அமைச்சர்கள் மீதான சொத்து குவிப்பு வழக்கு: தங்கம் தென்னரசு,கேகேஎஸ்எஸ்ஆர் விடுதலை உத்தரவு ரத்து-ஹைகோர்ட் அதிரடி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் ஆகியோர் மீதான வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் விடுதலை செய்யப்பட்ட உத்தரவை ரத்து செய்வதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இன்று அதிரடி தீர்ப்பளித்தார். தமிழ்நாடு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் ஆகியோர் மீதான வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்குகளில் குற்றச்சாட்டை பதிவு செய்து சாட்சி விசாரணையை துவங்க ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பளித்தார்.

2006-2011-ல் திமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சராக பதவி வகித்தார் தங்கம் தென்னரசு. அப்போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக தங்கம் தென்னரசு மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகளில் இருந்து கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் 13-ந் தேதி அனைவரையும் விருதுநகர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் விடுதலை செய்தது.

disproportionate case thangam thennarasu kkssr ramachandran anand venkatesh

இதேபோல 2006-2011 ஆண்டுகளில் அமைச்சராக இருந்த கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் அவரது மனைவி ஆதிலட்சுமி உள்ளிட்டோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை 2012-ல் சொத்துக்குவிப்பு வழக்கு பதிவு செய்தது.

இந்த வழக்குகளில் இருந்து கடந்த 2022-ம் ஆண்டு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் விசாரணை நீதிமன்றங்களின் இந்த விடுதலைத் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய தாமாக முன்வந்து (சூமோட்டா) விசாரணை நடத்தினார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரணைக்கு தடை கோரி உச்சநீதிமன்றம் வரை இருவரும் சென்றனர். ஆனால் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரணைக்கு தடை கிடைக்கவில்லை.

இந்த வழக்குகளில் விசாரணை முடிவடைந்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ஒத்திவைத்திருந்தார். இந்த வழக்குகளில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் ஆகியோரை சொத்து குவிப்பு வழக்குகளில் இருந்து விசாரணை நீதிமன்றங்கள் விடுதலை செய்த உத்தரவை ரத்து செய்து அதிரடித் தீர்ப்பு அளித்தார். இதனால் இருவர் மீதான வழக்குகளில் குற்றச்சாட்டை பதிவு செய்து சாட்சி விசாரணையை தொடங்க ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றத்திற்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு பிறப்பித்தார். அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் இருவரும் செப்டம்பர் 9-ந் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் இந்த வழக்கில் நாள்தோறும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டு அதிரடித் தீர்ப்பு வழங்கினார்.

முன்னதாக மூத்த அமைச்சர் ஐ.பெரியசாமி, வீட்டு வசதி வாரிய முறைகேடு வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட தீர்ப்பையும் மறு ஆய்வு செய்து தாமாக முன்வந்து விசாரித்தார். அப்போது, அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுதலை செய்தது சட்டவிரோதம் என அதிரடித் தீர்ப்பளித்தார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ். பின்னர் உச்சநீதிமன்றத்தின் தடை உத்தரவால் அமைச்சர் ஐ.பெரியசாமியின் பதவி தப்பியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+