திமுகவின் அடுத்த அதிரடி.. கொமதேகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு.. கையெழுத்தான ஒப்பந்தம்!

Subscribe to Oneindia Tamil

சட்டசபைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. கொமதேக சார்பாக அக்கட்சியின் தலைவர் ஈஸ்வரன் தலைமையிலான குழுவினர் திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

கடந்த சட்டசபைத் தேர்தலில் கொமதேகவுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருந்தது. திருச்செங்கோடு, பெருந்துறை, சூலூர் தொகுதிகளில் போட்டியிட்ட கொமதேக, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட போதும் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றது. அதிலும் திருச்செங்கோடு தொகுதியில் மட்டுமே வென்றது. இந்த நிலையில் இந்த தேர்தலில் திமுக தரப்பில் கொமதேகவுக்கு 2 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

DMK Alliance Kongunadu Makkal Desiya Katchi

கடந்த முறையை காட்டிலும் இம்முறை ஒரு தொகுதி குறைக்கப்பட்டுள்ளது. இதன்பின் அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் கொமதேக தலைவர் ஈஸ்வரன் இடையில் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்பின் கொமதேக தலைவர் ஈஸ்வரன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், வரும் சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடுகிறோம் என்பதை உறுதி செய்துள்ளோம்.

கொங்கு மண்டலத்தில் பெருவாரியான தொகுதிகளில் வெல்ல வேண்டும் என்று எங்கள் தரப்பில் கூறினோம். திமுக தரப்பில் புதிய கட்சிகள் கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. அவர்களின் சூழ்நிலை குறித்து எடுத்து கூறினார்கள். அதற்கு தகுந்தாற் போல் அனைத்து கட்சிகளும் தொகுதி எண்ணிக்கையை குறைத்து கொள்ள வேண்டும் என்று எடுத்து கூறினார்கள்.

தேர்தல் வெற்றியே நோக்கம் என்ற நல்ல நோக்கத்தில் பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்து, கொமதேக - திமுக இடையிலான ஒப்பந்தம் கையெழுத்தானது. நானும், முதல்வர் ஸ்டாலினும் தொகுதி உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளோம். அந்த 2 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறோம். கடந்த 5 ஆண்டுகளில் நான் மட்டுமே கொமதேக சார்பாக சட்டசபையில் பணியாற்றினேன்.

அடுத்த 5 ஆண்டுகளில் கொமதேக 2 எம்எல்ஏக்கள் உடன் பணியாற்றுவோம். அதற்கான கள நிலவரம் சாதகமாக உள்ளது. என்னென்ன தொகுதி என்பதை பின்னொரு நாட்களில் அறிவிக்கப்படும். தொகுதி எண்ணிக்கை பேசி முடிக்கப்பட்டு, தொகுதிகள் அடையாளம் காணப்படும். கொங்கு நிலவரம் திமுக கூட்டணிக்கு சாதகமாக அமைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+