பணமழை கொட்டும் செல்வ மகள் vs பொன்மகன் திட்டங்கள்.. சொன்னா நம்ப மாட்டீங்க.. நீங்களே பாருங்க
சென்னை: செல்வ மகள் சேமிப்பு திட்டத்திற்கும், பொன்மகன் சேமிப்பு திட்டத்திற்கும் உள்ள வேறுபாடுகள் என்ன, என்னென்ன நன்மைகள் என்பதை பார்ப்போம்.
பெண் குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டும் என்ற முனைப்பில் பிரதமர் நரேந்திர மோடியால் கடந்த 2015ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட திட்டம் தான் செல்வ மகள் சேமிப்பு திட்டம். "சுகன்யா சம்ரிதி யோஜனா" என்று இந்தியில் அழைக்கப்படும் இந்த திட்டத்திற்கு தான், மற்ற எல்லா சேமிப்பையும் விட அதிக வட்டி வழங்கப்படுகிறது.

அதேநேரம் பொன்மகன் சேமிப்பு திட்டம் என்பது தமிழ்நாட்டில் மட்டுமே உள்ள திட்டம் ஆகும். இந்த திட்டத்தை தமிழ்நாடு அரசு தொடங்கியது. இதில் ஆண் குழந்தைகளுக்கு மாதம் மாதம் முடிந்த அளவு சேமித்துவந்தால் நிறைய பலன் உள்ளது.
முதலில் பெண் குழந்தைகளுக்கான செல்வ மகள் சேமிப்பு திட்டம் (Sukanya Samriddhi Yojana Scheme In Tamil) பற்றி பார்ப்போம் . இந்த சேமிப்பு திட்டத்தை பொறுத்தவரை மாதம் மாதம் இவ்வளவு கண்டிப்பாக போட வேண்டும் என்று அவசியமே இல்லை. இந்த திட்டத்தின்படி 10 வயதுக்குட்பட்ட பெண்குழந்தைகள் பெயரில் அவர்களது பெற்றோரோ அல்லது பாதுகாப்பாளரோ குறைந்தபட்சமான தொகையாக ரூபாய் 1000 செலுத்தி கணக்கை தொடங்கலாம்.
அதன் பிறகு 100 ரூபாயில் இருந்து 1000 அல்லது 2000 அல்லது 5000, அல்லது 1000 என ஒருவருடத்தில் ரூ. 1.5 லட்சம் வரை செலுத்தலாம். ஒரு வருடத்துக்கு மொத்தமாகவும் செலுத்தலாம். நீங்கள் விரும்பினால் மாதம் மாதமும் செலுத்தலாம்.
நீங்கள் பணத்தை ரொக்கமாகவும், செக் வாயிலாகவும் செலுத்த முடியும். அதேநேரம் நீங்கள் கணக்கு துவங்கிய வங்கி அல்லது அஞ்சல் அலுவலகத்தில் மைய வங்கித் தீர்வு இருந்தால் மின்னணு அல்லது இணையம் வாயிலாகவும் சந்தாவை செலுத்த முடியும்.
செல்வ மகள் சேமிப்பு கணக்கை பொறுத்தவரை 21 ஆண்டுகள் வரை இருக்கும். ஆனால் நீங்கள் கணக்குத் தொடங்கியதிலிருந்து 15 வருடங்கள் வரை மட்டும்தான் சேமிப்பு தொகையை செலுத்த முடியும்... நீங்கள் செலுத்தும் பணத்திற்கு 8 சதவீதம் வட்டியும் வழங்கப்படுகிறது.
நீங்கள் மாதம் 2000 ரூபாய் முதலீடு செய்தால் வருடத்துக்கு 24,000 ரூபாய் போடுவீர்கள் . அப்படியானால், 15 வருடங்களில் நீங்கள் முதலீடு செய்யும் மொத்த தொகை 3.60 லட்சம் ரூபாயாகும்.. இதில், 8 சதவீதம் வட்டியும் வழங்கப்படுவதால், வட்டி விகிதத்தில் 21 வருடங்கள் கழித்து மெச்சூரிட்டியின்போது மொத்த ரூபாய் 11,16,815 கிடைக்கும். அதாவது, வட்டி மட்டுமே உங்களுக்கு 7.56 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கும்.
பொன் மகன் சேமிப்பு திட்டம் 2023: பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு திட்டம் இருப்பது போல் ஆண் குழந்தைகளுக்கு பொன்மகன் பொதுவைப்பு நிதி திட்டம் 2015 இல் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் அஞ்சல் அலுவலக சேமிப்பு திட்டமாகும் தமிழ்நாட்டில் மட்டுமே உள்ள திட்டம் ஆகும்.
பொன்மகன் பொதுவைப்பு நிதி திட்டத்தின் கீழ்க் கணக்கு தொடங்க வயது வரம்பு இல்லை. 10 வயதுக்குட்பட்ட மைனர் சிறுவனின் சார்பாக பெற்றோர் அல்லது guardian கணக்கைத் திறக்க முடியும். குறைந்தபட்சம் ரூ.100 பணம் செலுத்தி கணக்கைத் துவங்கலாம். கணக்கு துவங்கியதில் இருந்து 15 வருடங்கள் கண்டிப்பாக பணம் செலுத்த வேண்டும். குறைந்தபட்ச முதலீடாக ரூ.500 மற்றும் அதிகபட்ச முதலீடாக ரூ.1.5 லட்சம் வரை ஒரு நிதியாண்டில் சேமிக்க முடியும். பொன்மகன் சேமிப்பு திட்டத்தின் தற்போதைய வட்டி விகிதம் 7.6% ஆக உள்ளது.
இந்தத் திட்டத்தின் படி முதிர்வு காலம் 15 ஆண்டுகள் என்றாலும், அடுத்த 5 ஆண்டுகளை தொகுப்புகளாக நீங்கள் அதிகரித்துக் கொள்ள முடியும். நீங்கள் சேமிக்கும் பணம் மேஜர் ஆனவுடன் உங்கள் ஆண் குழந்தைக்கு வழங்கப்படும்.

பொன்மகன் பொதுவாய்ப்பு நிதி திட்ட கணக்கை எவ்வாறு திறப்பது என்பதற்கான படிகள் என்னென்ன: 1. தமிழ்நாட்டில் உள்ள ஒரு தபால் நிலையத்தை அணுகவும்.
2. திட்டத்திற்கான விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்.
3. குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் மற்றும் பெற்றோர்/பாதுகாவலரின் அடையாளச் சான்று போன்ற தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிக்கவும்.
4. ஆரம்ப வைப்புத்தொகை ரூ. 500
5. கணக்கு திறக்கப்பட்டு குழந்தைக்கு பாஸ்புக் வழங்கப்படும்.
என்ன வருமானம் கிடைக்கும்: இத்திட்டத்தில் மாதம் 1,000 ரூபாய் வீதம்,வருடத்திற்கு 12,000 ரூபாய் முதலீடு செய்தால், வட்டி விகிதம் 7.6%.
அதனடிப்படையில் 15 ஆண்டுகள் இத்திட்டத்தில் 1,80,000 ரூபாய் முதலீடு செய்தால் 3,47,441 ரூபாய் முதலீடு வட்டியாக கிடைக்கும். மொத்தத்தில் முதிர்வு தொகை 5,27,446 ரூபாய் கிடைக்கும். மாதம் 5 ஆயிரம் முதலீடு செய்தால், ஆண்டுக்கு முதலீடு 60000 ஆக இருக்கும். ஒட்டுமொத்தமாக நீங்கள் 9 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருப்பீர்கள். முதிர்வு தொகையாக 27 லட்சத்து 34 ஆயிரத்து 888 ரூபாய் கிடைக்கும். 10 ஆயிரம் ரூபாய் மாதம் முதலீடு செய்தால் 15 வருடங்களில் 18 லட்சம் முதலீடு செய்திருப்பீர்கள், உங்களுக்கு முதிர்வு தொகையாக 54 லட்சத்து 69 ஆயிரத்து 773 ரூபாய் வரை கிடைக்கும். வட்டி விகிதம் உயர்ந்தால் இதை விட அதிகமாகவே பணம் கிடைக்கும்.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications