மீனு நழுவுதே.. ஸ்டாலினுக்கு "சான்ஸ்" தந்துட்டாரோ எடப்பாடி பழனிசாமி..கெட்டியா பிடிச்சிக்கிச்சு திமுக
சென்னை: பாஜகவை நிஜமாகவே கூட்டணியிலிருந்து அதிமுக கழட்டிவிட்டதா? அல்லது அரசியல் வியூகமா? என்ற குழப்பம் தொடர்ந்து நிலவிவரும் நிலையில், திமுக இந்த விஷயத்தில் சற்று கூடுதல் கவனத்தை செலுத்தி வருகிறதாம்.
தமிழக ஆளுநர் அவ்வப்போது வெளிப்படுத்தும், கருத்துக்களுக்கு திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் தொடர்ந்து கண்டனங்களை பதிவு செய்து வருகின்றன.. மற்றொருபக்கம், ஆளுநரின் பேச்சுக்கள் பொதுத்தளத்தில் விவாதத்தையும் உருவாக்கி வருகிறது. அப்படித்தான், இப்போதும், ஆரியம் - திராவிடம் குறித்த பேச்சு பரபரப்பை தந்து வருகிறது.

மாய தோற்றம்: திராவிடம், ஆரியம் என 2 வேறு இனங்கள் இங்கு இருப்பது போன்ற ஒரு தோற்றத்தை ஆங்கிலேயர்கள் உருவாக்கினார்கள். ஆனால், உண்மையில் ஆரியம், திராவிடம் ஆகிய இனங்களே கிடையாது என்று பேசியதற்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன..
ஆரியர்கள், திராவிடர்கள் என்ற இனக்குழுக்கள் இருப்பதை எத்தனையோ வரலாற்று ஆசிரியர்கள் உறுதிப்படுத்தி இருக்கிறார்கள் என்று திமுக பதிலளித்து வருகிறது. அத்துடன், பாஜக தூக்கி பிடிக்கும் மனுதர்மமே திராவிடர், ஆரியர் இனங்களை குறிப்பிட்டிருக்கிறது என்றும் மேற்கோள்களை காட்டிவருகிறார்கள்.
வெட்கமேயில்லை: நேற்றுகூட மூத்த தலைவர் டிஆர் பாலு சொல்லும்போது, "பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் உருவாக்கிய கவர்னர் என்ற நியமன பதவியில், வெட்கமின்றி உட்கார்ந்துகொண்டு கூச்சமில்லாமல் பொய்களை பேசுகிறார் ஆளுநர்" என்று கடுமையாக விமர்சித்திருந்தார். ஆனால், அதிமுகவோ, இதுகுறித்து எந்த கருத்தையுமே சொல்லாமல் அமைதி காத்து வருகிறது.
சமீபத்தில், இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.. ஆனால், இந்த கேள்வியை அவர் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.
புராணம்: "இங்க பாருங்க.. இதை பத்தி பேசணும்னா புராணம் படிக்கணும்.. நான் அந்த அளவுக்கு படிச்சவன் கிடையாது. பெரிய ஆய்வு பண்ணி பேச வேண்டிய விஷயம் இதெல்லாம்.. ஆளுநர் அப்படி சொன்னார்னா நீங்க அவரிடம் தான் போய் கேக்கணும்.. என்ட்ட வந்து கேட்டீங்கனா எனக்கு என்ன தெரியும்? வரலாற்று அறிஞர்களிடம் கேட்க வேண்டிய கேள்வி இது" என்று சொன்னாரே தவிர, கேள்விக்கு பதிலளிக்கவில்லை.
அதிமுக என்ற கட்சியே, திராவிடம் என்ற பெயரை தாங்கிய கட்சியாக இருக்கும்போது, எடப்பாடி பழனிசாமியின் இந்த மவுனம் பெருத்த சலசலப்பை அரசியல்களத்தில் உண்டுபண்ணி உள்ளது.
திமுகவை போலவே, அதிமுகவும் இந்த பிரச்சனையை எதிர்கொண்டிருக்க வேண்டும் என்ற விமர்சனங்களும், சோஷியல் மீடியாவில் வெடித்து கிளம்பி உள்ளன. பாஜகவின் சிஏஏ விவகாரத்திற்கு மட்டும், காரணம் சொன்ன எடப்பாடி பழனிசாமி, கவர்னருக்கு எதிராக கருத்து சொல்லாதது ஏன் என்ற சந்தேகம் கிளம்பி உள்ளது.
நாடகம்: இந்த விஷயத்தைதான், இப்போது திமுக கெட்டியாக பிடித்துக்கொண்டதாம்.. பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று அதிமுகவில் தீர்மானம் போட்டபோதே, அதை நாடகம் என்று விமர்சித்திருந்தது திமுக..
சிறுபான்மையினர் வாக்குகளை கவருவதற்காக, அதிமுகவின் அரசியல் வியூகம், தேர்தல் முடிந்ததுமே, இந்த நாடகம் முடிவுக்கு வரும் என்றும் தொடர்ந்து விடாமல் கூறிவருகிறது..
அதுமட்டுமல்ல, கூட்டணியிலிருந்து பாஜகவை விலக்கி வைத்தது உண்மையென்றால், "மதவாத பாஜக" என்று எடப்பாடி பழனிசாமி பகிரங்கமாக சொல்ல வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேட்டு வருகிறார்கள்.
பாஜக மீது விமர்சனம்: எடப்பாடியும் சரி, அதிமுக தலைவர்களும் சரி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை மட்டும் விமர்சிக்கிறார்களே தவிர, மோடியையோ, அமித்ஷாவையோ அல்லது பாஜகவின் கொள்கைகளையோ, தமிழகத்துக்கு எதிரான மத்திய அரசின் திட்டங்களையோ, இதுவரை விமர்சிக்கவில்லையே ஏன் என்றும் கேட்டு வருகிறார்கள்.
இப்படிப்பட்ட சூழலில், சித்தாந்த ரீதியான மோதலில் கவர்னருக்கு எதிராசென்னை: பாஜகவை நிஜமாகவே கூட்டணியிலிருந்து அதிமுக கழட்டிவிட்டதா? அல்லது அரசியல் வியூகமா? என்ற குழப்பம் தொடர்ந்து நிலவிவரும் நிலையில், திமுக இந்த விஷயத்தில் சற்று கூடுதல் கவனத்தை செலுத்தி வருகிறதாம்.

இப்படிப்பட்ட சூழலில், சித்தாந்த ரீதியான மோதலில் கவர்னருக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி கருத்து சொல்லாததை, திமுக தற்போது கையிலெடுத்துள்ளதாம். திமுகவின் இந்த அதிரடி, எடப்பாடி பழனிசாமிக்கு நிச்சயம் ஒருவித நெருக்கடியை ஏற்படுத்தக்கூடும் என்றும் சொல்கிறார்கள்..
ஆக, மேலிட பாஜகவை எந்த அளவுக்கு விமர்சிக்கிறதோ, அவையெல்லாம் அதிமுகவுக்கு ஆதரவு ஓட்டுக்களாக மாறக்கூடும் என்று அரசியல் விமர்சகர்கள் சொல்லிவரும்நிலையில், ஆளுநர் விஷயத்தில் அதிமுகவின் "நிசப்தம்" பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியிருக்கிறதாம்.. அடுத்து என்ன நடக்க போகிறது? பொறுத்திருந்து பார்ப்போம்...!!க எடப்பாடி பழனிசாமி கருத்து சொல்லாததை, திமுக தற்போது கையிலெடுத்துள்ளதாம். திமுகவின் இந்த அதிரடி, எடப்பாடி பழனிசாமிக்கு நிச்சயம் ஒருவித நெருக்கடியை ஏற்படுத்தக்கூடும் என்றும் சொல்கிறார்கள்..
ஆக, மேலிட பாஜகவை எந்த அளவுக்கு விமர்சிக்கிறதோ, அவையெல்லாம் அதிமுகவுக்கு ஆதரவு ஓட்டுக்களாக மாறக்கூடும் என்று அரசியல் விமர்சகர்கள் சொல்லிவரும்நிலையில், ஆளுநர் விஷயத்தில் அதிமுகவின் "நிசப்தம்" பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியிருக்கிறதாம்.. அடுத்து என்ன நடக்க போகிறது? பொறுத்திருந்து பார்ப்போம்...!!
-
செக் வைத்த எடப்பாடி பழனிசாமி! அண்ணாமலை அப்செட்? தமிழக பாஜக வேட்பாளர் தேர்வு கூட்டத்தில் மிஸ்ஸிங்! -
அவிநாசி தனபால், ஆரணி சேவூர் ராமசந்திரன் உள்பட 13 அதிமுக சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் மறுப்பு! -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ஓபிஎஸ்ஸுக்கு பதில்! போடியில் நாராயணசாமி! லால்குடியில் லீமா! கோபியில் பிரபு! களநிலவரம் என்ன? -
கோவையில் 6 சிட்டிங் எம்எல்ஏவுக்கு மீண்டும் வாய்ப்பு.. செங்கோட்டையனை எதிர்த்தவருக்கே வாய்ப்பில்லையா -
எடப்பாடி ரொம்ப மாறிட்டாரே.. இது எதிர்பார்க்காத வேகம்.. அதே ஜெயலலிதா ஸ்டைல்.. கவனிச்சீங்களா? -
அவிநாசி, ஊட்டி, நாகர்கோவில்! அதிமுக கோட்டைகளை பாஜகவுக்கு தாரை வார்ப்பதா? கொந்தளிக்கும் நிர்வாகிகள் -
தனபால் மட்டுமல்ல.. பட்டியலின முன்னாள் அமைச்சர்களும் அதிமுகவில் புறக்கணிப்பு.. பிரஷரில் எடப்பாடி! -
சென்னை அதிமுக வேட்பாளர்கள் யார்? 12 தொகுதிகளின் பெயர்கள் மட்டும் மிஸ்ஸிங்.. எடப்பாடி கணக்கு என்ன? -
மதுரையில் 8 தொகுதிகளில் களமிறங்கும் அதிமுக.. மதுரை வடக்கில் சரவணன்.. யார் யாருக்கு வாய்ப்பு? -
நிஜ வாழ்க்கை வேற..சினிமா வேறு.. தூங்கி எழுந்ததும் எல்லாம் மாறிவிடும்! விஜய்யை போட்டு பிளந்த எடப்பாடி -
297 வாக்குறுதி.. சாமானியர்களிடம் சென்று சேராத அதிமுகவின் தேர்தல் அறிக்கை.. ஆர்வம் காட்டாத தொண்டர்கள்

Click it and Unblock the Notifications