சர்க்கரை நோயாளிகளுக்கு சர்ப்ரைஸ்.. ஸ்ரீரங்கம் டூ பழனி 17 கோயில்கள்! அன்னதானத்தில் தமிழக அரசு மாற்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோவிலுக்கு போகும் பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னதானம் மற்றும் பிரசாதம் இரண்டிலும் மிக முக்கியமான மாற்றங்களை கொண்டுவர தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முக்கியமாக, முதியவர்கள் மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற ஆரோக்கியமான உணவு முறைகள் முதல், பிரசாதத்தின் தரம், விலை மற்றும் பேக்கிங் வரை புதிய நடைமுறைகள் வரவுள்ளன.

நம்முடைய தமிழகத்திலுள்ள கோவில்களில் அன்னதானமாக வழக்கமாக சாதமும் அதனுடன் சில உணவு வகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால், முதியவர்கள் மற்றும் சர்க்கரை நோயாளிகள் பலர் இந்த சாப்பாட்டை சாப்பிட முடியாத நிலைமை உள்ளது.

Temple Annadhanam Diabetic-Friendly Meals Srirangam Temple

அதனால்தான், அவர்களுக்கும் ஏற்ற சத்தான மற்றும் ஆரோக்கியமான உணவு வகைகளை அன்னதானத்தில் சேர்க்க இந்து சமய அறநிலையத்துறை திட்டமிட்டுள்ளது. ஸ்ரீரங்கம், பழனி, திருவண்ணாமலை, திருச்செந்தூர் உள்ளிட்ட 17 முக்கிய கோவில்களில் இந்த திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஆலோசனைகள் நடந்து வருகிறதாம்.. அதுமட்டுமல்ல, இப்போது வழங்கப்படும் உணவுடன் காலை மற்றும் இரவு உணவுகளையும் சேர்ப்பது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரசாதம் - தரக்கட்டுப்பாடு

அன்னதான சீரமைப்பு ஒருபுறமிருக்க, மறுபுறம் கோவில் பிரசாதங்களின் தரம் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்தும் புதிய திட்டமும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் தொடக்கமாக சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோயிலில் புதிய பிரசாதத் திட்டத்தை அமைச்சர் எஸ்.ரமேஷ் முறைப்படி தொடங்கி வைத்தார்.

பொதுவாக கோவில்களில் பிரசாத விற்பனை கடைகளை நடத்தும் உரிமம் பகிரங்கப் பொது ஏலம் மூலம் தனியார் ஒப்பந்தக்காரர்களுக்கு வழங்கப்படுவது வழக்கம்... அப்படி ஏலம் எடுக்கும் ஒப்பந்தக்காரர்கள், கோவில் வளாகத்திற்கு வெளியே பிரசாதங்களை சமைத்து விற்பனை செய்து வந்தனர். ஆனால், இத்தகைய நடைமுறையில் பிரசாதங்களின் தரம் மற்றும் சுகாதாரம் குறித்து பல்வேறு தரப்பிலும் கேள்விகள் எழுப்பப்பட்டு வந்தன.

37 முக்கிய திருக்கோயில்கள்

இந்த சிக்கல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இனி தனியார் ஒப்பந்தக்காரர்களை சார்ந்திருக்காமல், அந்தந்த திருக்கோயில் நிர்வாகங்களே தங்கள் சொந்த வளாகத்திற்குள்ளேயே பிரசாதங்களை தயாரித்து வழங்க வேண்டும் என்ற திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த திட்டம் இப்போதைக்கு முதற்கட்டமாக தமிழகம் முழுவதும் உள்ள 37 முக்கிய திருக்கோயில்களில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலை சுவாமிநாத சுவாமி திருக்கோயில் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டம் தேக்கம்பட்டி வனபத்ரகாளியம்மன் திருக்கோயில் உள்ளிட்ட பல திருத்தலங்களில் இம்முறை ஏற்கனவே நடைமுறைக்கு வந்து பக்தர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

விலை & பேக்கிங் கட்டுப்பாடுகள்

அதேபோல, கோவில்களில் வழங்கப்படும் 10 வகையான பிரசாதங்களுக்கான மூலப்பொருட்கள், தயாரிப்பு செலவு, அளவு மற்றும் விற்பனை விலை ஆகியவற்றை முறைப்படுத்தும் திட்டமும் கொண்டுவரப்பட்டுள்ளது. பிரசாதம் தயாரிக்க சான்றளிக்கப்பட்ட ஆவின் நெய் மற்றும் கூட்டுறவுப் பண்டகசாலைகளில் வாங்கப்படும் தரமான பொருட்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

சுற்றுச்சூழலுக்கு உகந்த இலைத் தட்டுகள் மற்றும் சீல் செய்யப்பட்ட பெட்டிகள் மூலம் பிரசாதங்கள் வழங்கப்பட வேண்டும். மேலும், பேக்கிங் செய்யப்பட்ட பிரசாதங்களில் தயாரிப்பவர் பெயர், முகவரி, நிகர எடை, தயாரித்த தேதி, காலாவதி தேதி, அதிகபட்ச சில்லறை விலை மற்றும் நுகர்வோர் புகார் தெரிவிப்பதற்கான தொடர்பு விவரங்கள் போன்ற அனைத்து தகவல்களும் தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

அமைச்சர் ரமேஷ் பேட்டி

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் எஸ்.ரமேஷ், "திருக்கோயில்களுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு உயர்தரமான, சுத்தமான மற்றும் தரமான பிரசாதங்கள் கிடைப்பதை உறுதி செய்வதே இந்த திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.

கோயில்களில் வழங்கப்படும் 10 பொதுவான பிரசாதங்களுக்கு தேவையான மூலப்பொருட்கள், உற்பத்தி செலவு, அளவு மற்றும் சில்லறை விற்பனை விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் தரம், விலை மற்றும் சுகாதாரத்தில் சீரான தன்மை உறுதி செய்யப்படும்.

பிரசாதம் தயாரிப்பு

பிரசாதத்தின் தரம் குறித்து நீண்ட நாட்களாக புகார்கள் இருந்து வந்த நிலையில், ஒப்பந்தக்காரர்கள் தயாரித்து வழங்கும் முறைக்கு மாற்றாக, தகுந்த வசதியுள்ள கோயில்களிலேயே நேரடியாக பிரசாதம் தயாரிக்க ஊக்கமளிக்கப்படும்.

பிரசாத தயாரிப்புக்கு சான்றளிக்கப்பட்ட ஆவின் நெய் மற்றும் கூட்டுறவுப் பண்டகசாலைகளில் கொள்முதல் செய்யப்படும் தரமான பொருட்கள் பயன்படுத்தப்படும். மேலும், சுற்றுச்சூழல் உகந்த இலைத் தட்டுகள், சீல் செய்யப்பட்ட பெட்டிகள் மூலம் பிரசாதங்கள் வழங்கப்பட உள்ளன.

பேக்கிங் செய்யப்பட்ட பிரசாதங்களில் உற்பத்தி தேதி, காலாவதி தேதி, நிகர எடை மற்றும் அதிகபட்ச சில்லறை விலை போன்ற விவரங்களை நுகர்வோர் பாதுகாப்பு விதிகளின்படி தெளிவாகக் குறிப்பிட வேண்டும் என்று கோயில்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என்றார்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+