சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அய்யோ கொழுப்பை இஷ்டத்திற்கு சாப்பிடும் பேலியோ டயட்டை ஃபாலோ செய்தால் கிட்னி செயலழிப்பா?.. உண்மை என்ன?

Google Oneindia Tamil News

சென்னை: கொழுப்பு வகை உணவுகளை இஷ்டத்திற்கு சாப்பிடும் பேலியோ உணவு முறையை பின்பற்றினால் கிட்நி பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்விக்கு சிவகங்கை அரசு மருத்துவர் பரூக் அப்துல்லா விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: சிறுநீரகம் பழுதான நிலையில் உள்ளவர்களுக்கு கூட ஒரு நாளைக்கு அறுபது கிராம் வரை புரதம் கொடுத்து மாவுச் சத்தை குறைத்தால் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதை கண்டு வருகிறோம்.

ஆரம்ப கட்ட சிறுநீரக நோய்க்கு குறை மாவு கீட்டோ உணவு முறையை உபயோகித்து சிறுநீரகத்தின் செயல்திறனை கூட்ட முடியும் என்கிறது பின்வரும் ஆய்வு முடிவு (https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC7071259/)கலோரி குறைவாக தேவைப்படும் உணவு முறைகளான கீட்டோ உணவு முறைகளில் ஏற்படும் எடை குறைப்பின் பயனாய் சிறுநீரகத்தின் செயல்திறன் இம்ப்ரூவ் ஆவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன (https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3798146/)

சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் ஊசி நல்லதா? கெட்டதா?.. விளக்கும் அரசு மருத்துவர் பரூக் அப்துல்லா சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் ஊசி நல்லதா? கெட்டதா?.. விளக்கும் அரசு மருத்துவர் பரூக் அப்துல்லா

சிறுநீரக நிபுணர்

சிறுநீரக நிபுணர்

ஆலன் ஃப்ரீட்மென் எனும் சிறுநீரக சிறப்பு நிபுணரின் கீழ் அமைந்த குழு செய்த ஆய்வின் முடிவில் இரண்டு வருடங்கள் தொடர்ந்து கீட்டோ உணவு முறையில் இருந்தவர்களுக்கு சிறுநீரகத்தில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்ற முடிவு கிடைத்துள்ளது. இந்த ஆய்வு அமெரிக்க சிறுநீரக சிறப்பு நிபுணர்களின் இதழில் வெளியிடப்பட்டுள்ளது . (https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3386674/)

பேலியோ உணவுமுறை

பேலியோ உணவுமுறை

பேலியோ உணவு முறைக்கு ஒருவர் வருவதற்கு முன்னர் முழு ரத்தப்பரிசோதனையும் குறிப்பாக அதில் நான் பார்ப்பது யூரியா , க்ரியாடினின், யூரிக் அமிலம் ஆகியவற்றையும் கூடவே அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் வயிற்றுப்பகுதியில் எடுத்துப்பார்க்கப்படுகிறது. அதில் சிறுநீரகத்தில் ஏற்கனவே பழுது இருக்கிறதா ? என்றும் ஏதேனும் கற்கள் உண்டாகியிருக்கிறதா? என்பதை அறிந்து அதற்கேற்றாற் போல புரதத்தின் அளவு குறைக்கப்படுகிறது.

 விலங்குகள்

விலங்குகள்

இன்னும் பலருக்கு விலங்குகளின் மாமிசம் அவற்றில் உள்ள புரதச்சத்திற்காக தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. இன்னும் மூன்று மாதங்களுக்கு ஒருமுறையேனும் ரத்தப்பரிசோதனை மூலம் அனைத்து உடல் கூறுகளும் சிறப்பாக இயங்குவதை உறுதி செய்து கொண்டே இருப்பதும் அதனால் தான். அனைவரும் ஒன்று புரிந்து கொள்ள வேண்டும். உயிர் வாழ அத்தியாவசியத் தேவையான சத்து புரதச்சத்தாகும்.

 சிறுநீரகம்

சிறுநீரகம்

சிறுநீரகம் முழுவதும் பழுதான End stage kidney நோயாளிகளுக்கும் கூட தினமும் கட்டாயம் 60 கிராம் புரதச்சத்து பரிந்துரைக்கப்படுகிறது. புரதச்சத்து நம்மை புணர்நிர்மாணம் செய்யவும் கட்டமைப்பு செய்யவும் அவசியமான சத்தாகும். புரதச்சத்தால் கிட்னி பழுதாவவதில்லை. அது ஒரு மூடநம்பிக்கையாகும். கீட்டோ உணவு முறையில் பலர் தங்களது நீரிழிவு ரத்த கொதிப்பை கண்ட்ரோல் செய்து சிறுநீரகத்தின் செயல் திறனை மீட்டுள்ளனர்.

பேலியோ உணவு முறை

பேலியோ உணவு முறை

வெறுமனே ஒரு செய்தி மூலம் கீட்டோ எனும் பேலியோ உணவு முறை மீது களங்கம் சுமத்தும் வேலைகளை செய்வது தவறான போக்காகும். மாறாக இது புரதச்சத்தின் மீதும் அதுவும் மாமிசம் சார்ந்து புரதச்சத்தின் மீதும் மக்களுக்கு ஒவ்வாமையையும் அச்சத்தையும் ஏற்படுத்த செய்யப்படும் விசயமாக இருக்கலாம். பேலியோ உணவு முறையை முறையான கட்டுப்பாடுடனும் முறையான வழிகாட்டுதலுடனும் கடைபிடிப்போர் ஏனையர் நல்ல உடல் நலத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

பெரிய மருத்துவமனை

பெரிய மருத்துவமனை

இப்போது கூட பெரிய மருத்துவமனைகளில் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு டயாலசிஸ் செய்யப்படும் மக்களிடம் சென்று அவர்கள் என்ன உணவு சாப்பிட்டார்கள் என்று கேட்டால் தயங்காமல் இட்லி தோசை சோறு சப்பாத்தி என்று தான் 99.9% பேரிடம் இருந்தும் பதில் வரும். ஒருவர் கடைபிடிக்கும் உணவு முறையைத்தான் நாம் கேள்விக்குறியதாக ஆக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டால் முதலில் நாம் கேள்வி கேட்க வேண்டியது இந்த நார்மல் டயட் என்று அழைக்கப்படும். இட்லி தோசை சோறு சப்பாத்தி புரோட்டா உணவு முறையைத்தான் என்று கூறி இந்தப்பதிவை நிறைவு செய்கிறேன் என டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

English summary
Sivagangai Government Doctor Farook Abdulla says about What is Paleo Diet? whether it cause damage to Kidney?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X