தீயா வேலை செய்யும் குமார்கள்.. முதல் நாளே வைரல்.. தேசிய அளவில் டிரெண்டான பரிசுப் பெட்டி சின்னம்!
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பரிசுப் பெட்டி சின்னம் இன்று தேசிய அளவில் டிவிட்டரில் வைரல் ஆனது.
Recommended Video

சென்னை: அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பரிசுப் பெட்டி சின்னம் இன்று தேசிய அளவில் டிவிட்டரில் வைரல் ஆனது.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு குக்கர் சின்னம் கொடுக்க முடியாது என்று உச்ச நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் தெரிவித்தது. ஆனால் அமமுகவிற்கு பொதுசின்னம் ஒன்றை கொடுக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
தற்போது தேர்தல் ஆணையம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு பரிசுப் பெட்டி சின்னத்தை ஒதுக்கி இருக்கிறது. இந்த சின்னம் கிடைத்தது டிடிவி தினகரன் தரப்பிற்கு பெரிய மகிழ்ச்சியை அளித்து இருக்கிறது.

என்ன மகிழ்ச்சி
அதன்படி அம்மா மக்கள் முன்னேற்ற கழக தொண்டர்கள் பலர் இந்த சின்னம் கிடைத்ததை கொண்டாடினார்கள். தங்களுக்கு மிக சரியான சின்னம் கிடைத்து இருக்கிறது என்று கூறினார்கள். டிடிவி தினகரனும், இதை மக்களிடம் எளிதாக கொண்டு சேர்க்க முடியும் என்று மகிழ்ச்சியாக குறிப்பிட்டுள்ளார்.

பரிசுப் பெட்டி வைரல்
இந்த நிலையில் சின்னம் கிடைத்த சில நிமிடத்தில் பலர் இதுகுறித்து டிவிட் செய்ய தொடங்கினார்கள். முக்கியமாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் இணைய பிரிவினர் தொடர்ந்து பரிசுப் பெட்டி சின்னம் குறித்து டிவிட் செய்தனர். தங்களுக்கு இது மிகப்பெரிய முதல் வெற்றி என்று பரிசுப் பெட்டி டேக்கில் டிவிட் செய்து வந்தனர்.

தேசிய அளவில் வைரல்
மொத்தம் இரண்டு டேக்குகள் இதில் வைரல் ஆனது. #giftbox என்ற டேக் தேசிய அளவில் நீண்ட நேரம் டிரெண்டில் இருந்தது. அதேபோல் #பரிசுப்பெட்டி என்ற டேக்கும் தேசிய அளவில் டிரெண்டில் இடம் பிடித்து சாதனை படைத்தது. இதில் பல்லாயிரம் டிவிட்டுகள் பகிரப்பட்டது.

என்ன செய்தனர்
இதேபோல் இணையத்தில் மட்டுமில்லாமல், களத்திலும் அமமுகவினர் இந்த சின்னத்தை தீவிரமாக டிரெண்ட் செய்து வருகிறார்கள். இப்போதே பல இடங்களில் இதற்காக சுவரொட்டிகள், போஸ்டர்கள் ஒட்டிவிட்டனர். பல இடங்களை இப்போதே அமமுகவினர் பரிசுப் பெட்டி மயமாக்கிவிட்டனர்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications