பொதுச் சொத்துக்களை விற்பது தேச நலனுக்கு எதிரானது : முதல்வர் மு.க.ஸ்டாலின்

பொதுச்சொத்துக்களை தனியார்மயமாக்குவது தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொதுச் சொத்துக்களை விற்பது தேச நலனுக்கு எதிரானது என்று தமிழக சட்டசபையில் பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார். பொதுத்துறை நிறுவனச் சொத்துக்களை மத்திய அரசு விற்கக் கூடாது என்றும் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பொதுச்சொத்துக்களை விற்கக்கூடாது என வலியுறுத்தி பிரதமருக்கு கடிதம் எழுத உள்ளதாகவும் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மத்திய நிதியமைச்சகமும், நிதி அயோக் அமைப்பும் இணைந்து நாட்டின் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கான நிதியைத் திரட்ட அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் பல்வேறு சொத்துக்களை விற்பனை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

தேசிய பணமாக்கல் திட்டம் மூலம் மத்திய அரசு அடுத்த 4 வருடத்தில் 2025ஆம் நிதியாண்டுக்குள் சுமார் 6 லட்சம் கோடி ரூபாய் அளவிலான திட்டத்தைக் கையில் எடுக்க உள்ளது. இதில் தமிழ்நாட்டில் எந்தெந்த சொத்துக்களை மத்திய அரசு விற்பனை செய்யப்போகிறது என்பதைப் பட்டியலிட்டுள்ளது.

Disinvestment is against the national interest: Chief Minister MK Stalin

தேசிய பணமாக்கல் திட்டம் மூலம் சுமார் 25 விமான நிலையங்கள் நீண்ட கால அடிப்படையில் குத்தகைக்கு விடப்பட்டுச் சுமார் 20,782 கோடி ரூபாய் அளவிலான நிதியை திரட்ட உள்ளது.

இந்தத் திட்டத்தில் திருச்சி, கோயம்புத்தூர், மதுரை, சென்னை ஆகிய 4 விமான நிலையங்கள் குத்தகைக்கு விடப்பட்டுச் சுமார் 4,694 கோடி ரூபாய் அளவிலான நிதி திரட்டப்பட உள்ளது. இதில் நடப்பு நிதியாண்டில் திருச்சி விமான நிலையம் தனியாருக்குக் கைமாற்றப்பட உள்ளது.

9 முக்கியமான துறைமுகத்தில் சுமார் 31 திட்டங்களைத் தனியாருக்குக் குத்தகைக்கு விடுவதன் மூலம் சுமார் 12,828 கோடி ரூபாய் நிதி திரட்ட உள்ளது. இதில் தூத்துக்குடி துறைமுகமும் உள்ளது. V. O. சிதம்பரனார் துறைமுகம் என அழைக்கப்படும் தூத்துக்குடி துறைமுகத்தின் 3 திட்டங்களை விற்பனை செய்வதன் மூலம் மத்திய அரசு சாகர் மாலா திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளது.

இந்தத் தேசிய பணமாக்கல் திட்டத்தின் மூலம் பணமாக்கும் அனைத்து அரசு சொத்துக்களின் உரிமையும் நிரந்தரமாக அரசின் கையில் தான் இருக்கும், குறிப்பிட்ட காலத்திற்குப் பின்பு அதாவது குத்தகை காலம் முடிந்த பின்பு இந்தச் சொத்துகள் திரும்பவும் அரசு கட்டுப்பாட்டிற்குக் கீழ் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய பணமாக்கல் திட்டத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல எதிர்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Disinvestment is against the national interest: Chief Minister MK Stalin

சட்டசபையில் கவன ஈர்ப்புத் தீர்மானம்

இன்றைய தினம் தமிழக சட்டசபையில் பொதுச்சொத்துக்களை தனியார்மயமாக்குவது தொடர்பாக தமிழ்நாடு சட்டசபையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், பொதுத்துறை நிறுவன சொத்துக்களை ஒன்றிய அரசு விற்கக்கூடாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். பொதுத்துறை நிறுவனங்கள் அனைவருடைய சொத்தாகும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

பொதுச்சொத்துக்களை விற்பதோ, குத்தகைக்கு விடுவதோ தேச நலனுக்கு உகந்தது அல்ல. பொதுச்சொத்துக்களை விற்கக்கூடாது என வலியுறுத்தி பிரதமருக்கு கடிதம் எழுத உள்ளேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+