முதல்வர் விஜய்யின் தவெக அரசு ரத்து செய்த திட்டங்கள்.. கிடப்பில் உள்ள திட்டங்கள் விவரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் விஜய் தலைமையிலான புதிய தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு நிறுத்தப்பட்ட அல்லது நிலை என்னவென்று தெரியாத திட்டங்களின் பட்டியலை சென்னை அப்டேட்ஸ் என்ற பயரில் உள்ள நெட்டிசன் ஒருவர் வெளியிட்டுள்ளார். அந்த பட்டியலில் சுமார் ஒன்பது திட்டங்கள் இடம் பெற்றுள்ளது. குறிப்பாக பரந்தூர் விமான நிலையம், பரந்தூர் மெட்ரோ ரயில் திட்டம், செம்மஞ்சேரி விளையாட்டு நகரத்திட்டம், இசிஆர் மேம்பாலம் ரத்து, வேளச்சேரி மேம்பாலம் ரத்து போன்றவை இடம் பெற்றுள்ளன.

1. பரந்தூர் விமான நிலையம் விடப்பட்டது

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் கட்டப்படவிருந்து சுமார் 5000 ஏக்கர் பரப்பளவிலான விமான நிலையம் ரத்து செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளின் நிலத்தை அழித்து விமான நிலையத்தை அமைக்க அரசு விரும்பவில்லை என்று கூறி ரத்து செய்துள்ளார் முதல்வர் விஜய். அதற்கு பதில் விவசாயிகளை அதிகம் பாதிக்காத இடத்தை பார்த்து வருவதாகவும் சட்டசபையில் முதல்வர் விஜய் கூறினார். முதல்வர் விஜய்யின் இந்த அறிவிப்பால் இன்னும் ஒரு 10 ஆண்டுகள் விமான நிலையம் அமைவது தள்ளிப்போவது உறுதி என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. கிட்டத்தட்ட 20ஆண்டுகள் தள்ளிபோய்விடும் அபாயம் உள்ளதாகவும் கூறுகிறார்கள்.

Details of schemes cancelled or put on hold by Chief Minister Vijay s TVK government

2. பரந்தூர் வரையிலான மெட்ரோ ரயில் விரிவாக்கம் - ரத்து

தற்போது சென்னை மெட்ரோ ரயில் கலங்கரை விளக்கம் தொடங்கி பூந்தமல்லி வரை பணிகள் விறுவிறுப்பாக நடக்கிறது. குறிப்பாக வடபழனி மற்றும் பூந்தமல்லி இடையே ரயில் ஓடுவதற்கே தயாராக உள்ளது. இந்த சூழலில் பூந்தமல்லி முதல் பரந்தூர் வரை சுமார் 52 கி.மீ தூரத்திற்கு மெட்ரோ ரயிலை நீட்டிக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது விமான நிலையம் ரத்து செய்யப்பட்டதால், வெறும் 28 கிமீ தூரம் வரை உள்ள சுங்குவார்சத்திரம் வரை மெட்ரோ ரயில் நீடிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

3. விளையாட்டு நகரம் - நிறுத்தப்பட்டது

சென்னை 'குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி' திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. செம்மஞ்சேரியில் அமையவிருந்த இந்த விளையாட்டு நகரத்தின் முதல் கட்டப் பணிகளை மேற்கொள்ள RPP Infra நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருந்த உத்தரவை தமிழக அரசு ரத்து செய்துள்ளது. ஆசிய விளையாட்டுப் போட்டிகள் போன்ற பிரம்மாண்டமான நிகழ்வுகளை நடத்தும் வகையில் இத்திட்டத்தை மறுவடிவமைப்பு செய்ய அரசு விரும்புவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

4. ECR மேம்பாலம் - நிறுத்தப்பட்டது

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை திட்டமிடப்பட்டிருந்த ரூ.2,100 கோடி மதிப்பிலான உயர்மட்ட மேம்பாலச் சாலைத் திட்டத்தை முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு ரத்து செய்துள்ளது. முறைகேடுகள் மற்றும் அதிக செலவு போன்ற புகார்கள் காரமாணக திட்டத்தை ரத்து செய்திருக்கிறது,

5. கிண்டி-வேளச்சேரி மேம்பாலம் - நிறுத்தப்பட்டது

கிண்டி - வேளச்சேரி மேம்பாலத் திட்டம் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துடன் ஏற்பட்ட பாதை அமைப்பில் ஏற்பட்ட சிக்கல்கள் மற்றும் நிதி ஒதுக்கீடு காரணங்களால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. இதனை விஜய் தலைமையிலான தவெக அரசு இந்த திட்டத்தையே ரத்து செய்துள்ளது. இந்த பாலம் வேளச்சேரி பீனிக்ஸ் மால் பகுதியில் உள்ள குருநானக் கல்லூரியில் தொடங்கி வேளச்சேரி செக்போஸ்ட் தாண்டி நெரிசலான இடத்தில் அமைவதாக இருந்தது. இப்போது மொத்த திட்டமும் மெட்ரோ ரயில் பாதை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

6. கோயம்புத்தூர் பெரியார் நூலகம் - தயாராக உள்ளது, ஆனால் திறப்பு விழாவுக்கான அறிகுறி இல்லை

சென்னையில் அண்ணா நூலகம், மதுரை கலைஞர் நூலகம் உள்ளது போல கோவை காந்திபுரத்தில் உள்ள அனுப்பர்பாளையம் பகுதியில் ரூ.300 கோடி மதிப்பில் 8 தளங்களுடன் 1,98,000 சதுரடி பரப்பில் நூலகம் மற்றும் அறிவியல் மையம் கட்டப்பட்டிருக்கிறது. நூலகம்பணிகள் முடிந்து தயார் நிலையில் உள்ளது. திறப்பு விழாவிற்கான அறிகுறிகள் இன்னும் வரவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.

7. ஓசூர் டைடல் பார்க் -வடிவமைப்பு தயார், சுற்றுச்சூழல் அனுமதி கோரப்பட்டுள்ளது; ஆனால் ஒப்பந்தப்புள்ளி நிலையிலேயே தேங்கியுள்ளது.

ஓசூர் அந்திவாடி மைதானம் அருகில் ஓசூர் டைடல் பார்க் அமைக்கப்பட உள்ளது. சுமார் ரூ.400 கோடியில் தரைதளம் மற்றும் ஒன்பது தளங்களுடன், 5.50 லட்சம் சதுர அடியில் டைடல் பார்க் கட்டுவதற்கு, ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்ய டெண்டர் கோரப்பட்டிருந்தது. ஆனால் அப்படியே தேக்கநிலையில் உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

8. ஓசூர் அறிவுசார் வழித்தடம் - பணிகள் எதுவும் தொடங்கப்படவில்லை

9. கோயம்புத்தூர் கிரிக்கெட் மைதானம் - ஒப்பந்தம் கோர யாரும் முன்வரவில்லை

இதில் கிழக்கு கடற்கரை சாலை மற்றும் வேளச்சேரி மேம்பாலம் போன்ற தேவையற்ற திட்டங்களைக் கைவிடுவது புத்திசாலித்தனமானதுதான் என்று கூறியிருந்த நெட்டிசன், ஆனால் ஒட்டுமொத்தப் பட்டியலைப் பார்க்கும்போது நிலைமை நம்பிக்கையூட்டுவதாக இல்லை என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+