முகம் சுருங்க.. கண்கள் சிவக்க.. மாறி மாறி சரமாரி பேச்சு.. தோனி - ஜடேஜா இடையே மோதல்? என்னாச்சு?
சென்னை: நேற்று டெல்லி போட்டியில் வென்றதற்கு பின் ஜடேஜா - தோனி இடையே விவாதம் நடந்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிஎஸ்கே அணி ஒரு வழியாக போராடி ப்ளே ஆப் போட்டிகளுக்கு ஐபிஎல் 2023 சீசனில் சென்றுள்ளது. இதுவரை சிஎஸ்கே ஆடிய 14 போட்டிகளில் 12ல் சிஎஸ் கே அணி ப்ளே ஆப் சென்றுள்ளது.

நேற்று டெல்லிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 223 ரன்களை எடுத்தது. டெல்லி அணி வெறும் 146 ரன்களை எடுத்து தோல்வி அடைந்தது. இதில் ஜடேஜா 7 பந்துகளில் 20 ரன்களை எடுத்தார்.
இந்த போட்டியில் ஜடேஜா நன்றாக பேட்டிங் செய்தாலும் இதற்கு முந்தைய போட்டிகளில் அவர் சரியாக பேட்டிங் செய்யவில்லை. முக்கியமாக பேட்டிங்கில் விருப்பமே இல்லை என்பது போல அவர் ஆடி வருகிறார். ஏற்கனவே சிஎஸ்கே அணியில் கடந்த சீசனில் அவரின் கேப்டன்சி பறிக்கப்பட்ட காரணத்தால் அவர் அணி நிர்வாகத்தின் மீது அதிருப்தியில் இருந்தார்.
இந்த சீசனில் அவர் சிஎஸ்கேவில் ஆடும் விருப்பத்திலேயே இல்லை. தோனி அவரிடம் பேசி சமாதானம் செய்த காரணத்தினாலேயே அவர் மீண்டும் அணிக்குள் வந்தார்.
இந்த நிலையில்தான் அவரின் ஆட்டத்தை பார்த்துவிட்டு, விருப்பம் இல்லைன்னா.. டீமை விட்டு போங்க பாஸ் என்று ரசிகர்கள் விமர்சனம் செய்ய தொடங்கி உள்ளனர்.
இதனால்தான் ஜடேஜாவை நீக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை ரசிகர்கள் வைக்க தொடங்கி உள்ளனர்.
மோதல்
இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு ஜடேஜாவிற்கு மைதானத்தில் பெரிய வரவேற்பு இல்லை.
சிஎஸ்கே கேப்டன் தோனி காரணமாக 2023 ஐபிஎல் சீசன் அதிக கவனம் பெற்றுள்ளது. எங்கே சென்றாலும்.. எல்லா மைதானங்களில் தோனிக்கு என்று ஸ்பெஷல் ரசிகர்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றனர். அவரை காண ஆயிரக்கணக்கில் மக்கள் வர தொடங்கி உள்ளனர்.
தோனியின் கடைசி சீசனாக இது இருக்கும் என்பதால் அவரை காண ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் வர தொடங்கி உள்ளனர். இதனால் சிஎஸ்கே ஆடும் போட்டிகளில் எல்லாம் மைதானமே மஞ்சள் நிறத்தில் காணப்படுகிறது.
தோனியின் கடைசி சீசனாக இது இருக்குமோ என்ற அச்சம் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது. இதனால்தான் ஜடேஜா பேட்டிங் செய்யும் போது அவர் அவுட் ஆனால் கூட அதற்காக வருத்தப்படாமல்.. ஓ என்று கத்தி ரசிகர்கள் விமர்சையாக கொண்டாடி வருகிறார்கள்.
இது ஜடேஜா மனதையும் புண்படுத்தி உள்ளது.
மோதல் நடந்ததா?
இந்த நிலையில்தான் நேற்று டெல்லி போட்டியில் வென்றதற்கு பின் ஜடேஜா - தோனி இடையே விவாதம் நடந்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
போட்டி முடிந்த பின் ஜடேஜா தோளில் கையை போட்டு தோனி ஏதோ சொன்னார். உடனே ஜடேஜா பதிலுக்கு ஏதோ சொல்ல.. இரண்டு பேரும் காரசாரமாக விவாதம் செய்தனர். இந்த விவாதம் முற்றவே தோனி முகத்தை சுருக்கிக்கொண்டு கோபமாக பேசினார்.
அவர் இப்படி பேசியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே தோனி - ஜடேஜா இடையே கருத்து வேறுபாடு உள்ளதாக சொல்லப்படும் நிலையில்தான் ஜடேஜா - தோனி இடையே நேற்று மோதல் ஏற்பட்டதோ என்று எண்ண தோன்றுகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications