில் எப்படி கட்டிடத்தைக் கட்ட அதிகாரம் கிடைத்தது என்பது தொடர்பாக தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மாவட்ட ஆட்சியரும், நீர்வள ஆதாரதுறையும் இணைந்து, தற்போது ஏரியாக உள்ள பகுதி, ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகள் குறித்த ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் சென்னை குடிநீர் வாரியம், அப்பகுதியில் விதிகளை மீறி கழிவுநீர் விடுவோர் மீதுஎடுக்கப்பட்ட நடவடிக்கைகள், அங்குஎத்தனை அங்கீகரிக்கப்படாத, கழிவுநீர் இணைப்பு பெற முடியாத வீடுகள் உள்ளன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தது. இந்த வழக்குகள் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, வேளச்சேரி ஏரி தொடர்பாக இரண்டு அரசாணைகள் இருப்பது தெரியவந்தது.

வேளச்சேரி ஏரி பாதுகாப்பு இயக்கம் தாக்கல் செய்த மனுவில், இரண்டு அரசாணைகள் வந்தள்ளன 2022 பிப்ரவரி 8ம் தேதி வெளியான அரசாணையில் நீர்நிலைகளுக்கு முன்னுரிமை அளித்து அரசு நிலங்களை ஆக்கிரமிப்புகளிலிருந்து பாதுகாக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.அடுத்தாக ஆகஸ்ட் 9ம் தேதி 2023ல் வருவாய்துறை வெளியிட்ட அரசாணையில், 3வது குழு எடுத்த முடிவை ஏற்று ஐந்து திட்டங்களுக்காக தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு ஆதரவாக வேளச்சேரி ஏரியை ஒதுக்கித் தர அரசு உத்தரவிட்டிருக்கிறது. வேளச்சேரி தளங்கள் மற்றும் சேவைத் திட்டம், தென் சென்னை சுற்றுப்புறத் திட்டம், திருவான்மியூர் சுற்றுவட்டாரத் திட்டம், வள்ளுவர் நகர் சுற்றுப்புறத் திட்டம் மற்றும் நாவல்பட்டு திட்டம், மற்றும் என்ஹெச்எஸ் திட்டம் உள்பட ஐந்து திட்டங்களுக்காக தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு வேளச்சேரி ஏரி நிலத்தை ஒதுக்கி அரசு உத்தரவிட்டுள்ளது என்று மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த அரசாணைகளை பார்த்த தென்மண்ட தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்யநாராயணா, தொழில்நுட்ப உறுப்பினர் கே.சத்யகோபால் ஆகியோர் அமர்வு, தாங்கள் இந்த அரசாணைகளை பார்த்து ஆச்சர்யமும் அதிர்ச்சியும் அடைவதாக கூறினர்,

மேலும் இரண்டு அரசாணைகள் இப்போது எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்ட பெஞ்ச், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர், அடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டிருக்கிறது.

இந்த தொடர்பாக நீதிமன்றம் கூறுகையில், “ இது அரசாங்கத்தின் கொள்கையாக (வேளச்சேரி ஏரிநிலங்களை தருவது) இருக்கலாம் என்ற உண்மையை நாங்கள் முழுமையாக உணர்ந்துள்ளோம். ஆனால் இந்தக் கொள்கை ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவும், சுற்றுச்சூழல் நலன்களுக்குத் தீங்கு விளைவிப்பதாகவும் இருந்தால், அதில் நீதிமன்றங்கள் தலையிட முடியும். ஏற்கனவே உச்ச நீதிமன்றம் நீர்நிலைகள் பயன்பாட்டில் இல்லாமல் இருந்தாலும் அவற்றை மாற்ற தடை விதித்திருக்கிறது" என்று கூறியது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் பிப்ரவரி 21ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+