சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கிளைமாக்ஸ்.. "கோடி கோடியாய் பணம்".. எடப்பாடி சொன்ன அந்த வார்த்தை.. சண்முகத்தை டக்கென பார்த்த அமித்ஷா

எடப்பாடி அமித்ஷாவை சந்தித்து என்ன பேசினார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன

Google Oneindia Tamil News

சென்னை: டெல்லியில் எடப்பாடி பழனிசாமி, அமித்ஷாவை சந்தித்து என்ன பேசினார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.

டெல்லி நார்த் பிளாக்கில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவரது அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி, வேலுமணி, சி.வி. சண்முகம் ஆகியோர் சந்தித்து பேசினர்.

சுமார் 30 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பு குறித்து பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, இது ஒரு மாியாதை நிமித்தமான சந்திப்புதான் என்றும் அமித் ஷாவிடம் அரசியல் ஏதும் பேசவில்லை என்றும் கூறியிருந்தார்.

இதென்ன புதுக்கதை.. 'இடைத்தேர்தல்?’ - எடப்பாடி போடும் 'மாஸ்டர்' பிளான்.. க்ளூ கொடுத்த உதயகுமார்!இதென்ன புதுக்கதை.. 'இடைத்தேர்தல்?’ - எடப்பாடி போடும் 'மாஸ்டர்' பிளான்.. க்ளூ கொடுத்த உதயகுமார்!

 ப்ளான் இதுதான்

ப்ளான் இதுதான்

ஆனாலும், இது முழுக்க முழுக்க அரசியல் சந்திப்புதான் என்பதை அரசியல் நோக்கர்கள் அழுத்தம் திருத்தமாக கூறி வருகிறார்கள்.. இதனிடையே, மத்திய அமைச்சர் அமித்ஷாவை எடப்பாடி டீம் ஏன் சந்தித்தார்கள் என்று உறுதியாக தெரியாவிட்டாலும், அது தொடர்பான செய்திகளும் தினமும் கசிந்து வந்து கொண்டிருக்கின்றன.. அந்தவகையில், நமக்கும் சில சோர்ஸ்கள் தகவல்கள் கிடைத்துள்ளன.. அமித்ஷாவுடனான இந்த சந்திப்பு சுமூகமாகவே இருந்துள்ளது.. முதலாவதாக, திமுகவுக்கு எதிரான புகார்கள் அமித்ஷாவிடம் தரப்பட்டுள்ளன.

 ஃபைல்கள்

ஃபைல்கள்

அதாவது, திமுக அமைச்சர்கள் மற்றும் ஸ்டாலின் குடும்பத்தினர் ஆகியோர்களுக்கு எதிராக சேகரிக்கப்பட்ட தகவல்கள், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சூழல்கள் ஆகியவைகள் அடங்கிய ஃபைல்களை அமித்ஷாவிடம் கொடுத்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி... அதுமட்டுமல்ல, அதிமுக தலைவர்களுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை வைத்து வைத்து ரெய்டு என்கிற டார்ச்சரை செய்து வருகிறார் ஸ்டாலின், ஆனால், அவரது ஆட்சியில் அமைச்சர்களும் அவரது குடும்பத்தினரும் குவித்து வைக்கும் கோடிகள் குறித்த விவரங்கள் இருக்கிறது.

 ரூலிங் பார்ட்டி

ரூலிங் பார்ட்டி

இதை வைத்து இன்கம் டாக்ஸ் ரெய்டுகளை மத்திய அரசு துவக்க வேண்டும் என்று கூடுதலாக ஒரு கோரிக்கை வைத்தாராம் எடப்பாடி. அதைக் கேட்டுக்கொண்ட அமித்ஷா, சரி, செக் பண்ணுகிறோம் என்று மட்டும் சொல்லியிருக்கிறார்... அதன் பிறகு அதிமுக அரசியல் குறித்து பேச்சு எழுந்துள்ளது... 3 பேரும் சொல்வதை உன்னிப்பாக கவனித்த அமித்ஷா, "அதிமுக வலிமையாக இருந்தால்தானே ரூலிங் பார்ட்டியை (திமுக ஆட்சி) எதிர்க்க முடியும்? நீங்க ஒற்றுமையாக இருந்தால், திமுகவுக்கு உங்கள் மீது பயம் வரும்... ஏன், நீங்க அதை யோசிக்க மறுக்கிறீர்கள்?" என்று அமித்ஷா கேட்டிருக்கிறார்.

 கரையான்

கரையான்

அதற்கு, எடப்பாடி, "அதிமுகவை அரிக்கிற கரையான் தான் ஓபிஎஸ்.. அவர் இப்போது ஸ்டாலினுக்கு ஆதரவாக இருக்கிறார்.. ஸ்டாலினும் ஓபிஎஸ்சை இயக்குகிறார்.. அதிமுக ஒற்றுமையாக இருக்கக் கூடாதுங்கிற அரசியலை ஸ்டாலின் செய்து வருகிறார். ஒருவேளை ஓபிஎஸ்சோடு ஒற்றுமையா இருந்தாலும், அதிமுகவில் நடக்கும் அனைத்தும் ஸ்டாலினிடம் பகிர்ந்து கொள்வார். அவர் நம்பிக்கைகுரிய நபராக இல்லையே" என்றாராம்.

சீரியஸ் சோர்ஸ்

சீரியஸ் சோர்ஸ்

அதற்கு அமித்ஷா, "அவருடைய நடவடிக்கைகளை நாங்களும் கவனித்து தான் வருகிறோம். பார்க்கலாம். நீங்கள் உங்கள் அரசியலை செய்யுங்கள்" என்று சொல்லியுள்ளார்.. அப்போது பேசிய சிவி சண்முகம், "தேர்தல் ஆணையத்தில் ஜுலை 11-ந்தேதி நடந்த பொதுக்குழு முடிவுகளை ஏற்கச் சொல்லி, கடிதம் கொடுத்திருக்கிறோம். பொதுக்குழு உறுப்பினர்களின் முழுமையான ஆதரவு ஒற்றைத் தலைமைக்கு இருப்பதற்கான ஆதாரங்களாக அவர்களிடம் பெற்ற பிரமாண பத்திரங்களையும் தேர்தல் கமிஷனிடம் கொடுத்துள்ளோம். அதனை சீரியஸாக பரிசீலிக்க கமிஷனிடம் வலுயுறுத்தினால் நல்லா இருக்கும்" என்று தயங்கி தயங்கி சொல்லியிருக்கிறார்.

 அமித்ஷா வார்னிங்

அமித்ஷா வார்னிங்

சண்முகம் இப்படி சொன்னதுமே ஒரு நிமிடம் அவரை உற்று கவனித்த அமித்ஷா, "எலெக்ஷன் கமிசன், நீதிமன்றங்கள், விசாரணை அமைப்புகள் ஆகியவற்றில் நாங்கள் தலையிடுவதில்லை. சட்டப்படி உங்கள் பக்கம் நியாயம் இருந்தால் உங்களுக்கு நல்லது நடக்கும். ஆனால், மீண்டும் ஒருமுறை உங்கள் சின்னம் முடங்கி விடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்" என்று அறிவுறுத்தி விட்டு, அவர்களை அனுப்பி வைத்தாராம்அமித்ஷா.

 பிளஸ் பாயிண்ட்

பிளஸ் பாயிண்ட்

அமித்ஷாவை சந்தித்து பேசி விட்டு எடப்பாடி, சென்னை திரும்பிய நிலையில், டெல்லியில் நடந்தவைகளை சீனியர்களிடம் பகிர்ந்துக் கொண்டுள்ளார். சீனியர் தலைவர்களும் டெல்லி விஷயங்களை கேட்டு மகிழ்வாக இருக்கிறார்கள்... காரணம், இதுநாள் வரை தங்களை சந்திக்க மறுத்து வந்த அமித்ஷாவை சந்தித்து பேசியதுதானாம்.. இந்த சந்திப்பில் கூட, எடப்பாடிக்கு தரப்புக்கு எதிராகவோ, ஓபிஎஸ்சுக்கு ஆதரவாகவோ அழுத்தமாக எதையும் வலியுறுத்தாமல், அதிமுக அரசியலையும் தமிழக அரசியலையும் அறிந்து வைத்திருப்பதால் அதற்கேற்ப அமித்ஷா அறிவுரை சொல்லியிருக்கிறார்... ஒருவகையில், இதுவும் ஆரோக்கியமானதுதான் என்கிற அளவில் சீனியர் அதிமுகவினரிடம் குதூகலம் தெரிகிறது.

English summary
Did Amit Shah advise Edappadi Palanisamy and What did Ex Mimister CV Shanmugam request
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X