சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"மிஸ்ஸாயிட்டாரே" பார்த்தீங்களா.. எடப்பாடி டீமிலிருந்து திடீர்னு மாயம்.. பீச்சில் தனியாக சுற்றிய "தலை"

சிவி சண்முகம் தனியாக வந்து எம்ஜிஆர் சமாதியில் அஞ்சலி செலுத்திவிட்டு போயுள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக நிறுவனரும் முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் 35வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது.. எடப்பாடி பழனிசாமி தன்னுடைய ஆதரவாளர்களுடன் வந்து மலர் வளையம் வைத்தும் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினார்... இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் அதிமுகவின் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்... எனினும், ஒருவர் மட்டும் மிஸ்ஸிங்.. என்ன காரணமாக இருக்கும்?

கடந்த எம்பி தேர்தலின்போதே பாஜக அல்லாத கூட்டணிக்கு எடப்பாடி பழனிசாமி தயாரானதாக சொல்லப்பட்டது.. ஆனால், ஓபிஎஸ் அப்போது உள்ளே புகுந்து, ஆட்டத்தை கலைத்துவிட்டதுடன், பாஜகவுடன் தான் கூட்டணி என்பதையும் எடப்பாடியை கேட்காமலேயே அறிவித்து விட்டாராம்.

எனவே, கடந்த சட்டசபை தேர்தலின்போது பாஜகவை தவிர்த்து கூட்டணி வைக்க முயன்றார்.. அப்போதும் ஓபிஎஸ் அந்த பிளானில் குறுக்கே வந்ததாக தெரிகிறது..

முடித்துக்கட்ட எடப்பாடி 'சிக்னல்'.. பாஜக கோபப் பார்வை..? “ஈபிஎஸ் ஆடும் கேம்”.. குபேந்திரன் 'பளிச்’! முடித்துக்கட்ட எடப்பாடி 'சிக்னல்'.. பாஜக கோபப் பார்வை..? “ஈபிஎஸ் ஆடும் கேம்”.. குபேந்திரன் 'பளிச்’!

 ஆஃப் செய்த ஓபிஎஸ்

ஆஃப் செய்த ஓபிஎஸ்

பாஜகவுடன் கூட்டணி வைத்ததால்தான் அதிமுக, தோல்வியை சந்திக்க நேர்ந்தது என்று சிவி சண்முகம் அப்போதே ஆவேசமாக ஒரு பேட்டி தந்திருந்தார்.. சிவி சண்முகம் இப்படி பேசியது, மிகுந்த பரபரப்பாக அப்போது பார்க்கப்பட்டாலும், அது அவரது சொந்த கருத்து என்று ஓபிஎஸ் மறுபடியும் முந்திக் கொண்டுவந்து, இந்த விஷயத்தை ஆஃப் செய்து, மேலிடத்தை கூல் செய்திருந்தார்.. இப்படி நடந்து முடிந்த 2 தேர்தல்களிலும், பாஜகவுடன் கூட்டணி வைப்பதால்தான், சறுக்கலை சந்திக்க நேர்ந்துவிடுகிறது என்பதை தற்சமயம் எடப்பாடி உணர்ந்துள்ளார்..

 13 %

13 %

கிட்டத்தட்ட 13 சதவீத சிறுபான்மையினர் அதிமுகவை விட்டு வெளியேறியது மிகப்பெரிய அதிமுகவின் பின்னடைவாக பார்க்கப்பட்டு வருகிறது.. எனவேதான், வரும் 2024 தேர்தலில் மறுபடியும் கூட்டணி வைத்தால், அதிமுகவின் வாக்கு வங்கி மேலும் சரிவை நோக்கி சென்றுவிடும் என்பதாலேயே, பாஜகவை கழட்டிவிட எடப்பாடி டீம் மீண்டும் துணிவதாக சொல்கிறார்கள்.. சில தினங்களுக்கு முன்பு, மூத்த பத்திரிகையாளர் மணி ஒரு சேனலுக்கு பேட்டி தந்திருந்தார்..

பல்ஸ்ஸ்

பல்ஸ்ஸ்

அதில் அவர் சொல்லும்போது, "பாஜகவை எளிதாக கூட்டணியில் இருந்து கழட்டிவிட வேண்டும் என்றால், அதை ஓபிஎஸ்ஸை வைத்து கொண்டு செய்ய முடியாது என்பதாலேயே அவரை கட்சியை விட்டு நீக்கியது.. அதற்கு பிறகே பாஜகவுக்கு செக் வைக்கும் முயற்சியை கையில் எடுத்து வருகிறது.. சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், எடப்பாடிக்கு பிரச்சனை ஓபிஎஸ் கிடையாது.. எடப்பாடி டீமின் டார்கெட்டே பாஜகதான்.. தமிழக மக்களின் மனநிலை என்பது பாஜகவுக்கு எதிரானது என்பதால்தான், மக்களின் பல்ஸை அறிந்து அந்த ரூட்டை எடுத்துள்ளார்" என்று ஓபனாக கூறியிருந்தார்.

 சூட்டோடு சூட்டாக

சூட்டோடு சூட்டாக

இப்படிப்பட்ட சூழல்தான், சிவி சண்முகம் மறுபடியும் ஒரு பரபரப்பு பேட்டியை தந்து, பாஜகவை சூடாக்கினார்.. "எம்பி தேர்தலில் திமுக - பாஜக கூட்டணி அமையப் போகிறது.. திமுக தன்னுடைய கூட்டணியில் இருக்கும் மற்ற கட்சிகள் கழட்டி விடப் போகிறது" என்று பேசியிருந்தார்.. இதற்கு பாஜக மாநிலத் தலைவர் பதிலடி தந்தாலும், பின்னாடியே வந்து ஜெயக்குமாரும் சிவி சண்முகம் போலபே பேசி பாஜகவை எரிச்சலூட்ட செய்தார்.. பாஜகவை கழட்டி விடவே, தன்னுடைய ஆதரவாளர்களை எடப்பாடி இப்படியெல்லாம் பேச வைத்து வருவதாக சலசலப்புகள் எழுந்தவண்ணம் உள்ளன.

 எதேச்சையா

எதேச்சையா

இந்நிலையில், முன்னாள் முதல்வரும், அதிமுக நிறுவனருமான எம்ஜிஆரின் 35வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியில் மெரினாவில் உள்ள எம்ஜிஆர் சமாதியில் அஞ்சலி செலுத்தப்பட்டது. ஆனால், அதில் சிவி சண்முகம் கலந்து கொள்ளவில்லை... அனைவரும் சென்ற பிறகு, சிவி சண்முகம் தனியாக வந்து அஞ்சலி செலுத்தி விட்டு போனதாக தெரிகிறது.. எதற்காக சிவி சண்முகம் தனியாக வந்தார்? எடப்பாடி டீமுன் வருவதை புறக்கணித்தாரா? எடப்பாடியுடன் உரசலா? அதிருப்தியா? அல்லது எதேச்சையாக நடந்த நிகழ்வா? என்ற பல சந்தேகங்கள் வட்டமடிக்கின்றன.

 மணி மணியாய்

மணி மணியாய்

பாஜகவை பொறுத்தவரை, அதிமுகவுக்குள்ளேயே குறிப்பாக, எடப்பாடி ஆதரவாளர்கள் தரப்பிலேயே 2விதமான டீம் உள்ளது.. ஜெயக்குமார், முனுசாமி, சிவி சண்முகம், என பலரும் பாஜகவுக்கு எதிராக திரண்டுள்ள நிலையில், வேலுமணி, தங்கமணி போன்ற சீனியர்களின் ஆதரவு பாஜக கூட்டணி பக்கம் உள்ளது.. இந்த 2 டீம்களையும் எடப்பாடி எப்படி கையாள போகிறார் என்று தெரியவில்லை.. ஒருவேளை வேலுமணி, தங்கமணி, பாஜக பக்கமே தாவினாலும்கூட, அதையும் சமாளிக்க வேண்டிய வழிமுறைகளை கையில் எடுக்கவும் தயாராகிவிட்டாராம்.. என்ன நடக்க போகிறது? பார்ப்போம்..!!

அனுமானங்கள்

அனுமானங்கள்

இதனிடையே, சிவி சண்முகம் தனி அணியாக செயல்படுகிறாரோ என்ற கருத்துக்கள் உலா வர துவங்கி உள்ளன.. இதுகுறித்து, ஒரு பிரபல டிவி சேனல், சிவி சண்முகத்திடமே தொடர்பு கொண்டு, தனியாக வந்து சமாதியில் அஞ்சலி செலுத்திய குறித்து கேட்டுள்ளது. அதற்கு சிவி சண்முகம், அது முற்றிலும் தவறானது என்று மறுத்துள்ளார். காலையில் எம்ஜிஆர் நினைவிடத்தில் மரியாதை செலுத்த வந்தபோது டிராபிக்கில் மாட்டிக் கொண்டுவிட்டாராம்.. அதனால் குறிப்பிட்ட நேரத்திற்குள் அஞ்சலி செலுத்துவதற்கு வந்து சேரமுடியவில்லை என்றும், அதன் பிறகு நடைபெற்ற எடப்பாடி பழனிசாமி தலைமையிலான உறுதிமொழி ஏற்பு நிகழ்வில் தானும் கலந்து கொண்டதாகவும், அதற்கான வீடியோ ஆதாரங்கள் இருக்கிறது என்றும் கூறி, நிலவிவரும் பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

வதந்தி பொறி

வதந்தி பொறி

உறுதிமொழி ஏற்றபிறகு தான் மட்டும் தனியாக சென்று எம்ஜிஆர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தியதாக குறிப்பிட்டுள்ள சண்முகம், தான் தனி அணியாக செயல்படுவது திட்டமிட்ட வதந்தி என்றும் அழுத்தமாக மறுப்பு தெரிவித்துள்ளார்.. எனினும், இந்த சலசலப்பு இன்னமும் அடங்கவில்லை.. எடப்பாடி அணியில் இருந்து சண்முகம் விலகுகிறாரா? சண்முகம் பாஜகவுக்கு எதிராக பேசுவது கட்சியில் சிலருக்கு பிடிக்கவில்லையா? என்பது போன்ற பல்வேறு விமர்சனங்களும் யூகங்களும் சோஷியல் மீடியாவில் எழுந்தபடியே உள்ளது.. இதன் காரணமாக எடப்பாடி தரப்பினர் சற்று அதிர்ச்சியில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது..!!!

English summary
Did CV Shanmugam come alone to Marina and he paid his respects alone at the mgr memorial
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X