தேன்கூட்டில் கல்லெறிந்ததா தவெக? வேலுமணி கிட்ட சிவி சண்முகம் கேட்ட அந்த கேள்வி? அப்ப எடப்பாடி முடிவு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவில் சி.வி.சண்முகத்திற்கு எதிராக விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் ஒன்றிணைந்து, இப்போது கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகிறார்களாம்.. அதேசமயம் எடப்பாடி பழனிசாமியுடன் சமரசம் செய்வதற்கு முன்பாகவே வேலுமணிக்கும் சி.வி.சண்முகத்திற்கும் இடையே கடுமையான வாக்குவாதமும் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்தவண்ணம் உள்ளன.. இந்த இரு முக்கிய நிகழ்வுகளும்தான் அதிமுகவின் இப்போதைய அரசியல் சூழலில் எடப்பாடி பழனிசாமியின் அதிகாரத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளதாக தெரிகிறது.. அப்படி என்ன நடந்தது?

இந்த முறை தேர்தல் முடிந்து ரிசல்ட் வந்ததுமே, முக்கிய எதிர்க்கட்சியான அதிமுகவிற்குள் இதுவரை இல்லாத அளவுக்குப் பெரிய சலசலப்பு ஆரம்பித்துவிட்டது.. முக்கியமாக, விழுப்புரம் மாவட்ட அரசியல் நிலவரமும், கொங்கு மண்டல உட்கட்சி மோதல்களும், கட்சியின் தலைமையையே அசைத்து பார்க்க தொடங்கியது.

AIADMK politics

எடப்பாடி பழனிசாமி

தேர்தல் தோல்விகளுக்கு பொறுப்பேற்று பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என்றுதான் தங்களது எதிர்ப்பை முதலில் இவர்கள் ஆரம்பித்தார்கள்.. ஆனால் நாளடைவில் புதிய ஆட்சி மாற்ற சூழலில் அடுத்தடுத்த அதிரடிகளை கிளப்பி விட்டார்கள்.

சட்டமன்றத்தில் புதிய அரசுக்கு ஆதரவு கொடுத்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அணியின் பலம், அடுத்தடுத்து நடந்த அரசியல் நகர்வுகளால் குறைந்து வருகிறது.. , புதிய அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்று ஆசையாக எதிர்பார்த்த நேரத்தில், கூட்டணி கட்சிகளின் பலத்த எதிர்ப்பால் அது முடியாமல் போய்விட்டது.

யூடர்ன் அடித்த அதிருப்தியாளர்கள்

இந்தநிலையில்தான், அதிருப்தியாளர்கள் அப்படியே யூடர்ன் அடித்து எடப்பாடி பக்கம் நகர முடிவு செய்தனர்.. "எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி" என்று எஸ்பி வேலுமணி புள்ளி வைக்க, அடுத்தடுத்த சமாதானப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய கட்டாயத்திற்கு அதிருப்தியாளர்கள் தள்ளப்பட்டனர்.

ஆனால் எடப்பாடியுடனான இந்த சமாதான பேச்சுவார்த்தையில் வேலுமணி காட்டிய ஆர்வத்தை சிவி சண்முகம் காட்டவில்லை.. இதற்கு காரணம், வேலுமணி, சிவி சண்முகம் இரு முக்கிய தலைவர்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள கடுமையான மோதல்தான் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்

அதாவது, தலைமை பொறுப்பிலிருந்து எடப்பாடி விலக வேண்டும் என்று சிவி சண்முகம் குரல் எழுப்பியிருந்தார்.. ஆனால் வேலுமணியோ, தவெகவுக்கு ஆதரவு கொடுக்கும் முடிவையே எடுத்துவிட்டாராம். கடைசியில் இந்தத் திட்டம் தோல்வியடைந்ததால் 4 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு ஆளுங்கட்சியில் அதிகாரப்பூர்வமாக இணைந்துவிடவும், இதுதான் சிவி சண்முகத்துக்கு உச்சக்கட்ட கோபத்தை தந்துவிட்டதாம்.

வேலுமணி சண்முகம் மனஸ்தாபம்

"எல்லா பிரச்னைக்கும் நீங்கள் தான் காரணம்" என்று சிவி சண்முகம் குற்றம் சாட்ட, "இது எல்லாரும் சேர்ந்து எடுத்த முடிவு தானே? இப்போது திடீரென என் பக்கம் கை நீட்டினால் என்ன அர்த்தம்?" என வேலுமணி திருப்பி கேட்டாராம்..

வேலுமணி-சிவி சண்முகம் இடையே மனஸ்தாபம் வெடிக்க இதுவே காரணம் என்றும் அதனால்தான் எடப்பாடியைச் சந்திக்க முடிவான நிலையில்,சி.வி.சண்முகம் மட்டும் வேலுமணி டீமுடன் செல்லவில்லை என்கிறார்கள் வேலுமணி ஆதரவாளர்கள்.

இதனிடையே, சிவி சண்முகத்துக்கு சொந்த மாவட்டத்திலேயே எதிர்ப்புகள் வலுக்க துவங்கி உள்ளன.. விழுப்புரம் மாவட்ட அதிமுகவிற்குள் கடந்த 20 ஆண்டுகளாக ஆதிக்கம் செய்து வந்து வந்த நிலையில், தற்போது அதிருப்திகள் கூடி வருகிறதாம்.

மொத்தமாக ராஜினாமா

சமீபத்தில் கோலியனூர் ஒன்றியத்தில் நடந்த வளவனூர் பேரூர் அதிமுக கூட்டத்தில் தொண்டர்கள் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருக்கிறாள். அதிமுக ஆட்சியில் இருந்தபோது உண்மையாக உழைத்தவர்களை மதிக்காமல், பணம் மற்றும் செல்வாக்கு உள்ளவர்களுக்கு மட்டுமே பதவி கொடுத்ததாக சி.வி.சண்முகத்திற்கு எதிராக உள்ளூர் நிர்வாகிகள் அந்த கூட்டத்தில் குமுறி விட்டார்களாம்.

எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த புதிய மாற்றத்தை வரவேற்கும் அதே நேரத்தில், சி.வி.சண்முகத்தை மீண்டும் கட்சிக்குள் சேர்த்தால் மொத்த விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகளும் ஒன்றாகச் சேர்ந்து பதவியை ராஜினாமா செய்வோம் என்று எடப்பாடியிடம் பகிரங்கமாகவே சொல்லிவிட்டார்களாம்.

அதிமுக தேன்கூட்டில் கல்லெறிந்த தவெக?

ஏற்கனவே, தவெக எடுத்த சில அதிரடி நகர்வுகளால்தான், அமைதியாக இருந்த அதிமுகவிற்குள் பெரிய புயலைக் கிளப்பி, அடுத்தடுத்த உட்கட்சி மோதல்களுக்குக் காரணமாக மாறியுள்ளதாகவும், தவெகவின் இந்த மறைமுக அரசியல் உத்திகள்தான், தற்போது வேலுமணி மற்றும் சிவி சண்முகம் இடையேயான கூட்டணி உடையவும் முக்கியக் காரணம் என்றும் சலசலக்கப்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட நிலையில், சி.வி.சண்முகம் என்ன முடிவெடுப்பார்? மீண்டும் அவரை கட்சியில் எடப்பாரா சேர்ப்பாரா? மாட்டாரா? என தெரியவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+