அடுத்தடுத்து சிக்ஸ் அடித்த அதிமுக! உடனே சுதாரித்து எழுந்த திமுக! மாஸ்டர்மைண்ட் உடன் திடீர் ஒப்பந்தம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு அரசியலில் அதிமுக கொஞ்சம் இரண்டாம் இன்னிங்ஸ் ஆட தொடங்கி உள்ளது. கடந்த 3 வருடங்களாக உட்கட்சி மோதலில் திணறிக்கொண்டு இருந்த அதிமுக கொஞ்சம் கொஞ்சமாக கம்பேக் தர தொடங்கி உள்ளது. முக்கியமாக அண்ணா பல்கலைக்கழக மாணவி பலாத்கார வழக்கில் அதிமுகதான் முதலில் வழக்கு போட்டது.

யார் அந்த சார்? என்று தமிழ்நாடு முழுக்க போஸ்டர் ஒட்டியது. கடுமையான போராட்டங்களை செய்தது. முதல்முறையாக கொஞ்சம் லைம்லைட்டில் வரும் அளவிற்கு அதிமுக ஒரு போராட்டத்தை முன்னெடுத்தது. அதோடு இல்லாமல் அதிமுக தேர்தலுக்கும் தயாராக தொடங்கிவிட்டது. ஏற்கனவே வாக்காளர்களை சரி பார்க்க சென்னையில் பணிகள் நடக்கின்றன.

aiadmk edappadi palaniswami

ஜனவரி மாத இறுதியில் எடப்பாடி தமிழ்நாடு முழுக்க பயணம் செய்யவும் திட்டங்களை வகுத்து உள்ளார். அதிமுக பிரஷாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனத்தை ஒப்பந்தம் செய்ய முடிவு செய்துள்ளதாம். பிரஷாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனத்தில் பிரஷாந்த் கிஷோர் இப்போது வெளிப்படையாக பணிகளை செய்வது இல்லை. அவரின் நிறுவனம் மட்டுமே பணிகளை செய்கிறது. அந்த நிறுவனத்தின் நிறுவனர் இப்போதும் பிரஷாந்த் கிஷோர்தான்.

அவர் நேரடியாக பணிகளை செய்ய மாட்டார். ஏனென்றால் அவர் தனியாக அரசியல் கட்சி நடத்தி வருகிறார். ஆனாலும் பிரஷாந்த் கிஷோர்தான் தேர்தல் திட்டங்களை ஐபேக் நிறுவனத்திற்காக வகுத்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில்தான் அந்த நிறுவனத்துடன் எடப்பாடி பழனிசாமி ஒப்பந்தம் செய்ய முடிவு செய்துள்ளாராம். ஏற்கனவே இதற்கான ஒப்பந்தம் முடிவு செய்யப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. ஆந்திர பிரதேச முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஸ்டைலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடைபயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

2009ல் அப்பாவின் மரணத்திற்கு பின் ஜெகன் மோகன் ரெட்டியின் அரசியல் பாதாளத்தில் இருந்தது. அதன்பின் அவர் நடத்திய யாத்திரை.. அரசியல் செயல்பாடுகள் அவரின் வெற்றிக்கு காரணமாக இருந்தது. கிரவுண்டு பணிகளை செய்தது.. மக்களிடம் தொடர்ந்து நெருக்கமாக இருக்கும் வகையில் முடிவுகளை எடுத்தது.. திட்டமிட்டு ஒவ்வொரு நகர்வையும் மேற்கொண்டது என்று ஜெகன் மோகன் ரெட்டியின் அரசியல் பெரிய அளவில் கவனிக்கப்பட்டது.

அவரின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது ஜெகன் மோகனின் பாதயாத்திரைதான். அதை செய்ய காரணம் பிரஷாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம்தான். தற்போது அதே பிரஷாந்த் கிஷோருடன் எடப்பாடி கைகோர்க்க உள்ளாராம்.

சுதாரித்த திமுக: இப்போது திமுக சுதாரித்துக்கொண்டு முக்கியமான நடவடிக்கைகளை எடுக்க தொடங்கி உள்ளது.

மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா பிரிவுடன் வேலை பார்த்த ராபின் சர்மாவின் Showtime நிறுவனத்துடன் திமுக ஒப்பந்தம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. Showtime நிறுவனம் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா பிரிவுடன் வேலை பார்த்தது. அங்கே சிவசேனாவுடன் இரண்டு பிரிவுகள் இடையே கடுமையான மோதல் நிலவியது. அதிலும் உத்தவ் தாக்கரேயின் சிவசேனா பிரிவே வலிமையாக இருந்தது. அதை மீறி ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா பிரிவுடன் வேலை பார்த்து அந்த கட்சியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. அந்த நிறுவனத்துடன் ஆளும் திமுக ஆலோசனை செய்து வருகிறதாம்.

இதே அமைப்புதான் ஆந்திர பிரதேசத்தில் தெலுங்கு தேசம் கட்சிக்கு சந்திரபாபு நாயுடுவிற்காக பணியாற்றியது. அங்கேயும் சந்திரபாபு நாயுடு வெற்றிபெற இந்த அமைப்பு காரணமாக இருந்தது. இதே குழுவுடன்தான் இப்போது திமுக ஆலோசனை செய்து வருகிறதாம். இந்த ஒப்பந்தம் நேற்று உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+