63 மைனஸ் 22! டெல்லியிலிருந்து வந்த "போன்".. ஓபிஎஸ்சுக்கு ஸ்பெஷல் கட்டளை! தனிக்கட்சியா? திமிரும் தலைகள்
சென்னை: அதிமுகவில் உட்கட்சி மோதல் நிலவி வரும் நிலையில் ஓ பன்னீர்செல்வத்திற்கு டெல்லியில் இருந்து சில போன்கால்கள் சென்றதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக உட்கட்சி மோதல் தற்போது அதிகாரபூர்வமாக டெல்லிக்கு சென்றுள்ளது. அதிமுக பொதுக்குழு வழக்கில் நாளை மறுநாள் விசாரணை நடத்தப்பட உள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் இரட்டை நீதிபதி அமர்வு வழங்கிய தீர்ப்பிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஓ பன்னீர்செல்வம் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுக்கள்தான் விசாரணை செய்யப்பட உள்ளது. அதிகாரபூர்வமாக இப்போதுதான் வழக்கு டெல்லிக்கு சென்றாலும் .. ஆதாரபூர்வமற்ற முறையில் ஏற்கனவே "டெல்லி" பாஜக தலைகள் அதிமுக விவகாரத்தில் தலையிட்டுதான் வருகிறார்களாம்.

அதிமுக
எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பில் ஆளும் திமுக பற்றி ஒரு பக்கம் அவர் புகார்களை அடுக்கினார். அதே சமயம், ஓ பன்னீர்செல்வம் குறித்தும் புகார்களை அடுக்கியதாக கூறப்படுகிறது. அவருக்கு நீங்கள் ஆதரவு தர கூடாது. அவர் திமுகவிற்கு நெருக்கமாக இருக்கிறார். அதிமுக - பாஜக கூட்டணி தொடரும். லோக்சபா தேர்தலில் கூடுதல் இடங்களை நீங்கள் பெற்றுக்கொள்ளுங்கள். நமது கூட்டணியில் பிரச்சனை இல்லை, என்று எடப்பாடி பழனிசாமி சமாதான தூதுவிட்டதாக கூறப்படுகிறது.

சமாதானம்
ஆனால் எடப்பாடியை டெல்லி பாஜக முழுமையாக ஆதரிக்கவில்லை என்று கூறப்படுகிறது. திமுக பற்றிய எடப்பாடி புகார்களை ஏற்றுக்கொண்ட பாஜக, ஓபிஎஸ் பற்றிய புகார்களை ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது. எடப்பாடிக்கு கீழ் அதிமுக சென்றால் கட்சி தனியாக வளர்ச்சி அடையும். முக்கியமாக கொங்கு மண்டலத்தில் கட்சி புதிய பலம் பெறும். அப்படி நடந்தால் பாஜக வளர்ச்சி அடைய முடியாது என்று அக்கட்சி கருதுகிறதாம். இதுவே எடப்பாடியை ஆதரிக்க அக்கட்சி யோசிக்க காரணம் என்கிறார்கள்.

சேர்ந்துவிடுங்கள்
அதோடு டெல்லி சென்ற எடப்பாடியிடம்.. உங்களை சேர்த்து வைத்ததே நாங்கள்தான். மீண்டும் சேர்ந்து விடுங்கள். அதுதான் உங்களுக்கு நல்லது. அப்போதுதான் கட்சி சிதறாமல் இருக்கும். வாக்குகள் சிதறாமல் இருக்கும் என்றும் ஆலோசனை வழங்கப்பட்டு இருக்கிறதாம். ஆனால் இதை எடப்பாடி பழனிசாமி கொஞ்சம் கூட ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த நிலையில்தான் ஓ பன்னீர்செல்வத்திற்கு டெல்லியில் இருந்து சில போன்கால்கள் சென்றதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஓபிஎஸ்
அதன்படி எடப்பாடி பழனிசாமி மீட்டிங் முடிந்த இரண்டு நாளில்.. ஓ பன்னீர்செல்வத்திற்கு சென்ற டெல்லி போன் காலில்.. உங்கள் பக்கத்தை பலப்படுத்துங்கள். உங்களை கைவிட மாட்டோம். சீக்கிரம் உங்களுக்கு ஆதரவாளர்கள் தேவை ஏற்படலாம். 63 எம்எல்ஏக்களில் 22எம்எல்ஏக்களாவது உங்கள் பக்கம் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். அதாவது மூன்றில் ஒரு பங்கு எம்எல்ஏக்கள் உங்கள் பக்கம் இருக்க வேண்டும்.

ஏற்பாடுகள்
அதற்கான ஏற்பாடுகளை செய்யுங்கள் என்று உத்தரவு சென்று இருக்கிறதாம். இதற்காக எம்எல்ஏக்களிடம் ஓ பன்னீர்செல்வம் பேசி வருகிறார். இதன் மூலம் அதிமுக கட்சியை முடக்க முடியும். சின்னத்தை முடக்க முடியும் என்று ஓ பன்னீர்செல்வம் நினைக்கிறாராம். டெல்லி போட்டுக்கொடுத்த ரூட்டும் இதுதான் என்கிறார்கள். இந்த நிலையில்தான் திடீரென ஓ பன்னீர்செல்வம் தனிக்கட்சி தொடங்க போகிறார் என்ற புரளியும் கிளம்பி உள்ளது.

தனிக்கட்சியா?
எம்எல்ஏக்களுக்கு போன் செய்து ஓ பன்னீர்செல்வம் ஆதரவு கேட்பதை வைத்து அவர் தனிக்கட்சி தொடங்க போவதாக சிலர் புரளியை கிளப்பி இருக்கிறார்களாம். ஆனால் ஓ பன்னீர்செல்வம் தரப்போ.. அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை. ஏற்கனவே ஒருத்தர் தனிக்கட்சி தொடங்கினார். ஆர்.கே நகர் இடைத்தேர்தலுக்கு பின் அவரின் கட்சிக்கு பலமே இல்லை. அதுபோல ஆக நாங்கள் விரும்பவில்லை. அதிமுகவை மீட்போம் என்று தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications