சென்னையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்! திணறிய வாகன ஓட்டிகள்.. அதிகாலையில் கடுமையான பனிப்பொழிவு
சென்னை: தலைநகர் சென்னையில் இன்று மூன்றாவது நாளாக காலை நேரத்தில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.
பிப்ரவரி மாதம் வந்துவிட்ட போதிலும் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் பனிமூட்டம் தொடர்ந்தே வருகிறது. அதிலும் குறிப்பாக அதிகாலை நேரத்தில் பனிமூட்டம் அதிகமாகவே இருந்தது.
கடந்த சில நாட்களாகவே சென்னையில் பனிமூட்டம் இருந்து வருகிறது. அதிகாலை நேரத்தில் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பனிமூட்டம் அதிகமாக இருக்கிறது.

கடுமையான பனிப்பொழிவு
இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே மூன்றாவது நாளாக இன்றும் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கடுமையான பனிப்பொழிவு நிலவுகிறது. சென்னையின் நகர்ப்புறங்களில் மட்டுமின்றி சென்னை புறநகர்ப் பகுதிகளிலும் பனிப்பொழிவு அதிகமாக இருந்தது. அதேபோல திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் பனிப்பொழிவு அதிகமாக உள்ளது.

கடும் சிரமம்
பனிப்பொழிவு காரணமாக நடைப்பயிற்சி, சைக்கிளிங் மேற்கொள்பவர்கள் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். மேலும், பனிப்பொழிவு காரணமாக்க வாகன ஓட்டிகளும் மெதுவான வேகத்திலேயே வாகனங்களை ஓட்டினர். முக்கிய சாலைகளிலும் கூட பனி மூட்டம் இருப்பதால், வாகன ஓட்டிகள் வாகனத்தை ஓட்டிச் செல்வதில் கூட சிரமத்தை எதிர்கொண்டு உள்ளனர். இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை ஒளிரவிட்டபடியே வாகனத்தை ஓட்டிச் செல்கின்றனர்.

விமான நிலையம்
நேற்றைய தினம் இந்த கடுமையான பனிப்பொழிவு காரணமாகச் சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் புறப்படுவதிலும் தாமதம் ஏற்பட்டது. அதிகாலை நேரத்தில் பனிமூட்டம் காரணமாக விமானங்கள் தாமதமாகவே புறப்பட்டுச் சென்றது. இன்றும் சென்னையில் விமானச் சேவை பாதிக்கப்படலாம்.. அதேபோல வானிலையைப் பொறுத்தவரைத் தமிழ்நாடு மற்றும் புதுவையில் பிப்ரவரி 8 முதல் 12 வரை வறண்ட வானிலை நிலவும் என்று கூறப்பட்டுள்ளது.

வானிலை மையம்
தலைநகர் சென்னையில் அடுத்த சில நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்றும் மழைக்கு வாய்ப்பு இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பனிமூட்டம் சற்று கடுமையாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. கோடைக் காலம் நெருங்கி வரும் நிலையில், இந்தாண்டும் கடுமையான வெயில் இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications