DMDK Alliance:2 நாளில் முடிவெடுங்க.. இல்லாட்டி ஓடிருவோம்.. தயாராகும் நிர்வாகிகள்.. ஷாக்கில் தேமுதிக
Recommended Video

- கோயா
சென்னை: கூட்டணி விவகாரம் தொடர்பாக சட்டுப்புட்டென்று முடிவெடுக்காவிட்டால் சில முக்கிய நிர்வாகிகள் கட்சியை ிட்டு வெளியேறத் தயாராகி வருவதாக தேமுதிக வட்டாரத்தில் கலவர சூழல் உருவாகியுள்ளது.
கொஞ்சம் கூட வலுவே இல்லாத நிலையிலும் நம்மைத் தேடி அதிமுக வருகிறது, பாஜக வருகிறது. பியூஷ் கோயல் வீட்டுக்கே வந்து கெஞ்சுகிறார்.
ஆனால் இது எதைப் பற்றியும் கவலைப்படாமல் உடும்புப் பிடிவாதம் பிடித்து நிற்பது சரியல்ல என்று தேமுதிகவினர், சுதீஷ் மீதும் பிரேமலதா விஜயகாந்த் மீதும் கடும் அதிுப்தியாக உள்ளனராம்.

2 நாட்களுக்குள்
கூட்டணி விவகாரத்தில் அடுத்த 2 நாட்களுக்குள் முடிவு எடுக்கவில்லை என்றால், கடந்த சட்டமன்றத் தேர்தலில் கூண்டை விட்டு பறந்த சந்திரகுமார், எஸ்.ஆர்.பார்த்திபனை போல் இந்த முறையும் சிறகு முளைத்து சிலர் பறக்க நேரிடும் என்ற நிலை உருவாகியுள்ளதாம்.

தலைமை அதிர்ச்சி
இந்த தகவல் தேமுதிக தலைமையை அதிர வை��்துள்ளதாம். இதை நடக்காது என்று சொல்லவும் முடியாது. இதேபோன்ற சூழலில்தான் சந்திரகுமார், பார்த்திபன் போன்ற நல்ல நிர்வாகிகளை தேமுதிக இழந்தது. அதன் பலனை இன்று வரை அது அனுபவித்தும் வருகிறது.

நல்ல நிர்வாகிகள் இல்லை
விஜயகாந்த்துக்குப் பிறகு நல்ல நிர்வாகிகள் இதுவரை தேமுதிகவுக்கு இல்லை. கள தளபதிகள் இல்லை. இது தேமுதிகவுக்கு மிகப் பெரிய பலவீனம். ஆனால் அதை தலைமை இன்னும் கூட உணராமல் இருப்பதாக புலம்புகின்றனர் தேமுதிகவினர்.

அதிமுகவிடம் சரணடைக
அதிமுக அல்லது பாஜக யாராவது ஒருவரிடம் தேமுதிக சரணடைந்தே ஆக வேண்டிய நிலை தற்போது வந்து விட்டது. இதைச் செய்தால்தான் இருக்கிற கட்சியையும் காப்பாற்ற முடியும் என்ற ஆதங்கம் தேமுதிகவினர் மத்தியில் வந்துள்ளதாம்.

அதிரடியில் தினகரன்
இதனிடையே விஜயகா��்தை வளைத்துப் போடும் அசைன்மெண்ட்டில் டி.டி.வியும் ஈடுபட்டுள்ளாராம். அது எந்த அளவு டி.டி.வி.க்கு கைகொடுக்கும் என்பது இன்று மாலைக்குள் தெரிந்து விடும் என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications
