யோசிக்காத நிழல் யுத்தம்! இந்தியா பாகிஸ்தான் போரை வைத்து.. சீனா மேற்கொண்ட சீக்ரெட் பயிற்சி?
சென்னை: இந்தியா பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இந்த போரை வைத்து சீனா போர் பயிற்சி மேற்கொண்டதாக தகவல்கள் வருகின்றன. அதாவது சில ஆயுதங்களை சீனா சோதனை செய்ததாக கூறப்படுகிறது.
இந்தியா பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட அன்று நான்கு நாடுகள் அறிக்கைகளை வெளியிட்டன - அமெரிக்கா, பாகிஸ்தான், இந்தியா, மற்றும் சீனாவின் தாமதமான அறிக்கையை வெளியிட்டது. இருப்பினும் ஒவ்வொரு அறிக்கையும் வேறு மாதிரி இருந்தது.
பாகிஸ்தான் இராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் அல்லது டிஜிஎம்ஓ, உடனடி போர்நிறுத்தத்தைக் கோரி இந்திய டிஜிஎம்ஓவுக்கு தொலைபேசி அழைப்பு விடுத்ததாக இந்தியாவின் அறிக்கையில் மறுக்க முடியாத உண்மை கூறப்பட்டு உள்ளது. பாகிஸ்தான் தனது முகத்தை காக்கும் விதமாக அறிக்கைகளை வெளியிட்டது. அமெரிக்க அதிபரே.. தான்தான் போரை நிறுத்தினேன். வர்த்தகத்தை நிறுத்துவேன் என்று கூறி போரை நிறுத்தினேன் என்று விளக்கினார்.
சீனாவின் அறிக்கை பாகிஸ்தானுக்கு ஆதரவாக.. பாகிஸ்தானுடன் எப்போதும் துணை நிற்போம் என்ற பாணியில் இருந்தது.
டிரம்ப் பேச்சு
அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசுகையில், இந்தியா - பாக். போர் நிறுத்தத்தை ஏற்படுத்த வர்த்தகத்தை பெருமளவில் பயன்படுத்தினேன். என் தலையீட்டால்தான் தாக்குதல் நிறுத்தப்பட்டது. ஒப்பந்தம் செய்வோம், வர்த்தகம் செய்வோம் என அழைத்தேன். உடனே தாக்குதலை நிறுத்திவிட்டார்கள், இரண்டு நாடுகளுமே நிறைய அணு ஆயுதங்களை கொண்டுள்ளன. ஆனால் அணு ஆயுதப் போர் நிறுத்தியது நான் தான் என்பதை உங்களுக்குச் சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுகிறேன். அவர்கள் நிலைமையின் தீவிரத்தை புரிந்து கொள்ளும் வலிமை, ஞானம், உறுதி தங்களுக்கு இருக்கிறது என்ற நிலைபாட்டில் இருந்தார்கள். ஆனால் நாங்கள் நிறைய உதவினோம். வர்த்தகத்தில் உதவினோம்.

சண்டையை நிறுத்தினால் உங்களுடன் நிறைய வர்த்தகம் செய்யப் போகிறோம் என்று இந்தியாவிடமும் பாகிஸ்தானிடமும் சொன்னேன். போரை நிறுத்தாவிட்டால் நாங்கள் எந்த வர்த்தகத்தையும் செய்யப் போவதில்லை என்று சொன்னேன். உடனடியாக நாங்கள் போரை நிறுத்துவோம் என்று சொன்னார்கள்., என்று கூறி உள்ளார்.
சீனா கோபம்
பாகிஸ்தானின் நிரந்தர ஆதரவு நாடு சீனா. ஆனால் சீனா இதில் அறிக்கை வெளியிடும் முன் அமெரிக்கா வெளியிட்டதை சீனா விரும்பவில்லை. அமெரிக்காவின் அழுத்தத்தை பாகிஸ்தான் ஏற்றுக்கொண்டதையும் சீனா விரும்பவில்லை. நட்பு நாடு நாங்கள் இருக்கும் போது.. ஆசியாவில் இல்லாத அமெரிக்காவின் பேச்சை கேட்டது தவறு என்று சீனா பாகிஸ்தான் மீது கோபத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.
போர் நிறுத்தத்திற்கான கிரெடிட்டை இந்தியாவின் நண்பன் அமெரிக்கா எடுத்துக்கொண்டதை சீனா சுத்தமாக விரும்பவில்லையாம். அதோடு இதை பாகிஸ்தான் எங்கும் எதிர்க்கவில்லை.
சீனா நிழல் யுத்தம்
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க இந்த போரை வைத்து சீனா போர் பயிற்சி மேற்கொண்டதாக தகவல்கள் வருகின்றன. அதாவது சில ஆயுதங்களை சீனா சோதனை செய்ததாக கூறப்படுகிறது. இந்த போர் விவகாரத்தில் உலக நாடுகளின் தீவிரமான சப்போர்ட் பாகிஸ்தானுக்கு இருந்தது. உதாரணமாக துருக்கி, சீனா ஆகியவை பாகிஸ்தானை நேரடியாக ஆதரித்தது. ராணுவ ரீதியாக அரசியல் ரீதியாக பாகிஸ்தானை சப்போர்ட் செய்தது.
வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் இந்திய ராணுவம் செய்தியாளர் சந்திப்பு நடத்தியது. இதிலேயே பாகிஸ்தானுக்கு துருக்கி, சீனா ஆதரவு இருப்பது உறுதியானது. பாகிஸ்தான் தனது தாக்குதலில் சீன ட்ரோன்களை பாகிஸ்தான் பயன்படுத்தியதாகச் சொல்லப்பட்ட நிலையில், சீன ட்ரோன்களுடன் சேர்த்து துருக்கி ட்ரோன்களையும் பாகிஸ்தான் பயன்படுத்தியது. 36 இடங்களைக் குறிவைத்து சுமார் 300 முதல் 400 ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டன. இந்தியப் பாதுகாப்புப் படை கைனடிக் (kinetic) மற்றும் நான் கைனடிக் (non-kinetic) முறையில் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது. இவை துருக்கி மற்றும் சீனாவின் டிரோன்கள், என்று இந்திய ராணுவம் தெரிவித்தது.
பாகிஸ்தானிடம் 6 வகையான டிரோன்கள் மட்டுமே உள்ளன. அதன் லிஸ்ட் இங்கே.
1. Bayraktar TB2
விற்பனை செய்த நாடு: துருக்கி
வகை: நடுத்தர உயர நீண்ட தூரம் தாங்கும் (MALE) ட்ரோன்
திறன்கள்: துல்லியமான வெடிமருந்துகளுடன் ஆயுதம் ஏந்தி செல்லக்கூடியவை. கண்காணிப்பு மற்றும் தாக்குதல் பணிகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன
2. விங் லூங் II
விற்பனை செய்த நாடு: சீனா
வகை: நீண்ட தூரம் செல்ல கூடிய ஆயுதம் ஏந்திய ட்ரோன்
திறன்கள்: நீண்ட தூர தாக்குதல், கண்காணிப்பு மற்றும் உளவு பார்த்தல்
3. CH-4 (ரெயின்போ-4)
விற்பனை செய்த நாடு: சீனா
வகை: நீண்ட தூரம் செல்ல கூடிய போர் மற்றும் கண்காணிப்பு ட்ரோன்
திறன்கள்: துல்லிய வழிகாட்டும் ஏவுகணைகள் மற்றும் குண்டுகளை சுமந்து செல்லும்
4. ஷாபர்-II
விற்பனை செய்த நாடு: உள்நாட்டு (பாகிஸ்தானின் உலகளாவிய தொழில்துறை மற்றும் பாதுகாப்பு தீர்வுகள் - GIDS ஆல் உருவாக்கப்பட்டது)
வகை: போர் UAV. நீண்ட தூரம் செல்லாது.
திறன்கள்: வழிகாட்டப்பட்ட வெடிமருந்துகளுடன் உளவு பார்த்தல் மற்றும் போர் திறன்கள்
5. பர்ராக்
விற்பனை செய்த நாடு: உள்நாட்டு (சீன வடிவமைப்புகளை அடிப்படையாகக் கொண்டது)
வகை: ஆயுதம் ஏந்திய UAV
திறன்கள்: கண்காணிப்பு மற்றும் துல்லியமான தாக்குதல்கள்; பாகிஸ்தானின் முதல் ஆயுதமேந்திய UAV
6. அன்கா (சாத்தியமான கையகப்படுத்தல் அல்லது ஆர்வம்)
தோற்றம்: துருக்கி
வகை: நீண்ட தூரம் செல்ல கூடியது.
மேற்கண்ட லிஸ்டில் 6ல் 2 பாகிஸ்தான் உருவாக்கியது. இந்த 2ம் நீண்ட தூரம் செல்ல கூடியது அல்ல. அதேபோல் வலுவான திறன் கொண்டது அல்லது. சிறிய வகை. அப்படி என்றால் பாகிஸ்தான் மீதம் உள்ள 4 டிரோன்களை மட்டுமே பயன்படுத்தி இருக்க முடியும்.
இந்த டிரோன்களை பாகிஸ்தானிடம் தந்து சீனா சோதனை செய்ததாகவும், சீனாவின் சில ஏவுகணைகளையும் சீனா பாகிஸ்தான் வழியாக சோதனை செய்ததாகவும் கூறப்படுகிறது.
எக்ஸ் பக்கம்
இந்த போருக்கு சில நாட்களுக்கு முன்பே பாகிஸ்தானில் எக்ஸ் பக்கம் மீண்டும் திறக்கப்பட்டது. இதற்கு காரணம் சீனா என்கிறார்கள். அதாவது இந்தியாவிற்கு எதிராக போடப்பட்ட போஸ்டுகள் எல்லாம் பாகிஸ்தான் வழியாக சீனர்கள் செய்த போஸ்ட் என்று கூறப்படுகிறது.
அதாவது இந்தியாவின் இமேஜை அழிக்க சீனர்கள் களமிறக்கப்பட்டு ஆன்லைன் போரை சீனா நிழல் யுத்தமாக நடத்தி இருக்கலாம். எதிர்காலத்தில் போர் வந்தால் ஆன்லைனில் எப்படி narrative உருவாக்குவது என்பதை பாகிஸ்தான் வழியாக சீனா இந்த முறை கற்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த போரை எதிர்கால போருக்கான பயிற்சியாக மேற்கொண்டு இருக்கலாம் என்று விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.












Click it and Unblock the Notifications