மீண்டும் ஆர்ப்பாட்டம்.. நெல் ஈரப்பத விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் முடிவு
சென்னை: நெல் கொள்முதல் ஈரப்பத அளவின் தளர்வை நிராகரித்த மத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணிக் கட்சிகள் போராட்டம் அறிவித்துள்ளன. டெல்டா விவசாயிகளை வஞ்சிக்கும் ஒன்றிய அரசுக்கு எதிராக நவம்பர் 23 ஆம் தேதி தஞ்சையிலும், 24 ஆம் தேதி திருவாரூரிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் முதல்வர் ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில், தமிழ்நாடு குறுவை பருவத்தில் அதிக நெல் உற்பத்தி மற்றும் கொள்முதலில் சாதனை படைத்துள்ளதையடுத்து விவசாயிகளின் நலன் கருதி நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 17 சதவிகிதத்திலிருந்து 22 சதவிகிதமாக உயர்த்தி விரைந்து ஆணை வழங்கிட வேண்டும் என்று கடிதம் எழுதி இருந்தார்.

கோவை வந்த பிரதமர் மோடி, தென்னிந்திய வேளாண் கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்றார். விவசாயிகளுடன் பல்வேறு ஆலோசனை மேற்கொண்ட பிரதமர் மோடி, பின்னர் விவசாயம் மற்றும் அடுத்தகட்ட இலக்குகள் குறித்து பேசி இருந்தார். குறிப்பாக இயற்கை விவசாயம் தொடர்பாக மோடி பல்வேறு கருத்துக்களை அறிவுறுத்தினார். இந்த நிலையில் தமிழக அரசு தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளது.
இதற்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. தமிழக முதல்வர் ஸ்டாலின், "உழவர்களிடையே பிரதமர் மோடி உரையாற்றிய ஈரம் காய்வதற்குள் அடுத்த துரோகம்! கோவைக்கான மெட்ரோ ரயில் திட்டத்தை நிராகரித்துவிட்டு, அதே கோவைக்கு எந்தவிதமான உறுத்தலும் இன்றி பிரதமர் மோடி வந்து சென்ற ஈரம்கூட இன்னும் காயவில்லை. அதற்குள் நெல் கொள்முதலில் ஈரப்பதம் தளர்வு தொடர்பான நமது கோரிக்கையை நிராகரித்துள்ளது மத்திய அரசு." என விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், நெல் கொள்முதலில் ஈரப்பதம் தளர்வு கோரிக்கையை நிராகரித்த மத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் போராட்டம் அறிவித்துள்ளன. இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், "கொள்முதலில் ஈரப்பதம் தளர்வு தொடர்பான தமிழ்நாட்டின் கோரிக்கையை நிராகரித்துள்ளது ஒன்றிய பாஜக. அரசு. கனமழை காரணமாக ஈரப்பதம் அதிகமாகியுள்ள நெல்லினைக் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற தமிழ்நாட்டின் குரல் பிரதமரின் காதுகளுக்குக் கேட்கவில்லை.
கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்குக் கோரப்பட்ட நிவாரணமும் அளிக்காமல், ஈரப்பத அளவையும் அதிகரிக்காமல் தமிழ்நாட்டின் டெல்டா விவசாயிகளை வஞ்சித்து வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் மத்திய பா.ஜ.க அரசைக் கண்டித்தும், தமிழ்நாட்டின் கோரிக்கைகளை உடனடியாக மறுபரிசீலனை செய்து வேளாண் பெருங்குடி மக்களுக்கு மத்திய அரசு நன்மை செய்திட வேண்டும் என வலியுறுத்தியும் 23.11.2025 அன்று தஞ்சாவூரிலும், 24.11.2025 அன்று திருவாரூரிலும் காலை 10.00 மணியளவில் 'மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி' சார்பில் "மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்" நடைபெறும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications