சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி
சென்னை: வரும் ஏப்ரல் 23ம் தேதி தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் நடைபெற போகிறது.. யார் ஆட்சியை பிடிப்பது என்பதில் அதிமுக, திமுக, தவெக, நாம் தமிழர் என நான்கு முனை போட்டி நிலவுகிறது. இன்று அதிமுக கூட்டணியில் தொகுதி உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் எந்த கட்சி எந்த தொகுதி என்ற விவரங்கள் வெளியாகி உள்ளது. இதில் சென்னையில் மொத்தம் உள்ள 16 தொகுதிகளில் 13 தொகுதிகளில் அதிமுக நேரடியாக போட்டியிடுகிறது. கூட்டணி கட்சிகளுக்கு 3 தொகுதிகளை அதிமுக ஒதுக்கி உள்ளது.
சட்டசபை தேர்தலில் அதிமுக திமுக இடையே எப்போதுமே கடுமையான போட்டி இருக்கும். இந்த முறையும் கடுமையான போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த முறை திமுக ஆட்சியை கைப்பற்ற சென்னை, வட மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் முக்கிய பங்கு வகித்தன.குறிப்பாக சென்னையில் மொத்தம் உள்ள 16 தொகுதிகளிலும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளே வென்றன.

எனினும் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தான் தி நகர் மற்றும் வேளச்சேரியில் அதிமுக தோற்றுப்போனது. குறிப்பாக தி நகரில் 137 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றது. வேளச்சேரியில் 4,352 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் கட்சியிடம் வெற்றி வாய்ப்பை அதிமுக இழந்தது. விருகம்பாக்கத்தில் 18 ஆயிரம் வாக்குகள், மயிலாப்பூரில் 12 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை அதிமுக இழந்திருந்தது.
இந்நிலையில் அதிமுக இந்த முறை சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் 13 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்
ஆர்கே நகர்
கொளத்தூர்
வில்லிவாக்கம்
திருவிக நகர் (தனி)
எழும்பூர் (தனி)
ராயபுரம்
துறைமுகம்
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி
ஆயிரம் விளக்கு
அண்ணாநகர்
விருகம்பாக்கம்
தியாகராய நகர்
வேளச்சேரி
கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள்
மயிலாப்பூர் (பாஜக)
சைதாப்பேட்டை(அமமுக)
பெரம்பூர்(பாமக)
சென்னையின் புறநகர் பகுதியை பொறுத்தவரை பல்லாவரத்தில் பாரிவேந்தரின் ஐஜேகே போட்டியிடுகிறது.. பூந்தமல்லியில் அமமுக போட்டியிடுகிறது. அம்பத்தூர் திருப்போரூரில் பாமக போட்டியிடுகிறது.. ஆலந்தூர், தாம்பரம், செங்கல்பட்டு,சோழிங்கநல்லூரில் அதிமுக நேரடியாக களம் இறங்குகிறது. ஆவடியில் பாஜக போட்டியிடுகிறது.












Click it and Unblock the Notifications