சப்போர்ட் காலி.. கோபமாக இருக்கும் மக்கள்.. விஜய்க்கு போன ரெட் நோட்டீஸ்.. அவசரமாக எடுத்த சர்வே?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கரூர் சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் முக்கியமான சர்வே ஒன்றை எடுத்து உள்ளாராம். தனக்கு நெருக்கமான அமைப்பு ஒன்றின் மூலம் அந்த சர்வேயை எடுத்துள்ளாராம்.

தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜயின் அரசியல் பெரிய சிக்கலை சந்தித்து உள்ளது. விஜய் அரசியல் ரீதியாக கடும் நெருக்கடியில் சிக்கி உள்ளார். கட்சி தொடங்கி 1 வருடத்தில்.. விஜய் எதிர்பார்க்காத நெருக்கடிகளை சந்தித்து உள்ளார்.

இந்த நிலையில்தான் கட்சி தொடர்பாக விஜய் அவசர அவசரமாக முக்கியமான சர்வே ஒன்றை நடத்தி உள்ளாராம். அந்த சர்வேயில் விஜய்க்கு எதிராக கடுமையான சில கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளதாம். அதன்படி தீவிர விஜய் ரசிகர்கள், இந்த சம்பவத்தில் அரசு மேல் கோபமாக இருக்கிறார்கள். அரசு மேல் விமர்சனங்களை வைக்கிறார்கள். அரசுக்கு எதிராக நிற்கிறார்கள்.

Did TVK Vijay take survey about his political future What is his planning

ஆனால் தீவிர விஜய் பேன்ஸ் அல்லாதவர்கள் விஜய் மீது கடும் கோபத்தில் உள்ளார்கள். இளைஞர்கள் அல்லாத குடும்பத்தினர், பெண்கள் எல்லாம் விஜய் மீது கோபத்தில் உள்ளனர். ஒரு காலத்தில் விஜய் மீது நம்பிக்கையாக இருந்த குடும்பத்தினர் பலர் அவருக்கு எதிராக திரும்பி உள்ளார்களாம் . இன்னொரு நாம் தமிழர், தேமுதிக வாக்குகள் சில விஜய்க்கு செல்வதாக இருந்தது.

அந்த வாக்குகள் எல்லாம் மீண்டும் அவர்களை நோக்கி செல்ல தொடங்கி உள்ளது. விஜய்க்கு இந்த வாக்குகள் மீண்டு வராது என்று அந்த சர்வே தெரிவிக்கிறதாம். இந்த சர்வே காரணமாக விஜய் அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.

போனில் பேசிய விஜய்

இந்த நிலையில்தான் விஜய் தனக்கு நெருக்கமான சிலரிடம் போனில் பேசியதாக கூறப்படுகிறது. இதில் விஜய் தனது வருத்தத்தை பகிர்ந்து கொண்டதாக கூறப்படுகிறது. அதில், நாம் போட்ட வீடியோ நிறைய பேர் பார்த்து உள்ளனர். நன்றாக ரீச் ஆகி உள்ளது . ஆனால் பலர் இதை கடுமையாக விமர்சனம் செய்கிறார்கள். பலர் .. நான் வருத்தம் தெரிவிக்கவில்லை என்று நினைக்கிறார்கள்.

கோர்ட் கேஸ் நடக்கும் போது வருத்தம் தெரிவிக்க கூடாது என்று அறிவுரை எனக்கு வழங்கப்பட்டது. அதன் காரணமாகவே இந்த முடிவு எடுத்தேன். அதன் காரணமாகவே அப்படி பேசினேன். மற்றபடி எனக்கு வருத்தம் இல்லாமல் இல்லை. அந்த நாளில் இருந்து வருத்தமாகவே இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களை சென்று பார்க்க வேண்டும். நிலைமை சரியானது சத்தமின்றி சென்று சந்திக்க வேண்டும்.

விஜயின் திட்டம்

நான் முதல்வரிடம் சவால் விடுத்ததை பலர் விரும்பவில்லை. எனக்கு கொடுக்கப்பட்ட அறிவுரைகள் அடிப்படையிலேயே அப்படி குறிப்பிட்டேன். நான் யோசித்து இருக்க வேண்டும் என்று விஜய் பேசி இருக்கிறாராம். இதையடுத்து விஜயின் லைனுக்கு வந்த முக்கியமான நபர் ஒருவர்.. நீங்கள் பேசியது சரியாக திட்டமிடப்படவில்லை விஜய். நீங்கள் பேசிய விஷயமும், பேசிய விதமும் சரியாக இல்லை. யோசித்து திட்டமிட்டு பேசி இருக்கலாம்.

உங்களுக்கு அறிவுரை வழங்குபவர்கள் சரி இல்லை. அதனால்தான் அப்படி நடந்துவிட்டது. உங்களுக்கு அறிவுரை வழங்குபவர்களை மாற்றுங்கள். இல்லையென்றால் உங்களுக்குத்தான் சிக்கல் என்று அந்த நபர் போனில் அறிவுரை வழங்கி உள்ளாராம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+