என்னாச்சு பாஜகவிற்கு? தமிழக அரசியலில் யாருமே எதிர்பார்க்காத திருப்பம்.. திடீர்ன்னு இப்படி ஆகிடுச்சே!
சென்னை: தமிழ்நாடு பாஜகவில் யாருமே எதிர்பார்க்காத சம்பவங்கள் நடந்து வருகின்றன. முக்கியமாக லைம் லைட்டில் தமிழ்நாட்டில் இருந்த பாஜக சட்டென சைலண்ட் ஆன சம்பவம் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளிநாடு செல்ல உள்ளார். லண்டனில் அவர் சில நாட்கள் தங்கி இருக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில் தமிழ்நாடு பாஜகவில் இருந்து நிர்வாகிகள் அடுத்தடுத்து நீக்கப்பட்டு வருகின்றனர். பாஜக தலைவர் அண்ணாமலை அடுத்தடுத்து பல நிர்வாகிகளை நீக்கி வருகிறார். கடந்த வாரம், சிந்தனையாளர் பிரிவின் மாநில பார்வையாளர் கல்யாணராமன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அவர் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு மாநில தலைமையினை பற்றியும், கட்சிக்காக பணியாற்றுபவர்கள் மீதும் தகுந்த ஆதாரங்கள் இன்றி சமூக வலைதளங்களில் அவதூறுகளை பரப்பி வருகிறார் என்று நீக்கப்பட்டார்.

அதன்பின் பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில பொதுச் செயலாளர் திருச்சி S.சூர்யா கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதால் மாநில தலைமையின் அறிவுறுத்தலின் படி கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகிறார், என்று அண்ணாமலை அறிவித்தார்.
உட்கட்சி மோதல்: தமிழ்நாட்டில் அண்ணாமலை - தமிழிசை சௌந்தரராஜன் இடையே மோதல் நிலவி வருகிறது. தமிழ்நாட்டின் பாஜக செயல்பாடு குறித்து மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி அளித்துள்ளார். அதில்., நான் கட்சிக்காக கடுமையாக உழைக்க கூடியவர். நான் உட்கட்சி ஐடி நிர்வாகிகளை எதிர்க்கிறேன். எச்சரிக்கிறேன். தலைவர்கள் யாராவது கருத்து சொன்னால் அவர்களை மோசமாக பேச வேண்டாம். கட்சியின் பிற தலைவர்கள் மீது தவறாக எழுதினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னாள் மாநில தலைவராக எச்சரிக்கிறேன் என்றெல்லாம் விமர்சனம் வைத்தார்.
அண்ணாமலை ஆப்சென்ட்: இதற்கு இடையில் இங்கிலாந்தில் இருக்கும் ஆக்ஸ்போர்டு பல்கலையில் அண்ணாமலை படிக்க உள்ளார். இது தொடர்பாக பிரபல தமிழ் ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் சர்வதேச அரசியல் என்ற படிப்பை படிக்க அண்ணாமலை செல்கிறார். அது சான்றிதழ் படிப்பு. சில மாதங்கள் அங்கு தங்கி படிக்க வேண்டும்.
இந்தியாவில் இருந்து 12 அரசியல் தலைவர்களை ஆக்ஸ்போர்ட் அழைப்பது வழக்கம். அப்படி அண்ணாமலை இந்த முறை தேர்வாகி உள்ளார். இதற்காக அண்ணாமலை 4-5 மாதங்கள் அங்கேயே இருக்க உள்ளார்.
பாஜகவிற்கு என்னாச்சு?: இப்படிப்பட்ட நிலையில் தமிழ்நாடு பாஜகவில் யாருமே எதிர்பார்க்காத சம்பவங்கள் நடந்து வருகின்றன. முக்கியமாக லைம் லைட்டில் தமிழ்நாட்டில் இருந்த பாஜக சட்டென சைலண்ட் ஆன சம்பவம் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
1. கள்ளக்குறிச்சி விவகாரத்தில் பாஜக பெரிதாக போராட்டம் செய்யவில்லை. உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் செய்யவில்லை.
2. ஆளுநரை சந்தித்த பின் இந்த விவகாரத்தில் பாஜக சைலண்ட் ஆகிவிட்டது.
3. அண்ணாமலை எப்போதும் பேட்டிகளை, சர்ச்சைக்குரிய விஷயங்களை பேசுவது என்று லைம்லைட்டிலேயே இருப்பார், ஆனால் அவரும் அமைதி ஆகிவிட்டார்.
4. பகுஜன் சமாஜ் ஆம்ஸ்ட்ராங் மரணத்திலும் பாஜக பெரிய அளவில் போராட்டங்களை செய்யவில்லை. களத்திற்கு செல்லவில்லை.
5. அதெல்லாம் விட விக்கிரவாண்டியில் பாஜக கூட்டணி கட்சிதான் போட்டியிடுகிறது.; ஆனால் அங்கும் பெரிதாக பாஜக பிரச்சாரங்களை செய்யவில்லை.
தன்னை தமிழ்நாட்டின் எதிர்க்கட்சி என்று கூறி வந்த பாஜக சட்டென அமைதியான அரசியலை முன்னெடுப்பது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
-
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
“அண்ணாமலைக்கும், அவர் பின்னால் போன ஆட்டு மந்தைக்கும் பாஜகவின் கொள்கை புரியவில்லை” - வேலூர் இப்ராஹிம் -
பிரபலங்களால் பாஜகவுக்கு ப்ராப்ளம்.. தவெகவுக்கு தாவும் 2 நடிகைகள்! பக்கா பிளான் போட்ட செங்கோட்டையன்! -
Waiting Is Over.. பாஜகவுக்கு டாடா சொன்ன அண்ணாமலை! புதிய கட்சி எப்போது உதயம்? லீக்கான தகவல்! -
பெரிய புள்ளியாச்சே அவரு! துரோகி பட்டம்.. எடப்பாடியால் வேதனையில் வேலுமணி! அண்ணாமலையுடன் ஐக்கியம்? -
அண்ணாமலை+ராகவா லாரன்ஸ்+விசாகன்! இது புது காம்பினேஷனா இருக்கே! ரெடியாகும் மாஜி ஐபிஎஸ், ஐஏஎஸ் ஆபீசர்ஸ் -
குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க என்ன நடவடிக்கை?.. தமிழக அரசுக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி -
காங்கிரசுக்கு நீங்க ஏன் உயிர் கொடுக்குறீங்க விஜய்? கடுப்பான பாஜக.. கோபத்தின் உச்சிக்கே போன அமித் ஷா -
இனிமே நம்மதான்..பக்காவாய் காய் நகர்த்தும் பாஜக! டெல்லியில் எகிறும் செல்வாக்கு! மோடி போட்ட பலே ப்ளான் -
கைவிட்ட பாஜக.. மம்தாவையும் பகைத்து கொண்ட திரிணாமுல் தலைவர்கள்.. இடியாப்ப சிக்கல்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications