அவமரியாதைக்கு பதிலடி- அண்ணாமலை போனில் பேசி, நேரில் அழைப்பு தந்தும் புறக்கணித்த பிரேமலதா விஜயகாந்த்!
சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை போனில் பேசியும் பாஜக நிர்வாகிகள் நேரில் அழைப்பு தந்தும் ராமேஸ்வரத்தில் இன்று நடைபெறும் நடைபயண தொடக்க விழாவில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்க முடியாது என புறக்கணித்திருப்பது பாஜகவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளதாம்.
ராமேஸ்வரத்தில் இன்று மாலை தமது தமிழ்நாடு தழுவிய நடைபயணத்தை அண்ணாமலை தொடங்குகிறார். இந்த நிகழ்வில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்கிறார். அண்ணாமலையின் இந்த பாதயாத்திரை லோக்சபா தேர்தலை முன்வைத்துதான் நடைபெறுகிறது. இதனால் அனைத்து கூட்டணி கட்சிகளையும் ராமேஸ்வரம் நிகழ்ச்சிக்கு அழைத்தது பாஜக.

ஆனால் ஒவ்வொரு கூட்டணி கட்சியும் ஆளுக்கு ஒரு திசையில் போக்கு காட்டி வருவதால் அண்ணாமலையின் இந்த பாதயாத்திரை வெறும் பாஜக நிகழ்ச்சியாகவே நடைபெற இருக்கிறது. இதனை பாஜக தலைவர்கள் அதிர்ச்சியுடன் பார்த்து வருகின்றனராம்.
பாஜக நம்பிக்கை: ஒருகட்டத்தில் தேமுதிக பொருளார் பிரேமலதா விஜயகாந்தை பங்கேற்க வைக்கலாம் என முடிவு செய்ததாம் பாஜக. இதனையடுத்து விஜயகாந்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அண்ணாமலை பேசியிருக்கிறார். இதன் பின்னர் பாஜக மூத்த நிர்வாகி கரு.நாகராஜன், ராமேஸ்வரம் நிகழ்ச்சிக்கான அழைப்பிதழுடன் விஜயகாந்த் வீட்டுக்குப் போனார். போனிலும் பேசியாச்சு, நேரிலும் அழைப்பு கொடுத்தாச்சு.. எப்படியும் போக்கிடம் இல்லாத நிலையில் தேமுக தங்களை தேடி வரும்; ராமேஸ்வரம் நிகழ்ச்சியில் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்பார் என காத்திருந்தது பாஜக தலைமை.
புறக்கணித்த பிரேமலதா: ஆனால் திடீரென விஜயகாந்த், தேமுதிக மா.செ. மட்டும்தான் நிகழ்ச்சியில் பங்கேற்பார் என அறிவித்ததை பாஜக சற்றும் எதிர்பார்க்கவில்லையாம். இது தொடர்பாக விஜயகாந்த் தமது ட்விட்டர் பக்கத்தில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை @annamalai_k ராமேஸ்வரத்தில் இருந்து இன்று நடைபயணம் தொடங்குகிறார். அவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆதரவு கோரினார். மாநில துணை செயலாளர் திரு.கரு. நாகராஜன் நேரடியாக வந்து அழைப்பிதழை வழங்கினார். மரியாதை நிமித்தமாக தேமுதிக சார்பில், ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் திரு. சிங்கை ஜின்னா மற்றும் கழகத்தினர், இந்த நடைபயண துவக்க விழாவில் கலந்து கொள்கிறார்கள். அவரது நடைபயணம் வெற்றி பெற எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என கூறியிருந்தார். அதாவது ராமேஸ்வரம் நிகழ்ச்சியில் பாஜக எதிர்பார்த்தது போல பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்கவில்லை என்பதைத்தான் ட்விட்டர் பதிவு மூலமாக விஜயகாந்த் அறிவித்துவிட்டார்.
ஆறாத ரணம்: இது தொடர்பாக தேமுதிக வட்டாரங்களில் நாம் பேசிய போது, இப்போது ராமேஸ்வரம் நிகழ்ச்சிக்கு விழுந்து விழுந்து கூப்பிடுது பாஜக.. ஆனால் டெல்லியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்துக்கு அழைப்பு தரலையே.. எங்களைவிட சின்ன கட்சி, லெட்டர் பேடு கட்சிகளைக் கூட டெல்லிக்கு அழைச்சது பாஜக.. அவ்வளவுதூரம் அவமானப்படுத்தியது பாஜக. இதே தமிழ்நாடு தலைவர்கள் டெல்லியில் எடுத்து சொல்லி இருக்கலாம்தானே... தேமுதிகவை அழைக்காததால் ரொம்ப அசிங்கமாக போனது எங்களுக்குதானே.. இதை கட்சி மேலிடம் எப்படி எல்லாம் துயரத்துடன் சந்தித்திருக்கும்.. அதற்கு பதிலடிதான் அண்ணியார் ராமேஸ்வரத்துக்கு வர முடியாதுன்னு சொல்லிட்டாங்க.. இதைத்தான் கேப்டனும் ட்விட்டரில் அறிவிச்சிருக்காரு என ஆறாத ரணத்துடன் கொந்தளித்தனர்.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்?












Click it and Unblock the Notifications