சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மார்க் குறைஞ்சா என்ன? நீதிபதி, ஐஏஎஸ் ஆகலாம்! மனம் வருந்த வேண்டாம்! டிஜிபி சைலேந்திர பாபு அட்வைஸ்..!

Google Oneindia Tamil News

சென்னை : 10 மற்றும் 12ம் வகுப்பில் தேர்ச்சியடைந்த மாணவர்களுக்கு தமிழக காவல்துறை சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துள்ள தமிழக டிஜிபி சைலேந்திர பாபு, தோல்வியடைந்த மாணவர்கள் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் துணைத்தேர்வு எழுது வெற்றிபெறலாம் என்று அறிவுறை வழங்கியுள்ளார்.

Recommended Video

    மார்க் குறைஞ்சா என்ன? நீதிபதி, ஐஏஎஸ் ஆகலாம்! மனம் வருந்த வேண்டாம் - டிஜிபி சைலேந்திர பாபு

    தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கடந்த மே 5 முதல் 30ஆம் தேதி வரை நடந்தது.

    100க்கு 100... பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி தேர்வில் அனைவரும் தேர்ச்சி... கோவை மத்திய சிறை கைதிகள் அசத்தல் 100க்கு 100... பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி தேர்வில் அனைவரும் தேர்ச்சி... கோவை மத்திய சிறை கைதிகள் அசத்தல்

    12ஆம் வகுப்பு தேர்வை 8.3 லட்சம் பேர், 10-ம் வகுப்பு தேர்வை 9.5 லட்சம் பேர் என மொத்தம் 17.8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனர்.

    தேர்வு முடிவுகள்

    தேர்வு முடிவுகள்

    இதனிடையே 10, 12ஆம் வகுப்பு களுக்கான தேர்வு முடிவுகள் இன்று ஒரே நாளில் வெளியிடப்பட்டது. 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் காலை 9.30 மணிக்கும், 10ஆம் வகுப்புக்கு மதியம் 12 மணிக்கும் முடிவுகள் வெளியாகும். சென்னையில் தேர்வுமுடிவுகளை பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டார். தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் சில இடங்களில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

     டிஜிபி சைலேந்திர பாபு

    டிஜிபி சைலேந்திர பாபு

    இந்நிலையில் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு தோல்வியடைந்த மாணவர்கள் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் துணைத்தேர்வு எழுது வெற்றிபெறலாம் என்று அறிவுறை வழங்கியுள்ளார். இது குறித்து வீடியோ வெளியிட்டுள்ள சைலேந்திர பாபு," பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் மனம் தளர வேண்டாம், தோல்வியடைந்த மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும். அதில் அதிக மதிப்பெண்கள் பெறலாம். பொதுத் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் பலர் மறுதேர்வு எழுதி நீதிபதி, ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளாக பணியாற்றி வருகின்றனர்.

    நீதிபதி ஆகலாம்

    நீதிபதி ஆகலாம்

    தேர்வில் மிகக் குறைந்த மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் கூட தொழிற்கல்வியை தேர்தெடுத்து அதில் சாதிக்கலாம். எஞ்சினியரிங், சினிமா, மார்கெட்டிங் உள்ளிட்ட பல துறைகளில் ஆயிரக்கணக்கான வாய்ப்புகள் இருக்கிறது. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் பலர் நீதிபதியாகவும், ஐபி.எஸ், ஐ.ஏ.எஸ் அதிகாரிகளாகவும் ஆகியுள்ளனர்.

    கவுன்சிலிங் பெறலாம்

    கவுன்சிலிங் பெறலாம்

    கடந்த முறை பொதுத்தேர்வில் தோல்வியடைந்த பல மாணவர்கள் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டனர். ஆனால் இம்முறை அவ்வாறு நடக்கக் கூடாது. தற்கொலை செய்துக்கொள்ளும் எண்ணம் உள்ள மாணவர்கள் காவல் நிலையத்தை அணுகி கவுன்சிலிங் பெறலாம்" என கூறியுள்ளார். இந்த வீடியோவை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

    English summary
    Congratulating the 10th and 12th class students on behalf of the Tamil Nadu Police, Tamil Nadu dgp sylendra babu advised the failing students to be confident and write the re exams so that they can succeed.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X