போயஸ் கார்டனிலிருந்து பறந்து வந்த "பெரிய பொறி".. வலையில் விழுது பல திமிங்கலங்கள்? குலுங்குது சென்னை
சென்னை: விரைவில் எம்பி தேர்தல் வரவுள்ள நிலையில், அதிமுக களம் சூடுபிடிக்கிறது. அந்தவகையில், போயஸ் கார்டனிலிருந்து ஒரு செய்தி கசிந்து கொண்டிருக்கிறது.
ஒருங்கிணைந்த அதிமுக வேண்டும் என்பதில் சசிகலா அன்று முதல் இன்றுவரை உறுதியாக இருந்து வருகிறார். இதற்கு காரணம், திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே லட்சியம்தான்.

அதனால்தான், விமர்சிக்கக்கூடிய சூழல்கள் பல வந்தபோதிலும்கூட, இப்போதுவரை, அதிமுக தலைவர்களை பற்றி ஒருவார்த்தையும் கடுமையாக பேசாமல் இருக்கிறார்.. யாரையும் கடிந்து கொள்ளாமல் இருக்கிறார்.
விமர்சனம்: ஆனால், இது அவரது நிஜஇயல்பு கிடையாது.. இதுவே பழைய சின்னம்மாவென்றால், அந்த அணுகுமுறையே சரவெடியாக இருக்கும்.. 30 வருடம் அதிமுகவின் மேட்டத்தில் லாபி செய்தவர்.. எந்த அதிரடிகளை கையிலெடுக்க தயங்காதவர்.. அப்படிப்பட்டவர், தன்னுடைய சிறைவாசத்துக்கு பிறகு, மென்மையான அரசியலையே கையிலெடுத்து வருகிறார்.
அவ்வளவுஏன்? தனக்கான ஆதரவை எந்த காலத்திலும் வழங்க தயாராக இருக்கும், ஓபிஎஸ்ஸையே, இதுவரை சந்திக்காமல் தவிர்த்து வருகிறார். தனக்காகவே ஒதுக்கப்பட்ட தினகரன் கட்சியின் தலைமை பொறுப்பையும் தூக்கி எறிந்துவிட்டார்.. எடப்பாடி பழனிசாமி நடத்திய மாநாடுகளுக்கும் போகவில்லை, ஓபிஎஸ் நடத்திய மாநாடுகளுக்கும் போகவில்லை. தினகரன் நடத்திய பொதுக்கூட்டங்களுக்கும் போகவில்லை..
என்ன காரணம்: இதெல்லாவற்றிற்கும் காரணம், அனைவருமே ஒன்று சேர்ந்து அதிமுகவை வழிநடத்த வேண்டும் என்பதுடன், "சாதி முத்திரை" தன்மீது எந்தரூபத்திலும் விழுந்துவிடக்கூடாது என்பதிலும் கவனமாக இருப்பதாகவே தெரிகிறது.
ஆனால், எடப்பாடி பழனிசாமியோ, "மன்னார்குடி' சங்காத்தமே வேண்டாம் என்று நினைக்கிறாராம்.. ஒருங்கிணைந்த அதிமுக என்ற அவரது கோரிக்கையையும் ஏற்கவில்லையாம்.
சின்னம்மா: சமீபத்தில், அதிமுக மூத்த தலைவர் முனுசாமிக்கு போனை போட்ட சின்னம்மா, "என்.டி.ஏ. கூட்டணியிலிருந்து அதிமுக வெளியேறிய முடிவு பாராட்டுதலுக்குரியது, கொஞ்சம் பழனிச்சாமியிடம் ஃபோனை கொடுக்க முடியுமா?" என்று கேட்டாராம். ஃபோனை எடப்பாடி வாங்கியதும், வாழ்த்துக்களை சொல்லியிருக்கிறார் சசிகலா.
வாழ்த்துக்கு நன்றி சொல்லி விட்டு, உடனே ஃபோனை எடப்பாடி பழனிசாமி துண்டித்துக் கொண்டதாக காற்று வாக்கில் தகவல் வெளியானது.
எனினும், மனம் தளராத நிலையில், எடப்பாடி பழனிசாமியின் பச்சைக்கொடிக்காக இன்னமும் காத்திருப்பதாகவும், பிரிந்தவர்களை ஒன்று சேர்ப்பேன் என்றும் உறுதியுடன் சொல்லி வருகிறாராம்.. அத்துடன், இலைக்கட்சியின் பொதுச்செயலாளர் நான்தான் என்பதையும் மீண்டும் சொல்லி வருகிறாராம்.
போயஸ் கார்டன்: இப்படிப்பட்ட சூழலில்தான், தன்னுடைய போயஸ்கார்டன் புது வீட்டுக்கு அவரது ஆதரவாளர்களை வரும்படி அழைப்பு விடுத்திருக்காராம்.. விரைவில் ஜெ.பிறந்தநாள் வர உள்ளதால், அன்றைய தினம், தன்னுடைய புது வீட்டுக்கு வரும்படி அனைவரையும் அழைத்திருக்கிறாராம்.
அதன்படி, மாநிலம் முழுவதிலுமிருந்து கிட்டத்தட்ட 3000 பேரை திரட்டவும் பிளான் செய்துள்ளாராம்.. எதற்காக இந்த புது அழைப்பு? அதுவும் 3000 பேர்? என்று தெரியாமல் பல அதிமுக நிர்வாகிகள் குழம்பி போயிருக்கிறார்களாம்..
என்னாகும்: சிறையிலிருந்து வந்து இத்தனை வருடமாக எடுத்த முயற்சிகள், தோல்வியை தந்துவரும் நிலையில், போயஸ்கார்டன் வீட்டு நிகழ்ச்சியிலாவது, தன்னுடைய முடிவை சொல்வாரா? அப்படியே ஏதாவது முடிவை அறிவித்தாலும், எடப்பாடியை விட்டு செல்வதா? வேண்டாமா? எதிர்காலம் கேள்விக்குறியாகிடுமோ? என்றெல்லாம் குழம்பியிருக்கிறார்களாம். பொறுத்திருந்து பார்ப்போம்..!!
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்!












Click it and Unblock the Notifications