போலீஸ் ஏஎஸ்பி, டிஎஸ்பிக்கள் அதிரடி பணியிட மாற்றம்.. டிஜிபி சங்கர் ஜிவால் போட்ட உத்தரவு!
சென்னை: தமிழ்நாட்டில் 9 டிஎஸ்பிக்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மதுரை, விருதுநகர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் டி.எஸ்.பிக்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சட்டம் ஒழுங்கு சிக்கல்: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 67 பேர் பலியான சம்பவம் அண்மையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும், கடலூர், சேலம், மதுரை உள்ளிட்ட இடங்களில் அரசியல் கட்சி பிரமுகர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவங்கள் பரபரப்பை எகிற வைத்தன.
தலைநகர் சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், ஒரு கும்பலால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர வைத்தது. கொலை குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், சட்டம் ஒழுங்கு சீர்கெட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
காவல்துறையில் அதிரடி மாற்றங்கள்: இந்நிலையில், தமிழக காவல்துறையில் பல்வேறு மட்டங்களிலும் அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டு வருகின்றனர். சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு சென்னை மாநகரின் புதிய காவல் ஆணையராக ஏடிஜிபி அருண் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டார்.
அதேபோல, சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதம் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டார். உள்துறை செயலாளராக இருந்த அமுதா ஐஏஎஸ் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக தீரஜ் குமார் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டார். தொடர்ந்து, காவல்துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றனர்.
ஏஎஸ்பி, டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம்: அந்தவகையில் தமிழ்நாட்டில் ஏஎஸ்பி, டிஎஸ்பி உள்ளிட்ட 9 காவல்துறை அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை டிஜிபி சங்கர் ஜிவால் பிறப்பித்துள்ளார்.
யார் யார் எங்கே?: தமிழ்நாடு காவல் அகாடமி கூடுதல் காவல் கண்காணிப்பாளராக முத்து மாணிக்கம் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ராஜபாளையம் துணை காவல் கண்காணிப்பாளராக பிரீத்தி நியமனம். மேலூர் துணை காவல் கண்காணிப்பாளராக வேல்முருகன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு காவல் அகாடமி துணை கண்காணிப்பாளராக யாஸ்மின் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஊமச்சிக்குளம் துணை காவல் கண்காணிப்பாளராக பாலசுந்தரம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி கூடுதல் காவல் கண்காணிப்பாளராக குத்தாலிங்கம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தாம்பரம் மணிமங்கலம் சரக உதவி காவல் ஆணையராக இளஞ்செழியன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஈரோடு குடிமைப் பொருள் வழங்கல் சிஐடி பிரிவு துணை காவல் கண்காணிப்பாளராக ராஜபாண்டியன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
-
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications