சிபிஎம் கட்சிக்கு கூடுதல் தொகுதிகள்.. ஓரிரு நாட்களில் தொகுதி உடன்பாடு முடியும்.. சண்முகம் அப்டேட்!
சென்னை: திமுக கூட்டணியில் சிபிஎம் கட்சிக்கு கூடுதல் தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலினுடன் ஆலோசித்துவிட்டு பதில் அளிப்பதாக திமுக தலைமை கூறியதாகவும், காங்கிரஸ் கட்சியுடன் எங்களுக்கு எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 5 வாரங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், திமுக - சிபிஎம் இடையிலான 3ஆம் கட்ட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது. திமுக தரப்பில் அமைக்கப்பட்ட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக் குழுவும், சிபிஎம் சார்பாக அமைக்கப்பட்டக் குழுவும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. சுமார் ஒரு மணி நேரம் வரை ஆலோசிக்கப்பட்டது.

கடந்த தேர்தலில் சிபிஎம் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில் 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த முறை திமுக கூட்டணியில் கூடுதலாக சில கட்சிகள் இணைந்திருப்பதால், கூட்டணி கட்சிகளும் தொகுதிகளை விட்டுக் கொடுக்க வேண்டும் என்று திமுக கோரிக்கை வைத்து வருகிறது. கூடுதலாக தொகுதிகளை ஒதுக்க முடியாது என்றும் மறைமுகமாக பேசி வருகிறது.
இந்த நிலையில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு பின் சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், திமுகவுடன் 3வது கட்டமாக சிபிஎம் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. கடந்த தேர்தலை விடவும் கூடுதல் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம். நிறைய கட்சிகள் கூட்டணியில் இருப்பதால், பேச்சுவார்த்தை முடிப்பதில் சிரமம் உள்ளது.
ஏனென்றால் ஒவ்வொரு கட்சிகளுடனும் தனித்தனியாக பேசி முடிக்க வேண்டி இருக்கிறது. எங்கள் கோரிக்கைகள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலினிடம் பேசி இரவு கூறுவதாக சொல்லி இருக்கின்றனர். ஆகவே, மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும். சுமூகமாக தொகுதி பங்கீடு செய்வதற்கான முயற்சிகள் இரு தரப்பிலும் இருக்கிறது. அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தையில் இது முடிவடையும் என்று நம்புகிறோம்.
தேர்தலுக்கு இது போதுமான அவகாசம் இருக்கிறது. அடுத்த ஓரிரு நாட்களில் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு முடிவடையும் என்று கருதுகிறோம். புதிய கட்சிகள் கூட்டணிக்கு வந்துள்ளதால், குறைவான தொகுதிகளில் போட்டியிடுங்கள் என்று கோரிக்கை வைத்தனர். ஆனால் எங்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்று கூறி இருக்கிறோம். இப்படியான சூழலை தவிர்க்க முடியாது என்பதை உணர்ந்துள்ளோம்.
காங்கிரஸ் கட்சியுடன் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.. ஒவ்வொரு கட்சியும் திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறது. அவரவர் பலத்திற்கு ஏற்ப தொகுதிகளை பெறுகிறார்கள். சிபிஎம் அதன் பலத்திற்கு ஏற்ப தொகுதிகளை பெற முயற்சிக்கிறோம். இது Dead Lock என்ற பேச்சிற்கே இடமில்லை. மீண்டும் இன்று இரவே கூட பேச்சுவார்த்தை நடக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications