Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வசீகரன் வந்துட்டாரு.. மண்ணை அள்ளி போட்டுக்கிட்ட பாஜக.. மோடி கைதாகாவிட்டால் கோர்ட்டுக்கு போக போறாராமே

Subscribe to Oneindia Tamil

சென்னை: "பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், நானே கோர்ட்டுக்கு போக போறேன்" என்று சீறியிருக்கிறார் ஆம் ஆத்மியின் வசீகரன்.. என்ன நடந்தது?

பிரதமர் நரேந்திர மோடி ராஜஸ்தானில் பேசிய சர்ச்சை பேச்சு குறித்து, தேசிய அளவில் மிகப்பெரிய எதிர்ப்பு கிளம்பி வருகிறது.. விசிக தேசிய தலைவர்கள் தமிழக தலைவர்கள் வரை தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள்.

Did Aam Aadmi party Vashikaran slam BJP PM Modi and will file a case against the Prime Minister if no action is taken

தமிழகத்தில், தலைவர் திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி பேராசிரியர் ஜவாஹிருல்லா, மூத்த தலைவர் கி.வீரமணி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிடட பல்வேறு தலைவர்கள் தேர்தல் ஆணையத்திடம் இதுகுறித்து கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.

வீரமணி: பிரதமர் மீது என்ன நடவடிக்கை எடுக்க போகிறது என்று கி.வீரமணி கேட்டுள்ளார்.. நாட்டின் பிரதமர் என்ற உயர்ந்த இடத்திற்கு வந்த பிறகும் தனது ரத்த அணுக்களில் ஊடுருவியுள்ள முஸ்லிம் வெறுப்பைக் கக்கி உள்ளார் என்று வைகோ கடும் கோபத்தை பதிவு செய்துள்ளார்.
ஏஐஎம்ஐ கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி, "நாங்கள் என்ன ஊடுருவல்காரர்களா? அதிக குழந்தைகளுடன் உள்ளவர்களா? வாஜ்பாய்க்கு உடன் பிறந்தவர்கள் எத்தனை பேர் என்று உங்களுக்கு தெரியுமா? யோகி ஆதித்யநாத்துடன் உடன்பிறந்தவர்களின் எண்ணிக்கை 7 பேர்.. அமித்ஷாவுடன் உடன் பிறந்தவர்கள் 7 பேர், மோடி மற்றும் அவருடன் உடன் பிறந்தவர்கள் 6 பேர்..

தாஜ்மஹால்: தாஜ்மகால், குதுப் மினார், செங்கோட்டை, ஜமா மஸ்ஜித் ஆகியவற்றை இந்த நாட்டுக்காக தந்தவர்கள் நாங்கள். தேசத்தை நாங்கள் அலங்காரப்படுத்தினோம். நாங்கள் ஊடுருவல்காரர்கள் இல்லை. இந்த தேசத்தை சேர்ந்தவர்கள்தான்.. இந்த நாடு எங்களுடையது.. இந்த தேசம் நம்முடையது, நம்முடையதாக இருக்கும்" என்று ஆக்ரோஷ கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

இப்படிப்பட்ட சூழலில், ஆம் ஆத்மியும் அதிரடியை காட்டியுள்ளது.. மதவாதத்தை உண்டாக்கும் வகையில் பேசி வரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆம்ஆத்மி கட்சி சார்பில் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் தரப்பட்டுள்ளது.. பிறகு செய்தியாளர்களிடம் ஆம் ஆத்மி கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் வசீகரன் பேசியதாவது:

பிரச்சாரம்: "பிரதமர் மோடி அரசியல் சாசன சட்டதையும், தேர்தல் விதிகளையும் மீறியுள்ளார்... பாரத பிரதமராக தலைமை பொறுப்பில் இருப்பவர் மக்களிடையே பிரிவினையை தூண்டும் விதமாக பேசலாமா? பிரச்சாரம் என்ற பெயரில் விஷத்தை கக்கியுள்ள மோடியை தேர்தல் ஆணையம் கைது செய்ய வேண்டும். தேர்தலில் பாஜக தோல்வி உறுதி செய்யப்பட்டு விட்டதால் இதுபோன்று இறையாண்மையை பாதிக்கும் வகையில் அவர் பேசி வருகிறார்.

தமிழகத்தில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தென்னிந்தியாவிலும் நம்மை யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை மோடி தெளிவாகவே புரிந்து கொண்டுவிட்டார்.. பாஜகவுக்கு வெற்றி கிடைக்காது என்பதையும் நன்றாகவே அறிந்து கொண்டுவிட்டார்.. அன்று நடத்திய குஜராத் கலவரத்தை போல, அன்று நடத்திய மணிப்பூர் கலவலத்தை போல, தொடர்ந்து கலவரங்களை செய்தே பழக்கப்பட்ட மோடி, இந்த முறையும் எப்படியாவது ஆட்சியை பிடிக்க இப்படியெல்லாம் பேசிவருகிறார்..

மதச்சார்பற்ற நாடு: இந்த நாட்டை கலவர பூமியாக மாற்ற முயற்சித்து கொண்டிருக்கிறார்கள்.. இது ஒரு மதச்சார்பற்ற நாடு.. ஜனநாயக நாடு.. அப்படியிருக்கும்போது பொறுப்புள்ள பிரதமரே இப்படி பேசுவதும், மக்களை பிரிப்பதும், ஒரு சமூகத்தையே, குற்ற சமூகமாக மாற்றுவதும் எந்த விதத்தில் நல்லது?

முதலில் இவரை கைது செய்யணும்? இதையே சாதாரண மனிதன் செய்திருந்தால் கைது செய்திருப்பீர்கள்தானே? இங்கே சட்டம் அனைவருக்கும் ஒன்றுதானே? பிரதமரை ஏன் இதுவரை கைது செய்யவில்லை? ஒரு கேவலமான, ஒரு அருவெறுக்கத்தக்க, மக்களுக்கு விரோதமான செயலை பிரதமரே செய்திருக்கிறாரே, ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.

மதவெறி: ஊழலில் கொழுத்து போயிருக்கிற, மதவெறிப்பிடித்து அலைகிற பாஜகவை கண்டித்து, உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், இந்த விஷம பேச்சுக்கள் அடுத்துவரும் நம்முடைய சந்ததிகளையே பாதித்துவிடும்.. காவல்துறை மற்றும் தேர்தல் ஆணையம் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால், நான் நீதிமன்றத்தை நாடவுள்ளேன்.

எப்படியும் இந்த முறை பாஜக 150 சீட் பிடிக்கும் என்று நினைத்தேன்.. டெல்லியில் 7 இடத்தையாவது பிடிப்பார்கள் என்று நினைத்தேன்.. ஆனால், அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்தபிறகு, இப்படியெல்லாம் தரம் தாழ்ந்து பிரதமர் பேசியபிறகு, யானை தன் மீது மண்ணை அள்ளிக் போட்டுக் கொண்டதுபோலதான் நடக்க போகிறது" என்று ஆவேசமாக கூறியிருக்கிறார் வசீகரன்.

ஒன் இந்தியா: இங்கே ஒரு விஷயத்தை நாம் நினைவுகூர வேண்டியிருக்கிறது.. 4 வருடங்களுக்கு முன்பு நம்முடைய "ஒன் இந்தியா தமிழுக்கு" வசீகரனை பேட்டி காண நேர்ந்தது.. அப்போது, ஆளும் பாஜக குறித்து கேள்வி எழுப்பியற்கு வசீகரன் சொன்ன பதிலை பாருங்கள்.

"பாஜகவின் அடுத்தடுத்த சறுக்கலுக்கு காரணம் அவர்களது மத அரசியல்தான்.. வெறுப்பு அரசியல் மக்களிடம் எடுபடவில்லை.. இனியும் எடுபடாது.. பாஜக எப்போதுமே, தங்களுக்கு கிடைக்கும் தேர்தல் தோல்விகளை வைத்து, ஒரு பாடமாக எடுத்து கொண்டு, சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்..

அப்படி செய்தால்தான் அவர்கள் நல்ல நிலைமைக்கு வர முடியும்.. இல்லையென்றால் இந்தியா பூராவும் இப்படி ஒரு சூழலைதான் தொடர்ந்து சந்திப்பார்கள்.. மக்களின் வெறுப்புக்கும் ஆளாவார்கள்" என்று அன்றே கூறியிருந்தார் வசீகரன்.. இதைத்தான் இன்றும் சொல்லியுள்ளார்..!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+