Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆருத்ரா உள்பட மோசடி நிதி நிறுவனங்களிடம் முதலீடு செய்தவர்களா? நல்ல செய்தி சொன்ன டிஜிபி

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆருத்ரா கோல்டு நிறுவனம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும் மோசடி நிதிநிறுவனங்களிடம் ஏமாந்த முதலீட்டாளர்களுக்கு அடுத்த ஒரு வருடத்துக்குள் உரிய பணம் திரும்ப கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக காவல்துறை டி.ஜி.பி. சைலேந்திரபாபு தெரிவித்தார்.

பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வரும் மோசடி நிதி நிறுவனங்கள் பற்றிய வழக்குகள் தொடர்பாக ஆலோசனை கூட்டம் அண்மையில் நடந்தது. இதில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.

Did they invest in fraudulent financial institutions like aarudhra gold? Good news from DGP

ஆருத்ரா கோல்டு நிறுவனம், ஹிஜாவு, எல்.என்.எஸ், ஐ.எப்.எஸ் மற்றும் எல்பின் போன்ற மோசடி நிறுவனங்கள் தொடர்பான வழக்குகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அந்த நிறுவனங்கள் மீதான நடவடிக்கை குறித்த தற்போதைய நிலை, கைதானவர்கள் பற்றிய தகவல், ஏமாந்த முதலீட்டாளர்களுக்கு பணத்தை திரும்ப பெற்றுத்தருதல் போன்ற விவரங்கள் குறித்து கூட்டத்தில் முக்கியமாக பேசப்பட்டது. வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்றவர்களை கைது செய்வது குறித்து எடுத்த நடவடிக்கைகள் பற்றியும் ஆய்வு செய்யப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளை ஏலம் விடுவது சம்பந்தமாகவும், ஏஜெண்டுகளாக செயல்பட்ட 1,500 பேர்களின் சொத்துகளை பறிமுதல் செய்வது மற்றும் அவர்களிடம் இருந்து இழப்பீட்டை பெறவும், மோசடி நிறுவனங்களிடம் பணம் செலுத்தி ஆரம்ப காலத்தில் உரிய லாபம் பெற்றவர்களிடம் இழப்பீடு பெறுவது பற்றியும் அதிகாரிகளுக்கு உரிய ஆலோசனை வழங்கப்பட்டது. ஏமாந்த முதலீட்டாளர்களுக்கு அடுத்த ஒரு வருடத்துக்குள் உரிய பணத்தை திரும்ப பெற்று தருவதற்காக உரிய ஏற்பாடுகளை விரைவாக செய்யவும், கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது.

இதனிடையே ஆருத்ரா நிதி நிறுவனம் மோசடி வழக்கில், பொருளாதார குற்ற பிரிவு காவல்துறையினர் 50 பக்க அளவிலான குற்றப்பத்திரிக்கையை சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

சென்னை அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்ட ஆருத்ரா கோல்டு நிறுவனம், அதிக வட்டி தருவதாகக் கூறி சுமார் 1 லட்சம் முதலீட்டாளர்களிடம் இருந்து, 2,438 கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது.

இதுதொடர்பாக 40 பேர் மீது பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவு வழக்குப்பதிவு செய்ததன் அடிப்படையில், அந்நிறுவனத்தின நிர்வாக இயக்குனர்கள் ராஜசேகர், உஷா ராஜசேகர், மைக்கேல் ராஜ் ஆகியோர் வெளிநாட்டில் தலைமறைவாகினர்.

இந்த வழக்கில் பாஸ்கர், மோகன்பாபு, செந்தில்குமார், நாகராஜன், பேச்சிமுத்துராஜா, நடிகர் ரூசோ ஆகியோர் கைதுசெய்யப்பட்டு அவர்களிடம் நடத்திய விசாரணையின்போது இந்த மோசடியில் திரைப்பட நடிகர்- தயாரிப்பாளர் மற்றும் தமிழக பா.ஜ.க. ஓ.பி.சி. பிரிவு துணை தலைவரான ஆர்.கே.சுரேசுக்கும், பிஜேபி நிர்வாகி ஹரீஷ் ஆகியோருக்கும் தொடர்புள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

61 இடங்களில் நடந்த சோதனையில் 6 கோடியே 35 லட்சம் ரொக்கம், ஒரு கோடியே 13 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், 22 கார்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதுடன், வங்கிக் கணக்கில் இருந்த 96 கோடி ரூபாய் டெபாசிட், 103 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.

இந்த வழக்கில் டான்பிட் நீதிமன்றம் எனப்படும் தமிழ்நாட்டு முதலீட்டார்கள் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை தரப்பில், அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் டி.பாபு தாக்கல் செய்தார். நேற்று தாக்கல் செய்யப்பட்ட 50 பக்க அளவிலான குற்றப்பத்திரிக்கையில்,முதற்கட்டமாக 360 புகார்களில் தொடர்புடைய 17 கோடியே 50 லட்சம் ரூபாய் மோசடி குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கு தொடர்புடைய 3,000 பக்கம் அளவிலான கூடுதல் ஆவணங்களை ஒரு நாட்களில் தாக்கல் செய்யப்படும் என கூறப்படுகிறது. இவற்றை நீதிபதி ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி இவற்றின் நகலை அவர்களுக்கு வழங்குவார்.
மேலும் மாவட்ட வருவாய் அதிகாரியிடம் நிலுவையில் உள்ள ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 255 புகார்கள் குறித்த விசாரணைக்கு பிறகு கூடுதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+