சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"போச்சு".. அன்னைக்கு விஜயகாந்த் கன்னத்தை மோடி கிள்ளினாரே.. இன்னிக்கு இப்படி ஆயிருச்சே!

விருதாச்சலத்தில் தோல்வியை தழுவி வருகிறது தேமுதிக

Google Oneindia Tamil News

சென்னை: விஜயகாந்த் முதன் முதலில் வென்ற விருத்தாசலம் தொகுதியில் தேமுதிக வெற்றி வாய்ப்பை இழந்துள்ளது.. நேற்று அந்த தொகுதியில் சீமான் கட்சியுடன் போட்டி போட்டு கொண்டும், முட்டி மோதிக் கொண்டும் இருந்ததை பார்க்கும்போது வேதனையாக இருந்தது.. இப்போது தேமுதிக டெபாசிட்டையே இழந்துவிட்டது..!

அன்னைக்கு விஜயகாந்த்தின் கன்னத்தை பிடித்து கிள்ளி பிரதமர் மோடி பாராட்டி தள்ளினார்.. அப்போது யார் இவர் என்று, வடமாநில மக்களே விஜயகாந்தை உற்று பார்த்தனர்.. அந்த அளவுக்கு தன் உழைப்பாலும், குணத்தாலும், கரிசன மனதாலும், உயர்ந்து நின்றவர் விஜயகாந்த்.

ஆனால், உடல்நலம் குன்றியதில் இருந்தே, விஜயகாந்த்துடன் சேர்ந்து அந்த கட்சியும் வலுவிழந்து போய்விட்டது.. பிரேமலதாவும், சுதீஷும் மொத்தமாகவே கட்சியை டேக்ஓவர் செய்து கொண்டனர்.. மக்களுடன் ஒன்றிணையாதது, மக்கள் பிரச்சனைகளை கையில் எடுக்காதது.. ஏடாகூட பேச்சு, வம்பிழுக்கும் பேட்டிகள், நிர்வாகிகளிடம் அதிருப்தி, என தேமுதிகவில் பரபரப்புகள் வெடித்து வந்தன.

 3 தொகுதிகளில் பாஜக லீடிங்.. '2'ல் டாப் கியர் - மொடக்குறிச்சியில் கடும் போட்டி 3 தொகுதிகளில் பாஜக லீடிங்.. '2'ல் டாப் கியர் - மொடக்குறிச்சியில் கடும் போட்டி

ஆனாலும், திமுகவும் சரி, அதிமுகவும் சரி தேமுதிகவை கண்டுகொள்ளவே இல்லை.. கூட்டணிக்காக பிரேமலதா காத்து கிடந்ததையும், கதறியதையும், புலம்பியதையும் தமிழகமே கண்டது.. இறுதியில் அமமுக, கூட்டணி கதவை திறந்துவைத்து, அவர்களை அழைத்து கொண்டது. இந்த விஷயத்தில் தினகரன் கோவில்பட்டியையும், நாயுடு சமூக ஓட்டுக்களை குறி வைத்தும், கூட்டணி கணக்கு போட்டதை மறுக்க முடியாது.

விருதாச்சலம்

விருதாச்சலம்

வேண்டி விரும்பி கேட்டுக் கொண்ட விருதாச்சலம் தொகுதியே பிரேமலதாவுக்கு ஒதுக்கப்பட்டது.. முதல்முறையாக போட்டியிடுவதால், வேறு எங்குமே பிரச்சாரத்துக்கு வரமுடியாது என்று சொல்லிவிட்டார் பிரேமலதா.. இதனால் ஒரே ஒரு பேச்சாளரை கொண்ட தேமுதிகவுக்கு இது சறுக்கலையே தந்தது.. வேட்பாளர்களுக்கு செலவுக்கு பணம் தராதது, சுதீஷூக்கு கொரோனா, இப்படி பல்வேறு பிரச்சனைகளும் இந்த பிரச்சார சமயத்தில் வெடித்தது.

விஜயகாந்த்

விஜயகாந்த்

ஆனாலும், விஜயகாந்த்தை வைத்து பிரச்சாரங்களை நடத்தினார்.. அவரால் பேச முடியவில்லை.. வெறும் விரல் சைகையினால் வாக்கு சேகரித்தார்.. விஜயகாந்த்தை வேனில் ஏற்றி ஊர்வலம் கொண்டு வந்ததை பார்த்து, அனுதாபம்தான் வந்ததே தவிர, அவை அனுதாப ஓட்டுக்களாக மாறவே இல்லை.. மாறாக, இந்த அளவுக்கு உடம்பு சரியில்லாதவரை இப்படி, பிரச்சாரத்துக்கு அழைத்து வர வேண்டுமா என்று கோபம்தான் மக்களிடம் எழுந்தது.

பின்னடைவு

பின்னடைவு

இப்போது விஷயம் என்னவென்றால், இதே விருதாச்சலத்தில் தேமுதிக டெபாசிட்டை இழந்துவிட்டது.. போராடி போராடி தோற்றுவிட்டது.. 3வது இடத்தில் தடுமாறி கொண்டிருக்கிறது.. 2006 தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் விருத்தாசலத்தில் போட்டியிட்டு, சுமார் 14,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார் விஜயகாந்த்.. !

 பாமக - காங்.

பாமக - காங்.

ஆனால், நேற்றைய தினம், நாம் தமிழர் கட்சியைவிடவும் பின்தங்கி கிடந்தது..ஓட்டு எண்ணிக்கையில் முதல் சுற்றிலிருந்தே காங்கிரஸ், பாமக இடையேதான் போட்டி நடந்து வந்தது.. யாருமே தேமுதிகவை கண்டுகொள்ளவே இல்லை.. இப்போது அந்த கட்சிக்கு அடித்தளமே ஆட்டம் கண்டுள்ளது.. எதிர்காலம் என்னாகுமோ என்ற கலக்கம் சூழ்ந்துள்ளது.

கூட்டணி கட்சி

கூட்டணி கட்சி

2016-ல் தேமுதிகவின் வாக்கு சதவிகிதம் 2.39-ஆகவும், 2019 எம்பி தேர்தலில் 2.19%-ஆகவும் குறைந்து, இன்று அக்கட்சி தன்னுடைய கொடி, சின்னத்தையே இழக்ககூடிய அபாயத்தில் உள்ளது.. 30 சதவீதம் வாக்குகள் வைத்திருக்கும் கட்சிக்கூட தேமுதிக அளவுக்கு கெத்து காட்டியதில்லை.. மிக குறைந்த அளவு வாக்கு வங்கியை வைத்து கொண்டு, கூட்டணிக் கட்சிகளையும் மதிக்காமல், பணம் ஒன்றே குறிக்கோளுடன் இவ்வளவு காலம் இருந்த நிலைப்பாட்டை தேமுதிக இனியாவது மாற்றி கொள்ளுமா என்று தெரியவில்லை...!

English summary
DMDK is struggling in Virudhachalam Constitution
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X