மீண்டும் வெடித்த வடகலை - தென்கலை மோதல்.. காஞ்சிபுரம் கோவிலில் பரபரப்பு!
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரமோற்சவத்தில் மீண்டும் வடகலை, தென்கலை பிரச்சனை ஏற்பட்டுள்ளது. பிரபந்தம் பாடுவதில் இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் கங்கை கொண்டான் மண்டபத்தில் கண்டருளியபோது பிரபந்தம் பாடுவதில் இருபிரிவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பிரமோற்சவத்தின் 2 ஆம் நாளான இன்று அம்ச வாகனத்தில் வரதராஜ பெருமாள் எழுந்தருளி வீதி உலா வந்தார்.

அப்போது திவ்ய பிரபந்தம் பாடுவது தொடர்பாக வடகலை - தென்கலை பிரிவினர் இடையே பிரச்சனை ஏற்பட்டது. பிரபந்தம் பாடிக் கொண்டிருந்த எதிர் தரப்பினர் கூச்சல் எழுப்பியதால் அங்கு சிறிது நேரம் சற்று பரபரப்பான சூழல் ஏற்பட்டது. வடகலை பிரிவினர் பெருமாள் முன்பு தாத்தாச்சாரியார்கள் மந்திர புஷ்பம் பாடுவதில் இடையூறு ஏற்படுத்துவதாக குற்றம்சாட்டினர்.
வடகலை - தென்கலை பிரிவினர் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக கோவில் நிர்வாகத்தினர் தலையிட்டு சமாதானம் செய்து வைத்துள்ளனர். இந்தச் சம்பவம் கோயிலுக்கு வந்திருந்த பக்தர்களிடையே முகச்சுளிப்பை ஏற்படுத்தியது.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக












Click it and Unblock the Notifications