மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பதவி! அப்ளிகேஷன் போட்டுவிட்டு அலைமோதும் திமுக பிரமுகர்களின் வாரிசுகள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுகவில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர், மாநகர இளைஞரணி அமைப்பாளர், உள்ளிட்ட பதவியிடங்களை கைப்பற்ற அக்கட்சியின் முக்கியப் பிரமுகர்களின் வாரிசுகள் முட்டி மோதி வருகின்றனர்.

மாவட்ட, நகர, ஒன்றிய அளவிலான இளைஞரணி பதவியிடங்களுக்கு முழுக்க முழுக்க நேர்காணல் மூலம் மட்டுமே நிர்வாகிகளை நியமனம் செய்யவுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

எந்தவொரு சிபாரிசுகளையும் உதயநிதி ஸ்டாலின் ஏற்கமாட்டார் என்ற சூழலிலும் பல்வேறு சேனல்களை பிடித்து தங்கள் வாரிசுகளை இளைஞரணியில் புகுத்த பல முக்கியப் பிரமுகர்கள் காய் நகர்த்தி வருகின்றனர்.

திமுக இளைஞரணி

திமுக இளைஞரணி

திமுகவில் உள்ள மற்ற அணிகளை காட்டிலும் இளைஞரணியில் பதவிகளை வாங்குவதற்கு கடும் போட்டி நிலவி வருகிறது. இதற்கு காரணம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் நேரடி நிர்வாகத்தின் கீழ் இயங்குவதே ஆகும். இதனால் தான் திமுகவில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட முக்கியப் பிரமுகர்கள் பலரும் எப்பாடு பட்டாவது தங்கள் வாரிசுகளை இளைஞரணியில் புகுத்தி விட வேண்டும் என மெனக்கெட்டு வருகிறார்கள்.

உதயநிதி கறார்

உதயநிதி கறார்

திமுக பிரமுகர்கள் என்னதான் பல்டி அடித்தாலும் அது உதயநிதி ஸ்டாலினிடம் எடுபடுமா என்பது கேள்விக்குறி தான். காரணம் இவரது நிர்வாகிகள் தேர்வு முறையே வித்தியாசமானது. கட்சிப் பணிகளில் ஆர்வம், ஓயாமல் ஓடக்கூடிய சுறுசுறுப்பு, ஓரளவு பொது அறிவு, என பல்வேறு படிநிலைகளின் அடிப்படையில் இளைஞரணிக்கு மாவட்ட, மாநகர, நகர, அளவில் நிர்வாகிகளை தேர்வு செய்யவுள்ளார். எக்காரணம் கொண்டும் பரிந்துரைகளை ஏற்பதில்லை என்ற முடிவில் இருக்கிறார்.

வாரிசுகளுக்கு பதவி

வாரிசுகளுக்கு பதவி

ஆனாலும், உதயநிதி ஸ்டாலினை பிடித்து எப்படியாவது தங்கள் மகன்களுக்கு பொறுப்பு பெற்றுவிட வேண்டும் என மாவட்டச் செயலாளர்கள் சிலரும், சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும் தவித்து வருகின்றனர். அண்மையில் திமுக இளைஞரணிக்கு மாநில அளவில் நியமிக்கப்பட்ட 9 துணை செயலாளர்களும் புது முகங்கள் என்பது இங்கு கவனிக்கத்தக்கது. இதே பாணியை தான் மாவட்ட அளவிலும் உதயநிதி பின்பற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐடி விங்

ஐடி விங்

இளைஞரணியில் பொறுப்பு கிடைக்காத பட்சத்தில் திமுக பிரமுகர்களின் அடுத்த சாய்ஸ் அக்கட்சியின் தகவல் தொழில் நுட்ப அணியாக உள்ளது. ஆனால் இந்த அணியிலும் நேர்காணல் மூலம் மட்டுமே தொகுதி வாரியாக நிர்வாகிகள் நியமனம் நடைபெறும் எனத் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+