தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களுக்கு பரவியது கொரோனா... சென்னையில்தான் வரலாறு காணாத பாதிப்பு
சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 669 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் கொரோனா தொற்று புதிதாக ஏற்பட்டுள்ளது. 19 மாவட்டங்களில் சென்னையில் தான் மிகமிக அதிகமான பாதிப்பு ஆகும். மாவட்ட வாரியான நிலவரத்தை இப்போது பார்ப்போம்.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவும் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு சென்னையில் புதிய உச்சத்தை கொரோனா தொற்று சந்தித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 509 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3330ல் இருந்து 3839 ஆக உயர்ந்துள்ளது.

இன்று 19 மாவட்டங்களில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அரியலூரில் 4 பேர், சென்னையில் 509 பேர்,செங்கல்பட்டில் 43 பேர், கடலூரில் ஒருவர், காஞ்சிபுரத்தில் 8 பேர், கரூரில் 1, கிருஷ்ணகிரியில் 10 பேர், மதுரையில் 4 பேர், பெரம்பலூரில் 9 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரத்தில் தலா ஒருவருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. ராணிப்பேட்டையில் 6 பேருக்கும், தேனியில் 3 பேருக்கும், திருப்பத்தூரில் ஒருவருக்கும், திருவள்ளூரில் 47 பேருக்கும், திருநெல்வேலியில் 10 பேருக்கும், வேலூரில் 3 பேருக்கும், விழுப்புரத்தில் 6 பேருக்கும், விருதுநகரில் 2 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரானா தொற்று என்பதை இப்போது பார்ப்போம்.
- அரியலூர் 275
- செங்கல்பட்டு 267
- சென்னை 3839
- கோவை 146
- கடலூர் 395
- தர்மபுரி 4
- திண்டுக்கல் 108
- ஈரோடு 70
- கள்ளக்குறிச்சி 59
- காஞ்சிபுரம் 122
- கன்னியாகுமரி 24
- கரூர் 48
- கிருஷ்ணகிரி 20
- மதுரை 117
- நாகப்பட்டினம் 45
- நாமக்கல் 77
- நீலகிரி 14
- பெரம்பலூர் 104
- புதுக்கோட்டை 6
- ராமநாதபுரம் 26
- ராணிப்பேட்டை 66
- சேலம் 35
- சிவகங்கை 12
- தென்காசி 52
- தஞ்சாவூர் 66
- தேனி 59
- திருப்பத்தூர் 28
- திருவள்ளூர் 337
- திருவண்ணாமலை 82
- திருவாரூர் 32
- தூத்துக்குடி 30
- திருநெல்வேலி 90
- திருப்பூர் 114
- திருச்சி 65
- வேலூர் 32
- விழுப்புரம் 299
- விருதுநகர் 39
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா












Click it and Unblock the Notifications