"நிறம்" மாறுகிறாரா திருமாவளவன்.. "அவர்"கூட சேருகிறாரா.. குறுக்கே பாமக வேற.. அப்ப பாஜக?.. "2 தீப்பொறி"

திருமாவளவன் பாஜகவுடன் கூட்டணி என்று ஏன் சொன்னார் என்ற அலசல்கள் நடந்து வருகின்றன

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்துத்துவா சக்திகளுக்கு எதிராக விசிக தலைவர் திருமாவளவன் களவாடினாலும், கூட்டணி விஷயத்தில் தடம்மாறி செல்ல போகிறாரா என்ற சந்தேகமும் அடிக்கடி அரசியல் களத்தில் கிளம்புவது வழக்கம்தான்.. இதற்கு சில உதாரணங்களும் வழக்கமாக சொல்லப்பட்டே வருகின்றன.. இந்நிலையில், "பாஜகவுடன் கூட்டணி வைக்க தயார்" என்று திருமாவளவன், சமீபத்தில் பேசிவிடவும், இது தொடர்பான விவாதங்களும், அலசல்களும், சோஷியல் மீடியாவில் மறுபடியும் வலம் வர துவங்கி உள்ளன.. திருமா அப்படி பேச காரணம் என்ன?

கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் நடந்த சமூக நல்லிணக்க மாநாட்டில், திருமாவளவன் பேசிய பேச்சின் கதகதப்பு இன்னும் குறையவில்லை.. சலசலப்புகளும் குறையவில்லை பலரால் இன்னும் அதை நம்பவே முடியவில்லை.

திமுக கூட்டணியில் விசிக நல்ல புரிதலுடன், இணக்கமாக இருந்து வருகிறது.. திமுகவுடன் தான் கூட்டணி என்பதை, பலமுறை திருமாவளவனே பகிரங்கப்படுத்தி, தெளிவுபடுத்தியும் உள்ளார். அப்படி இருக்கும்போது, அருமனையில் திருமா ஏன் அப்படி பேசினார்? என்ற குழப்பமும் மேலோங்கி வருகிறது.

ஹிந்துமதம்

ஹிந்துமதம்

திருமாவளவன் பேசும்போது, "மத வெறுப்பை பேசி வரும் பாஜகவை விமர்சித்தால், இந்து மதத்தை விமர்சிப்பதாக பாஜகவினர் கூறுகிறார்கள். விசிகவில் இருப்பவர்களில் 80% பேர் இந்துக்கள்தான். சமூகத்தில் இந்துக்கள்தான் பெரும்பான்மை மக்கள். பாஜகவினர் பேசும் வெறுப்பு அரசியலை தான் எதிர்க்கிகிறோம். மார்க்ஸ், அம்பேத்கர், பெரியாரின் அரசியலைதான் விசிக பேசுகிறது. ஹிந்து மதத்தில் இருக்கும் ஏற்றதாழ்வால் தான் யாரும் ஹிந்து மதத்தில் இணையவில்லை. பாஜகவினர் சமத்துவத்தை பேசினால், விசிக அவர்களோடு கைகோர்க்க தயங்காது. எங்களுக்கும் அவர்களுக்கும் அரசியலும், கொள்கைகளிலும்தான் முரண்பாடு" என்று பேசியிருந்தார்.

 பாஜக திருமாவளவன்

பாஜக திருமாவளவன்

திருமாவளவனின் இந்த பேச்சு அரசியல் அரங்கில் விவாதமாக கிளம்பி உள்ளது.. இந்த பேச்சின் அர்த்தம் என்ன? சாராம்சம் என்ன? எம்பி தேர்தல் நெருங்கும் சமயத்தில் திருமாவளவன் ஏன் இப்படி பேசுகிறார்? என்ற இருவிதமான அலசல்களும் சோஷியாவில் கிளம்பி உள்ளன.. ஒருசாரார் குறிப்பாக பாஜகவினர் இதை பற்றி சொல்லும்போது, "திமுகவும்சரி, காங்கிரசும்சரி, விசிகவும் சரி, எதிர்க்கட்சியான அதிமுகவை விட்டுவிட்டு, பாஜகவை அதிகம் விமர்சிக்க துவங்கி உள்ளன.. இதனால், பாஜகவுக்கான முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது.

மிஸ்டேக்குகள்

மிஸ்டேக்குகள்

அதேபோல., திமுகவின் தவறுகள் மற்றும் ஊழல்களை, அண்ணாமலை புட்டு புட்டு வைத்து வரும்நிலையில், பாஜகவின் மதிப்பும் உயர்ந்தபடியே வருகிறது.. இதனால், பாஜகவுக்கான ஆதரவு அலை என்பது, தமிழகத்தில் வீச துவங்கிவிட்டது.. இதைதவிர, திமுக + கூட்டணி கட்சிகளின் செயல்பாடுகளே இந்துக்களை பாஜக பக்கம் திருப்பி விடுவதாகவும் விமர்சனங்களும் வலம் வருகின்றன.. அதனால்தான், பாஜகவை ஆதரிக்கும் இந்துக்களை குழப்பும் வகையில், விசிகவில் இருப்பவர்களில், 80 சதவீதம் பேர் இந்துக்கள், கொள்கைகளை மாற்றிக் கொண்டால், பாஜகவுடன் கூட்டணி வைக்க தயார் என்று திருமாவளவன் பேசுவதாக ஒருசாரார் சொல்கிறார்கள்.

 திருமா திருமாவளவன்

திருமா திருமாவளவன்

மற்றொரு தரப்பிலோ, இதை கூட்டணி கணக்காக பார்க்கப்பட்டு வருகிறது.. சமீபத்தில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், பாரத் ராஷ்டிரிய சமிதி என்ற புதிய கட்சியை துவக்கியிருந்தார்.. அந்த துவக்க விழாவில், திமுக சார்பில் ஒருத்தருமே பங்கேற்கவில்லை. ஆனால் திருமாவளவன் பங்கேற்றிருந்தார்.. அந்த நிகழ்வின்போது, பிற மாநில தலைவர்களிடம் திருமாவளவனை, சந்திரசேகர ராவ் அறிமுகப்படுத்தியும் வைத்திருக்கிறார்.. இதனால் திருமாவளவன், சந்திரசேகர ராவ் தலைமையில் உருவாகும் அணியில் இடம்பெற விரும்புகிறார் என்றும், காங்கிரஸ் அணியில் நீடிக்க விரும்பவில்லை என்பதை வெளிப்படுத்தி விட்டார் என்றும் அப்போதே ஒரு பேச்சு கசிந்தது.

 ஆளூர் ஷாநவாஸ்

ஆளூர் ஷாநவாஸ்

அதுமட்டுமல்ல, இன்னொரு காரணமும் உள்ளது.. வரும் எம்பி தேர்தலில் திமுகவுடன் பாமக கூட்டணி வைக்க விரும்புவதாக தகவல்கள் கசிந்து வருகின்றன.. திமுக கூட்டணியில் பாமக இடம்பெற நேர்ந்தால், நிச்சயம் விசிக அங்கு தொடர முடியாது.. கண்டிப்பாக வெளியேறிவிடும்.. சில தினங்களுக்கு முன்பு, நம் ஒன் இந்தியா தமிழுக்கு ஸ்பெஷல் பேட்டி தந்திருந்த, விசிகவின் ஆளூர் ஷா நவாஸும் இதை உறுதி செய்திருந்ததை இங்கு நாம் நினைவுகூர வேண்டி உள்ளது.

 அன்புமணி

அன்புமணி

அதற்கேற்றவாறு, "பாமகவுடன் கூட்டணி இல்லை" என்று திமுக தரப்பு இதுவரை வெளிப்படையாக சொல்லவில்லை.. திமுகவுடன் கூட்டணி கிடையாது என்று பாமகவின் அன்புமணியும் இதுவரை தெளிவுபடுத்தவில்லை.. அதேபோல, பாமக அதிமுகவுடன்தான் கூட்டணி என்று எடப்பாடி பழனிசாமியும் உறுதியாக சொல்லவில்லை.. இப்படி ஏகப்பட்ட குழப்பங்கள் நிலவிவரும் நிலையில், தேசிய அளவில் கவனம் ஈர்ப்பு போன்ற காரணங்களால், தனித்து பயணிக்க விரும்புவதுடன், திமுக கூட்டணி இல்லை என்றாலும், அதற்கு மாற்று யோசனையில் இறங்க முயற்சிப்பதால்தான், திருமாவளவன் அவ்வாறு பேசியதாக சொல்கிறார்கள்.

 2 அலசல்கள்

2 அலசல்கள்

இப்படி 2 விதமான அலசல்கள் இணையத்தை கவ்வி இருந்தாலும், திமுக கூட்டணியைவிட்டு விசிக எளிதில் விலகாது என்கிறார்கள்.. காரணம், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது, சனாதனமா? சனநாயகமா? என்கிற கோட்பாட்டை முன்வைத்துதான் மாநாடு, பொதுக்கூட்டங்களை நடத்தி திமுக கூட்டணியை பலப்படுத்தினார் திருமாவளவன்.. மேலும் தானே முன்னின்று, ஓடிஓடிச்சென்று ஒவ்வொரு கட்சியாக பேசி ஆதரவையும் திரட்டினார்.. இந்த கூட்டணியை மேலும் வலுப்படுத்துவதற்காகத்தான், திமுக அரசின் தர்மசங்கடத்தை புரிந்து கொண்டு, ஆர்எஸ்எஸ் பேரணிக்காக "தடுப்பு" முயற்சிகளையே மேற்கொண்டார் திருமா.

 2 ராஜாக்கள்

2 ராஜாக்கள்

பாஜக, ஆர்எஸ்எஸ், இந்து மதவாதிகளின் பேச்சுக்கள், போன்றவற்றுக்கு, சரியான பதிலடிகளை தந்து வருவது திருமாவளவன் என்பதால், அவரது முயற்சி ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களுக்கு எதிராக இருப்பவர்களுக்கு பெரும் நிம்மதியையும் தந்து வருகிறது.. அதனால்தான், அதனால்தான், விசிகவை தடை செய்ய வேண்டும் என்று எச்.ராஜா உள்ளிட்டோர் கொந்தளித்து கொண்டே இருக்கிறார்கள்.. திமுகவுக்கு உற்ற நண்பனாக உடனிருந்து, சனாதன எதிர்ப்பு பாதையில் சரியாகவே சென்றுகொண்டிருக்கும் திருமாவளவன், கூட்டணியை விட்டு வெளியேற மாட்டார் என்கிறார்கள்..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+