தம்பி வந்தாச்சு.. சசிகலாவின் பயணத்தை ‘இயக்கும்’ திவாகரன்! டிடிவி தினகரன் ப்ளானே வேற.. பரபர அதிமுக..!
சென்னை: அதிமுகவில் மீண்டும் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு அதிமுக அழிவதை பொறுத்துக் கொள்ள முடியாது என சசிகலா மீண்டும் தொண்டர்களை சந்திக்கிறேன் என சுற்றுப்பயணத்தை 17ஆம் தேதி தொடங்க இருக்கிறார். இந்த நிலையில் சுற்றுப்பயணத்தை வகுத்துக் கொடுத்தது அவரது சகோதரரான திவாகரன் என்பதும், இதற்கான ஏற்பாடுகளையும் அதிமுக நிர்வாகிகளுடன் டிடிவி தினகரன் பேச்சுவார்த்தையை தொடங்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருப்பது எடப்பாடி பழனிச்சாமி தரப்பை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அதிமுகவைப் பொறுத்தவரை ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரச்சனை வந்து கொண்டே தான் இருக்கிறது. அதனால் நிர்வாகிகள் தொடங்கி, தொண்டர்கள் வரை எப்போதும் பரபரப்பாகவே இயங்குகின்றனர்.

சசிகலா முதல்வராக பதவி ஏற்க திட்டமிட்டது, அவர் சிறை சென்றது, எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் ஆனது, நம்பிக்கை இல்லா தீர்மானம், ஓபிஎஸ் உடன் சமாதானம், 18 எம்எல்ஏக்கள் நீக்கம், இடைத்தேர்தல், இபிஎஸ்-ஓபிஎஸ் பிரிவு, எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக பதவி ஏற்றது என திரைப்படத்தில் வருவது போல ட்விஸ்ட்டுகள் வந்து கொண்டே இருக்கிறது.
ஒரு வழியாக எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக பதவியேற்றதைத் தொடர்ந்து பல தேர்தல்களில் அதிமுக படுதோல்வியை சந்தித்தது அந்த கட்சி மூத்த நிர்வாகிகளை சங்கடத்தில் ஆழ்த்தி இருக்கிறது. ஓ.பன்னீர்செல்வம் பிரிந்து சென்றபோதிலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்த முடியவில்லை. அதே நேரத்தில் அவர் அதிமுகவில் இருந்தால் சில சதவீத வாக்குகள் கூடுதலாக கிடைக்கும். இதேபோல டிடிவி தினகரனும் கட்சியில் சேரும்போது பழைய நிலைக்கு அதிமுக வரும் என கூறி வருகின்றனர்.
ஆனால் எடப்பாடி பழனிச்சாமியோ, சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் இவர்களை தவிர யாரை வேண்டுமானாலும் அதிமுகவில் சேர்த்துக் கொள்ளலாம் என பிடிவாதமாக இருக்கிறார். இந்த நிலையில் மக்களவை தேர்தல் தோல்வி குறித்து எடப்பாடி பழனிச்சாமி நிர்வாகிகளுடன் தொகுதி வாரியாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். அந்த கூட்டத்தில் பங்கேற்ற சில மாவட்ட நிர்வாகிகள் சசிகலா, ஓபிஎஸ்ஐ மீண்டும் கட்சிக்குள் சேர்க்க வேண்டும் எனக் கூறி வருகின்றனர்.
இவ்வளவு நாள் அமைதியாக இருந்துவிட்டு தற்போது மீண்டும் சசிகலாவை கட்சிக்குள் கொண்டு வர வேண்டும் என நிர்வாகிகள் பேசியதை எடப்பாடி பழனிச்சாமி எதிர்பார்க்கவில்லை. அதனால் தான் அவர்கள் மூவரைத் தவிர யாரை வேண்டுமானாலும் கட்சிக்குள் அழைத்து வாருங்கள் என சற்று கடுமையாகவே பேசி இருக்கிறார். இந்த நிலையில் 17ஆம் தேதி நடைபெறவிருந்த திண்டுக்கல், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களின் நிர்வாகிகள் உடனான ஆலோசனை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இதற்குப் பின்னணி குறித்து விசாரித்த போது அதே நாளில் தென்காசியில் இருந்து தொண்டர்களை சந்திக்க அம்மாவின் வழியில் மக்கள் பயணத்தை சசிகலா தொடங்கி இருப்பதாக அறிவித்திருக்கிறார்.
சசிகலாவின் பயணம் காரணமாகவே தென்காசி மாவட்ட நிர்வாகிகள் உடனான ஆலோசனை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் நிர்வாகிகள் அனைவரும் சென்னைக்கு வரவேண்டும் என உத்தரவிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக பிரிந்து இருந்த சசிகலாவின் உறவினர்கள் மீண்டும் அரசியல் பாதையில் பயணிக்க திட்டமிட்டு இருப்பது தான் தற்போதைய செய்தியாக இருக்கிறது.
சசிகலாவின் அண்ணன் மகனான டிடிவி தினகரன், சகோதரர் திவாகரன் ஆகியோர் ஜெயலலிதா இருந்தபோது பின்னணியில் அவர்களுக்கு பக்கபலமாக இருந்தனர். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு பல ஆண்டுகளாக கட்சியில் இருந்து ஓரம் கட்டப்பட்டிருந்த டிடிவி தினகரன் மீண்டும் பவர் சென்டராக உருவெடுக்க ஆரம்பித்தார். தொடர்ந்து ஆர்கே நகர் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெறும் அளவுக்கு அவரது செல்வாக்கு இருந்தது.
அதன் பிறகு எடப்பாடி பழனிச்சாமியின் சாதுரியமான யூகங்களால் டிடிவி ஓரங்கட்டப்பட்டார். அதற்கு பிரகான தேர்தல்களில் அவரால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. திவாகரனும் சசிகலாவின் உடன் ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாக தனிக் கட்சி ஆரம்பித்து மீண்டும் அதனை சசிகலா அமைப்புடன் சேர்த்து விட்டார். இந்த நிலையில் சசிகலா 'அம்மாவின் வழியில் மக்கள் பயணம்' என தற்போது புதிய அவதாரம் எடுத்திருக்கும் நிலையில் பின்னணியில் இவர்கள் இருவரும் இருந்து செயல்படுவதாக கூறப்படுகிறது.
குறிப்பாக சசிகலாவின் சகோதரரான திவாகரன் தான் அம்மாவின் வழி மக்கள் பயண திட்டத்தை வகுத்துக் கொடுத்ததாக கூறப்படுகிறது. தேர்தல் பிரச்சாரத்தை போல ஒவ்வொரு பகுதிகளிலும் பந்தல் அமைத்து அதிக அளவில் நிர்வாகிகளை அழைத்து வர உத்தரவிடப்பட்டு இருக்கிறது. இது மட்டுமல்லாமல் சசிகலா டிடிவி தினகரன் திவாகரனின் ஆதரவாளர்களை ஒன்றிணைத்து கூட்டத்தை பிரம்மாண்டமாக நடத்த வேண்டும் என திட்டமிட்டு இருக்கின்றனர்.
இதற்காக அந்தந்த மாவட்டங்களில் இருக்கும் முன்னாள் அதிமுக நிர்வாகிகள், டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் உள்ளிட்டருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இவ்வாறாக சசிகலா-டிடிவி-திவாகரன் மீண்டும் அரசியலுக்குள் காலடி எடுத்து வைத்திருப்பது பெரிய மாற்றத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இது மட்டுமல்லாமல் எடப்பாடி பழனிச்சாமி முன்பே சசிகலாவையும் டிடிவி தினகரனையும் மீண்டும் கட்சிக்குள் கொண்டுவர வேண்டும் என நிர்வாகிகள் பேசி இருக்கின்றனர். இதன் பின்னணியில் சசிகலாவும் டிடிவி தினகரன் இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் கடந்த காலங்களில் தங்கள் ஆதரவாளர்களாக இருந்து தற்போது எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் இருக்கும் நிர்வாகிகளை தொடர்பு கொண்டு டிடிவி தினகரன் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் அடுத்தடுத்து நடைபெற உள்ள அதிமுக ஆலோசனை கூட்டங்களில் புயல் கிளம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவல் எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு சென்றிருக்கும் நிலையில் அவர் இது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. மேலும் டிடிவி தினகரன் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிர்வாகிகளை சமாதானம் செய்யும் முயற்சிகளும் நடந்து வருவதாக தெரிவிக்கின்றனர்.
-
சசிகலா - ராமதாஸ் கூட்டணி வைத்தது எப்படி? இதற்கு இப்படி ஒரு பேர் வைக்க திட்டமா? அட போங்க! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி












Click it and Unblock the Notifications