முதல்முறையாக இந்த ஒரு வார்த்தையை! தஞ்சாவூர் கூட்டத்தில் பயன்படுத்தாத விஜய்! ஏன் என்னாச்சு?
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய், தஞ்சை செங்கிப்பட்டியில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் முதல்முறையாக ஒரு வார்த்தையை அவர் பயன்படுத்தவே இல்லை என்பதை நீங்கள் பார்த்தீர்களா?
விஜய் கட்சி தொடங்கி விக்கிரவாண்டி மாநாடு முதல் நேற்று தஞ்சையில் நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டம் வரை திமுகவை விமர்சித்து வருகிறார்கள். அவர் ஒவ்வொரு முறையும் விமர்சிப்பது ஊழல், லஞ்சம், சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட விஷயங்களைத்தான்.

அத்துடன் பெண்கள் பாதுகாப்பு என்ற ஒன்றையும் அவர் தொடர்ந்து பேசி வருகிறார்கள். திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதையே பிரதானமாக பேசி வந்தார்.
இந்த நிலையில் தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் விஜய் பேசுகையில், "நான் வேலூர் கூட்டத்தில் பேசும் போது சொல்லியிருந்தேன். தமிழகம்தான் விஜய், விஜய்தான் தமிழகம் என்று! தமிழக மக்களின் ஒரே பிரதிநிதியாக உண்மையான பிரதிநிதியாக நாம் மட்டும்தான் இருக்கிறோம்.
விஜய் வெர்சஸ் ஸ்டாலின்
அதனால்தான் அப்படி சொன்னேன். விஜய் வெர்சஸ் ஸ்டாலின் சார் என்று சொன்னேன். ஏன் டெல்லிக்கும் தமிழகத்திற்குமான தேர்தல் என்று சொல்கிறீர்கள் என கேள்வி கேட்டிருந்தேன். உடனே விஜய், பாஜகவுக்காக பேசுகிறார் என திரித்து பேச ஆரம்பித்துவிட்டார்கள். நமது சிறுபான்மை சகோதரர்களை பயமுறுத்தி ஏமாற்று வேலையை செய்கிறார்கள். இனிமேல் அவர்களால் தொடர்ந்து செய்ய முடியாது.
டெல்லி
சென்னையில் டெல்லி, டெல்லி என கூவுவதும் அடிக்கிற கொள்ளைக்கு ரெய்டு வந்துவிட்டால் டெல்லிக்கு வெள்ளைக் குடை பிடிப்பதும் இது எல்லாம் யார் என்று உங்கள் எல்லோருக்கும் நன்றாக தெரியும். தமிழகத்தை காப்பாற்றுவது திமுகதான், ஸ்டாலின்தான் என சொல்கிறார்கள். இதெல்லாம் ஒர்க் அவுட் ஆகாது பாஸ்!
ஓம் சக்தி, பராசக்தி, திமுக ஒரு தீயசக்தி என சின்னப்பசங்கலாம் சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க! கிரிக்கெட்டில் கூட தமிழக அணியை டெல்லி அணியால் தொட்டு கூட பார்க்க முடியாது. கிரிக்கெட்டிலும் விசில் போடுவது தமிழகம்தான் சிஎஸ்கே, வர போகும் தேர்தலில் விசிலை போட போவது நமது தவெகதான்.
அடுத்த ஜென்மம்...
கடவுளுக்கே படையல் போடுபவர்கள் விவசாயிகள். அடுத்த ஜென்மத்தில் விவசாயி குடும்பத்தில் பிறக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். விவசாயிகளை பற்றி எனக்கு தெரியாது. ஒத்துக் கொள்கிறேன். மற்றவர்கள் மாதிரி நானும் டெல்டாகாரன் என சொல்லி உங்கள் காதில் டால்டா ஊற்ற நான் வரவில்லை. எனக்கு விவசாயம் குறித்து தெரியவில்லை என்றாலும் அவர்கள் படுகிற கஷ்டம் எனக்கு தெரியும். இவ்வாறு அவர் பேசியிருந்தார்.
எல்லா கூட்டங்களிலும் பெண்கள் பாதுகாப்பு குறித்து அவர் பேசுவதை இந்த முறை பேசவில்லை. காரணம் விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
விஜய்யுடன் நடிகைக்கு உறவு
அந்த மனுவில் "விஜய் ஒரு நடிகையுடன் கள்ள உறவில் இருக்கிறார். அது குறித்து கேட்டதால் என்னை தவிர்த்து அந்த நடிகையுடனேயே இருந்து வருகிறார். அவருடனான தொடர்பை இன்றுடன் தொடர்ந்து வருகிறார். எனக்கு பொருளாதார தடைகளை விதித்து வருகிறார்.
நடிகையுடன் தொடர்பு
என் கணவருடன் அந்த நடிகை எடுக்கும் புகைப்படங்களை இன்று வரை சமூகவலைதளங்களில் வெளியிட்டு வருவதால் எனக்கும் எனது குழந்தைகளுக்கும் அவமானமாக இருக்கிறது. இந்த விவாகரத்து வழக்கின் செலவை என் கணவரே செலுத்த வேண்டும். மேலும் எனக்கு நிரந்தர ஜீவானாம்சம் வழங்க வேண்டும் என சங்கீதா கோரிக்கை விடுத்துள்ளார்.
பெண்கள் பாதுகாப்பு
இந்த விவகாரம் வெளியே வந்தது முதல், வீட்டில் உள்ள மனைவிக்கே பாதுகாப்பு கொடுக்காத விஜய், பெண்கள் பாதுகாப்பை பேசி வருகிறார் என விமர்சனம் எழுந்தது. இதனால்தான் இந்த முறை விஜய் , பெண்கள் பாதுகாப்பு குறித்து செங்கிப்பட்டியில் பேசவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ்










Click it and Unblock the Notifications