"விட மாட்டேன்".. ஓபிஎஸ் ஆட்டம் ஆரம்பம்.. எடப்பாடி கையிலெடுத்த "ஜெ" அஸ்திரம்.. அடடா வம்பா போச்சே..!
ஓபிஎஸ் ஜெயலலிதா மீதான தன்னுடைய விசுவாசத்தை இன்று நிரூபித்துள்ளார்
சென்னை: எடப்பாடி பழனிசாமிக்கு இன்றைய செய்கைகளால் பதிலடி தந்துள்ளதுடன், ஜெயலலிதா மீதான தன்னுடைய விசுவாசத்தையும் நிரூபித்து காட்டி உள்ளார் ஓபிஎஸ்..!
Recommended Video
அன்று கோர்ட்டின் உத்தரவை பெற்று பொதுக்குழுவை நடத்தியபோது, தற்காலிக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அனைவராலும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா மட்டுமே என்று சொல்லிவந்த நிலையில், ஜெயலலிதா பதவியையே தூக்கி எறிந்தது எடப்பாடிக்கு மைனஸாகவே அது பார்க்கப்பட்டது.

சீக்ரெட் அரசியல்
இது அதிமுகவின் ரத்தத்தின் ரத்தங்களுக்கு அதிர்ச்சியை தந்தது.. என்றாலும், ஓபிஎஸ் இதை தனக்கு சாதகமாகவே அரசியல் செய்ய முனைந்தார்.. ஜெயலலிதா பதவியையே தூக்கியெறிந்துவிட்டு, அந்த பதவியில் எடப்பாடி உட்கார்ந்து கொண்டதை வைத்தே, இனி தென்மண்டலங்களை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவரவும் யோசித்தார்.. இது சம்பந்தமாக ஓபிஎஸ் ஆதரவாளர்களை வைத்து நிறைய பேட்டிகளையும் தர வைத்தார். இன்றைய தினம் பொதுக்குழு குறித்து சாதகமான தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில், ஜெயலலிதாவுக்கு விசுவாசமாக இருப்பது தான் மட்டுமே என்பதை மீண்டும், ஒவ்வொரு நகர்விலும் வெளிப்படுத்த தொடங்கி உள்ளார் ஓபிஎஸ்.

மெய்
அந்த வகையில், ஓபிஎஸ் சற்று முன்பு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.. அந்த அறிக்கையில், "தமிழ்நாட்டு மக்களை நம்பினேன்; இவையாவிற்கும் மேலாக, தமிழ்நாட்டு மக்களுக்காக இந்த அப்பழுக்கில்லாத இயக்கத்தை தோற்றுவித்து, வளர்த்தெடுத்து, பாதுகாத்து, தங்களது ஆயுளையே அர்ப்பணித்த இயக்கத்தின் காவல் தெய்வங்களான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது ஆசிகளை நம்பினேன். இந்த நம்பிக்கை இன்றைக்கு உண்மையாகி இருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

மனமுருகினார்
அதேபோல, இன்றைய தினம், தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வந்ததுமே முதல் வேலையாக மெரினாவுக்கு சென்றார் ஓபிஎஸ்.. ஜெயலலிதா நினைவிடத்துக்கு ஆதரவாளர்கள் புடைசூழ சென்று, ஓபிஎஸ் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.. இதனால் அவரது ஆதரவாளர்கள் மனமுருகி போனார்கள்.. சமீபகாலமாகவே மெரினாவுக்கு அதிமுக தலைவர்கள் முன்புபோல் வருவதில்லை.. அன்று தர்மயுத்தம் நடத்தியபோது, ஓபிஎஸ் செய்தியாளர்களிடம் பேசினார்..

திருப்பி அடித்த ஓபிஎஸ்
"இந்த நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி என் மனசாட்சியை சாந்தப்படுத்திக்கொள்ள இங்கு வந்தேன். இங்கு வந்தபோது சில உண்மைகளை நாட்டு மக்களுக்கு தெரிவிக்கவேண்டும் என்று நினைத்தேன். அம்மாவின் ஆன்மா என்னை உந்தியது. அதன் விளைவாகத்தான் இங்கு வந்தேன்" என்று வந்தேன் என்றுகூறி மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை அங்கு நிகழ்த்தினார்.. இன்றைய தினமும் சமாதியை தேடி ஓபிஎஸ் சென்று தன்னுடைய விசுவாசத்தை மீண்டும் நிரூபித்துள்ளார். அத்துடன், 'இசைந்து வருபவர்கள் இணைத்துக் கொள்ளப்படுவார்கள்" என்று எடப்பாடி வீசிய பந்தை திருப்பி வாங்கி வீசியுள்ளார் ஓபிஎஸ்.

ஓபிஆர் நறுக்
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய எம்பி ரவீந்திரநாத்தும், "கழகத்தின் நிரந்தர பொதுச்செயலாளர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா என்பதுதான் நிரூபணமாகி உள்ளது" என்று கூறி, ஜெயலலிதா மீதான விசுவாசத்தை வெளிப்படுத்திவிட்டு போனதையும் இங்கு நினைவுகூர வேண்டி உள்ளது.. எடப்பாடி பழனிசாமி கட்சிக்கு எதிரானவர், ஜெயலலிதாவின் விசுவாசி இல்லை என்பதை நிரூபித்துக் கொண்டே, தனக்கான ஆளுமையை நிரூபிக்க தொடங்கி உள்ளார் ஓபிஎஸ்..!

டாக்குமெண்ட்கள்
அதுமட்டுமல்ல, கடந்த சில தினங்களாகவே, எடப்பாடி பழனிசாமி தன்னுடைய சுற்றுப்பயணங்களில், ஓபிஎஸ்ஸுக்கு ஜெ.மீதான விசுவாசம் இல்லை என்பது போல உரைகளை நிகழ்த்தி வந்தார்.. குறிப்பாக, "அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் எம்ஜிஆர் மாளிகையில் கேட்டை உடைத்து ஜெயலிதாவின் ரூமுக்கு சென்று அங்கிருந்த கம்ப்யூட்டர்களை உடைத்து ஆவணங்களை, சொத்து பத்திரங்களை திருடிச்சென்றார்கள். அவர்கள் யார் என்று உங்களுக்கு தெரியும்... அவரா தொண்டர்களுக்கு நன்மை செய்வார்? கட்சியில் உயர்ந்த பதவியை கொடுத்து அழகு பார்த்தோம். நெஞ்சிலேயே ஈரம், இரக்கம் இல்லாதவரிடம் கட்சி தலைமை பொறுப்பை கொடுக்க முடியுமா? அவர் கட்சி தலைவராக இருக்க முடியுமா?

டாக்குமெண்ட்கள்
அதுமட்டுமல்ல, கடந்த சில தினங்களாகவே, எடப்பாடி பழனிசாமி தன்னுடைய சுற்றுப்பயணங்களில், ஓபிஎஸ்ஸுக்கு ஜெ.மீதான விசுவாசம் இல்லை என்பது போல பேசி வந்தார்.. குறிப்பாக, "அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் எம்ஜிஆர் மாளிகையில் கேட்டை உடைத்து ஜெயலிதாவின் ரூமுக்கு சென்று அங்கிருந்த கம்ப்யூட்டர்களை உடைத்து ஆவணங்களை, சொத்து பத்திரங்களை திருடிச்சென்றார்கள். அவர்கள் யார் என்று உங்களுக்கு தெரியும்... அவரா தொண்டர்களுக்கு நன்மை செய்வார்? கட்சியில் உயர்ந்த பதவியை கொடுத்து அழகு பார்த்தோம். நெஞ்சிலேயே ஈரம், இரக்கம் இல்லாதவரிடம் கட்சி தலைமை பொறுப்பை கொடுக்க முடியுமா? அவர் கட்சி தலைவராக இருக்க முடியுமா?

திரும்ப.. திரும்ப
அதுமட்டுமல்ல, சமாதியில் அஞ்சலி செலுத்திவிட்டு, செய்தியாளர்களிடம் பேசும்போதும் ஜெயலலிதாவை அடிக்கடி குறிப்பிட்டு பேசியதையும் கவனிக்க முடிந்தது.. "எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆன்மாக்களுக்கு அதிமுக தொண்டர்களின் வணக்கம்" என்று சொல்லிவிட்டுதான் தன் பேட்டியை துவங்கினார்.. தொடர்ந்து பேசிய அவர், "தொண்டர்களின் இயக்கமாக, யாராலும் வெல்ல முடியாத இயக்கமாக அதிமுகவை எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவாக்கினார்கள், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போலவே இந்த கட்சியை வழிநடத்துவேன்" என்று திரும்ப திரும்ப ஓபிஎஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications